1. பாவிகள் அனைவருக்கும் மீட்பராக பாவம் அனைத்தையும் மன்னிப்பவராக விண்ணிலிருந்து எங்கள் இதயம் வந்தீரே நானும் உம்மைப் போல் வாழ அழைத்தீரே! 2.உறவாக உயிராக எங்களில் இணைந்து நாங்களும் உம் அன்புப் பிள்ளைகள் என நினைத்து பாவம் நிறைந்த இவ்வுலகில் பிறக்க எங்கள் இதயத்தைத் தேர்ந்தெடுத்தீரே! 3. மரியின் மடியில் பிறந்த நீர் வாயற்ற உயிர்களும் உம்மை வணங்க கடவுளால் அர்ச்சிக்கப்பட்டீர் பாவம் போக்கும் பலியாக பிறந்த நீர் - உறைவிடம் என்னும் எங்கள் இதயம் தேர்ந்தெடுத்தீர்! 4. அருளைப் போக்கும் ஒளியாய் எங்கள் வாழ்வின் துணையாய் - நீர் என்றும் எங்களோடு இணைந்திடுமே எங்கள் இதயத்தில் பிறந்து எங்கள் வாழ்வை மாற்றிடுமே 5. மண்ணிலே விண்மீனாய் உதித்தீரே எங்கள் கண்ணீர் கவலையைப் போக்கப் பிறந்தீரே இருளில் இருக்கும் எங்கள் வாழ்வை ஒளிக்குக் கூட்டிச் செல்ல விண்ணிலிருந்து எங்கள் இதயத்தில் பிறக்கத் திருவுளமானீரே! 6.சமத்துவம் நிலைத்திருக்கப் பிறந்தீரே மனித நேயத்தைக் காத்திட உதித்தீரே மாந்தர் கண்ணீர் துடைத்திடவே மண்ணில் இன்பம் பெருகிடவே மாறாத தேவ குழந்தை - எங்கள் இதயம் தேடி வந்தீரே! WISH YOU HAPPY CHRISTMAS
அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021