மீட்பர் பிறந்துள்ளார் எனக்காக

திருமதி. ஜோதி ஜெரால்ட்

கிறிஸ்து பிறப்பின் முக்கியம் என்ன? இயேசு எதற்காகப் பிறந்தார் என்று நமக்குத் தெரியும். மீட்பு அளிப்பதற்கு பிறந்தார். எதிலிருந்த மீட்பு? கடவுளுக்கும், நமக்கும் பாவம் என்னும் பகை இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். இந்த மரணத்தை இயேசு ஏற்றுக்கொள்ள உலகிற்கு மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் மனிதனை தன் சாயலிலும் உருவிலும் படைத்தார். அவன் அறியாமையால் தன் மகிமையை சாத்தானிடம் இழந்து போனான். அவனுக்கு மறைக்கப்பட்டதை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை. அவனுக்கு ஆன்ம மரணத்தைக் கொண்டு வந்தது. அதனால் கடவுளின் தூய அன்பு திரிந்து விட்டது. பாவம் பிறந்துவிட்டது.

கடவுள் ஏன் பாவத்தை வெறுக்கிறார்? அது தீமையானது. அது கடவுளிடமிருந்து மனிதனைப் பிரிக்கிறது. அதைத் தொடர்ந்து எல்லா அழிவும் வந்துவிட்டது. கடவுள் மனிதனை அந்த பாவநிலையிலே விட்டுவிட அவரது பேரன்பு விரும்பவில்லை. மீட்டுக்கொள்ள ஆசைப்பட்டது. தன் ஓரே மகனை பலியாக்கினார். நம் பாவம் கழுவமுடியும். அதனால் இயேசு உலகில் மனிதனாக வந்தார்.

லூக்கா 2:10 வானதூதர் அவர்களிடம் "அஞ்சாதீர்கள். இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்." என்ன நற்செய்தி? மீட்பர் பிறந்துள்ளார் எனக்காகப் பிறந்துள்ளார். எனது பாவத்திலிருந்து, சாபத்திலிருந்தும், நோயிலிருந்தும், கட்டுகளிலிருந்தும் விடுதலை கொடுக்கும் நற்செய்தி.

மத்தேயு 1:21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார், அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்றார்.

லூக்கா 2:13,14 விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று கடவுளைப் புகழ்ந்தது. ஆம் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள பகை நீங்குவதால் அமைதி, சமாதானம் உண்ர்கிறது என்ற நற்செய்தி.

மத்தேயு 10:34-36 "நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்லஇ வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்." கடவுளின் அன்பை புரிந்து கொண்டவர்களுக்கும், கடவுளின் அன்பைப் புரியாதவர்க்கும் இடையில் ஏற்படும் போரட்டத்தில் கடவுளின் அன்பைக் காட்டாவிட்டால் சமாதானம் வராது. ஆனால் அன்பைக் காட்டும்போது தூதர் கூறிய இறைஅமைதி நமக்குள்ளும், பிறருக்குள்ளும் வந்தவிடும். அப்பொழுது அங்கு பகை இல்லை. நான் இயேசுவின் சாயலாக மாறுகிறேன். அப்பொழுது அங்கு சண்டை, பகை இருக்காது. அமைதி இருக்கும். கடவுளின் அன்பை அனுபவித்தவர்கள் பிறரிடம் கடவுளின் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

யோவான் 13:34 "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இயேசுவின் இரண்டாவது வருகை (பிறப்பு) கதவருகில் உள்ளது.

மத்தேயு 5:9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். எனவே திறந்த உள்ளத்தோடும் செபத்திலும், நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் விழிப்பாய் இருப்போம். ஆயத்தமாவோம்.. கிறிஸ்துவின் வாசனையாக மணம் வீசுவோம்...

We wish you Merry Christmas
And
A Happy New Year!

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021