இறைவன் பிறந்த இரவு நேரம்
இறைவன் பிறந்த இரவு நேரம்
இனிய சங்கீதம்
வானில் இருந்து வையகம் எங்கும்
வந்து அலை மோதும் !
குளிரும் இடை வீட்டிலே - தெய்வ
குழந்தை முகம் காணவே
கூடும் ஆயர்களின் - மனதில்
கோடி ஆனந்தமே !
அன்பினை இழந்த மனிதர்க்கு இறைவன்
அன்பே நிழலானது
மழலையின் சிரிப்பில் மலரும் புல்விரிப்பில்
நிழலும் நிஜமானது !
விழிகள் நனைகின்றதே - புதிய
விடியல் தெரிகின்றதே
ஒளியின் மைந்தன் கண்டு -உலகம்
உவந்து மகிழ்கின்றதே !
உள்ளங்கள் எல்லாம் ஒளிர்ந்திடவே நல்
உறவின் விளக்கேற்றுவோம்
இல்லங்கள் தோறும் இந்த நன்னாளில்
இறையன்பை பரிமாறுவோம் !
புகழ்ந்து பண்பாடுவோம் - இறைவன்
புவியில் பிறந்தாரம்மா
மகிழ்ந்து கொண்டாடுவோம் - நமது
மனதில் நிறைந்தாரம்மா !

இரன்சம் -சென்னை -24