மனிதம் புனிதமாகவே
மறைபொருள் மனிதனானதே!

பிலோமினா அமலன், ஜெகன் மாதா ஆலயம் திருச்சி.
உலகைப் படைத்த இறைவனே 
உலகில் வந்து பிறந்தாரே 
உன்னத நிலை நாம் பெறவே 
உறவின் பாலமாய் அமைந்தாரே 
Happy Happy Christmas! 
Merry Merry Christmas!

பார்தனிலே ஒடுக்கப்பட்டோர்க்குப் 
பாசமழைதனைப் பொழிந்திடவே 
பரம மைந்தன் மனமுவந்து 
பாமரனாய்ப் பிறந்தாரே!

அலகை வலையில் வீழ்ந்தோரின் 
அடிமைத் தளையில் வாழ்வோரின் 
மீட்பின் விலையாய்த் தமைத் தரவே 
அன்பர் இயேசு பிறந்தாரே!

மன்னிப்பின் மாண்பாய் மண்ணுலகில் 
மகிமை மன்னன் பிறந்தாரே 
தன்னை இழந்து தரணி ஆள 
தன்னிகரில்லான் பிறந்தாரே!
Happy Happy Christmas! 
Merry Merry Christmas! 

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021