கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம்.


   
தேதி ஒவ்வொருநாளும், பாரம்பரியமாக டிசம்பர் 25.
ஆனால் அவர் எப்போதும் நம்முடன் இருப்பதால் நாம் வசதிக்கு தகுந்தாற்போல்
நேரம் நீங்கள் எப்போது தயாரோ அப்பொழுது.
தயவுசெய்து நேரத்திற்கு வரவும்.
இல்லையேல் கேளிக்கைகளை அனுபவிக்கமுடியாது.
இடம் உங்கள் இதயவீட்டில்...
அவர் உங்களை அங்கு சந்திப்பார்.
அவர் கதவை தட்டுவதை கேளுங்கள்...
அன்புடன் அவரை உள்ளே அழைத்து வாருங்கள்....
உடை நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே வரவும்.
அவர் உங்களை அழகுப்படுத்துவார், நீங்கள் அவருடன் கடைசிவரையில் இருக்கும் பட்சத்தில் உங்கள் அனைவரையும் வெண்நிற ஆடையாலும், மணிமுடியாலும் அழகுப்படுத்தி மகிழ்வார்.
அனுமதி இலவசம்.
அதற்கான கட்டணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டார்.
இதை நீங்கள் கொடுக்கமுடியாது.
ஏற்கனவே அவர் தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து விட்டார்.
அனுமதி சீட்டை மட்டும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உணவு புதிய திராட்சை இரசம்,ரொட்டி, வாழ்வு தரும் நீர்
இதனைத் தொடர்ந்து மறுமையில் வாக்களித்த இரவு உணவு.
பரிசு பொருட்கள் அருமையான இவ்வுலக வாழ்வு.
திரும்ப தருவதில் மிகவும் தாராளமானவர்.
பொறுத்திருந்து பார்க்கவும் உங்களுக்காக அவர் வைத்திருக்கும் பரிசு பொருளை!!
பொழுதுபோக்கு அக்களிப்பு, அமைதி, உண்மை, ஒளி,
வாழ்வு உண்மையான மகிழ்ச்சி, இறைவனோடு உறவு,
மன்னிப்பு, அதிசயங்கள், குணமளித்தல்,
ஆற்றல், முடிவில்லாத மறுவாழ்வு
மற்றும் பல பல.....
அழைப்பினை ஏற்றுக்கொண்டால் அவர் உங்களை முன்பாகவே தேர்ந்து கொண்டதால் உங்களுக்காக ஓர் இடம் தயாராக வைத்துள்ளார்.
வாழ்வு புத்தகத்தில் உங்கள் நண்பர்கள் பெயர்களையும் சேர்த்து எழுதியுள்ளார்.
எனவே எல்லோரையும் உடன் அழைத்து வாருங்கள்.
நன்றி... இந்த பெரிய விருந்தினைத் தரப்போவது அவரின் குழந்தைகளாகிய நாம் தான்.
இந்த அழைப்பை இதனை படிக்கும் அனைவரும் நமது நண்பர்களுக்கு தெரிவிக்கவும்.
happy brithday JESUS
இணையத்தில் படித்தது.