ஆண்டவரே என் ஓட்டுநர்!

ஆண்டவரே என் ஓட்டுநர்! எனக்கேதும் குறையில்லை!!

பாதுகாப்பான பாதைகளில் எனை அழைத்துச் செல்கின்றார்; ஏற்ற இடத்திற்கு என்னை அவர் இதமோடு கொண்டு சேர்க்கின்றார்.

திருப்பங்கள் வரும் போது,தமது திறனை வெளிப்படுத்தி, நெருக்கடி நிறைந்த சாலைகளை அவர் நேர்த்தியாய் கடக்கின்றார்.

இருள் சூழ்ந்த நேரமும், சரிவான சாலைகளும் என்னை அச்சுறுத்தாது; ஏனெனில் நீர் என்னோடு இருக்கின்றீர். உமது ஒப்பில்லா கருணையும், அற்புத ஆற்றலும் எனது பயணத்தை இனிதாக்கும்.

காண்போர் வியந்திட, பாதையில் ஏற்படும் குறுக்கீடுகளை எளிதாய் கடந்து வாகனத்தை ஓட்டி செல்கின்றீர். வாகனத்தை நீர் செலுத்தும் பாங்கும் நேர்த்தியும், பாதுகாப்பின் கொடுமுடியை தொடுகிறது.

கடந்து செல்லும் வழிகளில் எல்லாம், பாதுகாப்பும் பராமரிப்பும் விரைவும், என் பயண காலம் முழுவதும் எனக்கு கிட்டும்.

நானும் என்றென்றும் ஆண்டவரின் வாகனத்தில், களிப்போடு பயணம் செய்வேன்.

(23 ம் திருப்பாடலை தியானித்து, திரு ஆண்டோ வின்சென்ட் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய புகழ் பாடலின் தமிழாக்கம்)

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021