இறைஇயேசுவின் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
அன்பின்மடல் தனது 20வது கிறிஸ்மஸ் மலரை உங்களோடு பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றது.
கடந்த ஆண்டுத் தொற்று நோயின் தாக்கத்திலிருந்து நம்மை வழிநடத்திய இறைவனுக்கு நன்றி கூறும் வேளையில் நம்மைவிட்டுப் பிரிந்த உறவுகளை நினைவு கூர்வோம். அவர்கள் மூலம் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளையும் நன்றியோடு நினைவு கூர்வோம்.
இயேசுவின் பிறப்பு ஒரு நகரத்தில் இல்லமால் சிறிய ஊரில் நடைபெற்றதை யாரும் ஏதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவரின் பிறப்புச் சமுதாயத்தில் கடைநிலையிலிருந்த இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களும் எந்த ஏதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் அறிவிக்கப்பட்டதைக் காண விரைந்து வந்து, அந்த அற்புத நிகழ்வைக் கண்டு மகிழ்ந்து, இறைவனைப் புகழ்ந்துப் பாடிக் சென்றார்கள். நாமும் நமக்கும் அறிவிக்கப்பட்ட நற்செய்தி மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம். இறையாசீர் பெற்றுக்கொள்வோம்.
இந்தக் கிறிஸ்மஸ்மலர் சிறப்புறத் தங்கள் படைப்புகளைத் தந்து உதவி அனைத்து எழுத்தாளர்களும், எங்களுக்கு ஊக்கமளித்த ஊக்குவிப்பாளர்களும், இணையதளப் பார்வையாளர்களான உங்களுக்கும் எங்கள் அன்புக் கலந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
என்றும் அன்புடன்
நவராஜன்.