prayer

கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!

சிறப்பு மலர் பொருளடக்கம்

அன்புடன் வாழ்த்து மடல்

அன்புடையீர்!
இறை இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!”
இடையர் கேட்ட நல்வாழ்த்தினையே
நாமும் இன்று குடிலில் கேட்கின்றோம்
குழந்தை இயேசுவும் நம்மை இன்று
குழந்தையாக மாற அழைக்கின்றார்”

கிறிஸ்துமஸ்‌ விழா என்பது இயேசு இறைத்‌ தந்தையின்‌ நெஞ்சத்திலிருந்து புறப்பட்டு, அன்னை மரியாவின்‌ மடியில்‌ குதித்து தவழ்ந்த நிகழ்வைக்‌ கொண்டாடுவது. நாமும்‌ குழந்தைக்‌ குரிய துணிச்சலோடு இறைவனிடம்‌ விளையாடி, அவரைத்‌ தொட்டு மகிழ்ந்து, அவரது கனிவிரக்கத்தைப்‌ பெறுவோம்‌.

அன்பின்மடல் பார்வையாளர்களுக்கும்‌, நண்பர்‌களுக்கும்‌, இந்தக் கிறிஸ்மஸ் மலர் சிறக்க கட்டுரைகளும், கதை, கவிதை தந்து உதவிய அனைத்து ஏழுத்தாளர்களுக்கும் எம் இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகுக...

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்‌ எமது கிறிஸ்து பிறப்புப்‌ பெருவிழாவின்‌ வாழ்த்துக்களைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. வரும் ஆண்டு அனைவருக்கும் அனைத்திலும் சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகிறேன்.

என்றும்‌ அன்புடன்
ச.நவராஜன்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு கிறிஸ்மஸ்மலர்