அன்னையின் தாலாட்டு

திரு. இரான்சம் அமிர்தமணி

கண்மணி நீ உறங்கு - எழில்
கமலமே உறங்கு
விண்மணியே தேவக் குழந்தையே
விழிகள் மூடி நீ உறங்கு

ஆரிராராரோ ஆரி ராரிராராரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ

1. முல்லை மலரின் மென்மை நீ
முழுநிலவின் தண்மை நீ
புவி அறியா புதுமை நீ
பொன்னில் வார்த்தப் பதுமை நீ
அழகின் திருவடிவே - தெய்வ
அரும்பே நீ உறங்கு

2. அமுதத் தேனின் சுவையும் நீ
அமரர் போற்றும் இறையும் நீ
அருள்நெறியின் மறையும் நீ
கருணை பொழியும் மழையும் நீ
அருளே அன்பின் பொருளே - எங்கள்
அரசே நீ உறங்கு

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021