கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்



கிறிஸ்மஸ்-சிறப்பு செய்தி -ஒலி வடிவில்




கிறிஸ்மஸ் சிறப்பு செய்தி வழங்குபவர்
அருட்தந்தை சுரேஸ்

உதவி பங்கு தந்தை , பாத்திமா அன்னை ஆலயம்,
கோடம்பாக்கம், சென்னை 24
செய்தியைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.


.
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் நிகழ்வு கிறிஸ்துமஸ்.
தீ நடுவே நீ நடந்தாலும், ஆழ்கடலைதான் கடந்தாலும் நான் உன்னோடு
இருப்பேன் என்ற வாக்கு நிறைவேற்றப்பட்ட நாள்.
மகிமையின் கீதம் மண்ணில் மலர்ந்த நாள்.
இறைவனால் ஆகாதது எதுவுமில்லை என்பது உறுதிசெய்யப்பட்ட நாள்.
தந்தையாகிய இறைவனின் பெருமையும், புகழும் மகிமையும் நிலைநாட்டப்பட்ட நாள்.
மனிதனை மீட்டும் வல்லமை இறைவனுக்குண்டு என எல்லா இனத்தவர் ஏற்றுக் கொண்ட நாள்.
மண் உலகை அன்பு செய்வதை உறுதிபடுத்த தன்மகனையே தாரை வார்த்த நாள்.


இன்றைய காலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு பல தரப்பட்ட தயாரிப்புகளில் நாம் ஈடுபடுகிறோம்.


புத்தாடை அணிவது, பலகாரங்கள் செய்வது, வீட்டை அழகுபடுத்துவது, குடில் அமைப்பது. வாழ்த்து அட்டை அனுப்புவது.


கிறிஸ்துமஸ் வந்தாலே அதிகம் அவதிப்படுவது நடுத்தர வர்கத்தினர்கள் தான். வாடகை வீட்டில் வாழ்ந்து, வாரம் ஒருமுறை சம்பளம் வாங்கி, மளிகை கடை, துணிக்கடை இனிப்புக்கடை என்று உள்ள நிலுவைக்கே பத்தாது சம்பளம். கடன் வாங்கித் திருவிழா கொண்டாடும் தம்பதியரும் எண்ணிலடங்காதவை.


இத்தனை இன்னல்களுக்கும் மத்தியிலும் இக்கொண்டாட்டம் தரும் மனநிறைவு மகிழ்ச்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.


மின்னும் ஒளி விளக்குகளுடன் நள்ளிரவில் புத்தாடை அணிந்து திருப்பலி, வாழ்த்துக்கள் பரிமாற்றம், இரவு முழுவதும் குறுந்தகவல் அலைபேசியில் அனுப்புதல் என்று மகிழ்வின் வெளிப்பாடுகள், கிறிஸ்துமஸ் எப்போ வரும் அப்போதாவது பணம் படைத்து நல்ல குணம் நிறைந்தவர்களில் தர்மத்தால் சுவையான உணவுகள் கிடைக்கும், கிழியாத ஆடைகள் கிடைக்கும், நாள் முழுவதும் ஓடிவிளையாட பொருள்கள் கிடைக்கும் என்று அனாதை இல்லங்களில் வாழ்வோர் காத்திருக்கின்றனர்.


ஆடம்பரக் கொண்டாட்டத்தால் அது ஆரம்பமான கதையை மறந்தவர்கள் எண்ணிலடங்காதோர்.


ஒரு நிமிடம் கிறிஸ்து பிறந்த இரவை நினைத்துப் பார்ப்போம். கொட்டும் பணியில் கொள்கை வேந்தன் மாட்டுக்கொட்டிலில் பிறந்தார்.


நிறைமாத கர்ப்பவதியின் பயணம், அதுவும் கழுதையின்மேல் அடிவயிற்றில் பாலன் யேசுவை சுமந்து! நீதிமான் என வர்ணிக்கப்படும் யோசேப்பு தன் மனைவியின் மறுபிறப்பிக்கு மனைதர இயலாமல் தன் மடி தந்தார். நடு இரவில் நண்பன் ஒருவனின் தேவைக்கு அல்ல, தொந்தரவுக்கு, ஒருவன் உதவுவான் எனும் பாடம் உருவான நேரம் இது.


விலங்குகளில் பசி ஆற்றி பலம் தரும் இடம் தீவனத்தொட்டி. மனிதனின் பாவம் போக்கி, நலம் தரும் உணவாக தன் உயிர் உடலை தரப்போவதை முன்னறிவிக்க அத்தொட்டியில் கிறிஸ்து கிடத்தப்பட்டார்.


கடவுளின் சுவாசக் காற்றால், உயிர் பெற்ற மனிதன் இறைமகனுக்கு உறைவிடம் தரவில்லை. கிறிஸ்துவின் சுவாசத்தில் நிரம்பிய தொழுவத்தில் விலங்குகளின் மூச்சு கிறிஸ்துவின் குளிர் போக்குகிறது.


இப்படி பார்க்கும் மனிதர் எல்லாம் துன்பத்தில் இருக்க, பின் யாருக்கு கிடைத்தது மகிழ்ச்சி, உலகில் நல்மனம் கொண்டோர்க்கு அமைதி, மகிழ்ச்சி, சமாதானம் உண்டாகுக என்ற வானவர் கீதம் கேட்ட எளிமையின் வடிவமாக திகழ்ந்த பாமர இடையர்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி.


முழு உள்ளத்தோடு, ஆன்மாவோடு, ஆற்றலோடு, சக்தியோடு இறைவனை அன்பு செய்த அறிஞர்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி.


கிறிஸ்துமஸ் தரும் மகிழ்ச்சியும் சமாதானமும் நமக்கு பகிர்த்து கொள்ளப்படும்போது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பகிர்ந்து கொள்ளப்படும் துன்பம் பாதியாகும் என்பதை நினைவூட்டுகிறது. கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை, தேவைகளில் இருப்பவர்க்கு உதவுவதில், ஆபத்திலிருப்போருக்கு, அனாதைகளுக்கு அடைக்கலம் தருவதில், சிறைப்பட்டோரை சந்தித்து நோயிற்றோருக்கு ஆறுதல் அளிப்பதில் வாழ்ந்து காட்டி, கடவுளின் பெயரால் அவரின் பிள்ளைகளுக்கு நம் சகோதர சகோதரிகளுக்கு உதவும் எவரும் கைமாறு பெறாமல் போவதில்லை என்பதை உணர்ந்து வாழ கிறிஸ்துமஸ் தரும் அழைப்பை ஏற்று வாழ்வோம்.


மாட்டுக்குடியில் பிறந்த பாலன் நம் இதயக்குடிலில் பிறக்க இறையாசீர் வேண்டுவோம்.


merry xmasகிறிஸ்மஸ் சிறப்பு செய்தி வழங்குபவர்
அருட்தந்தை சுரேஸ்

உதவி பங்கு தந்தை , பாத்திமா அன்னை ஆலயம்,
கோடம்பாக்கம், சென்னை 24
செய்தியைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.