கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
பாலனின் பார்வை தீர்த்தம்
கவிஞர் வே.தமிழ்தாசன் சென்னை-4
மார்கழி மாதத்து மழை போல சில்லென்ற சீதனமாய் நட்ட நடு நள்ளிரவில் நாசரேத்து நாயகன் கண்மலர் திறந்தார். காசினியில் பிறந்தார். வரலாறை வகிடெடுக்க வாஞ்சையாய் காலம் சனித்த வெயில் விதையாக இருட்டை நீக்கவல்ல பகலை ஆக்கவல்ல அகல் விளக்காக அன்பர் ஏசுபாலன் பிறந்தார். மக்கிக் கிடக்கும் மானுடத்தின் மாண்பு மாமலையாய் உயர்ந்திட, துன்பக் கேணியில் விழுந்து கிடப்பவர்கள் இன்ப ஏணியில் விருப்புடன் ஏறிட வறுமையின் வலையில் வாடுவோரின் -வானம்வெளுக்க இம்மானுவேல் - ஆர்க்கும் வகுத்தார் கிறித்து மறை ஒன்று அந்த இறை மகன் தான் ஏழை மனங்களில் மணக்கும் பூவனமாம் முல்லை நில முழுநிலவாய் முகிழ்ந்தார் ஏசுபாலன்!. குணக் கேடுகளால் குவியும் பேடுபோக்க பொய்ப் பொருள் நீக்கி மெய்ப்பொருள் ஆக்க மனுக்குலத்தில் மானுடனாய்ப் பிறந்தார். புலம் புலப்பட சீம்பால் நிகர்த்த தீம்பாலாம் ஏசுபாலன்!.
மார்கழி மாதத்து மழை போல
சில்லென்ற சீதனமாய் நட்ட நடு
நள்ளிரவில் நாசரேத்து நாயகன்
கண்மலர் திறந்தார். காசினியில் பிறந்தார்.
வரலாறை வகிடெடுக்க வாஞ்சையாய்
காலம் சனித்த வெயில் விதையாக
இருட்டை நீக்கவல்ல பகலை ஆக்கவல்ல
அகல் விளக்காக அன்பர் ஏசுபாலன் பிறந்தார்.
மக்கிக் கிடக்கும் மானுடத்தின் மாண்பு
மாமலையாய் உயர்ந்திட,
துன்பக் கேணியில் விழுந்து கிடப்பவர்கள்
இன்ப ஏணியில் விருப்புடன் ஏறிட
வறுமையின் வலையில் வாடுவோரின்
-வானம்வெளுக்க
இம்மானுவேல் - ஆர்க்கும் வகுத்தார்
கிறித்து மறை ஒன்று அந்த
இறை மகன் தான் ஏழை
மனங்களில் மணக்கும் பூவனமாம்
முல்லை நில முழுநிலவாய் முகிழ்ந்தார் ஏசுபாலன்!.
குணக் கேடுகளால் குவியும் பேடுபோக்க
பொய்ப் பொருள் நீக்கி மெய்ப்பொருள்
ஆக்க மனுக்குலத்தில் மானுடனாய்ப் பிறந்தார்.
புலம் புலப்பட சீம்பால் நிகர்த்த தீம்பாலாம் ஏசுபாலன்!.


