prayer

கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!

அன்பின் பெருவிழா

அருள்சகோதரி சௌமி ரெக்ஸி - திருச்சி அன்னாள் சபை

கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நம்பிக்கையுடனும் நன்றியுடனும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்
அமைதி, அன்பு, சகோதரத்துவத்தின் அழகை உலகிற்கு நினைவூட்டும் அற்புத விழா.

விண்ணகத்தின் தேவன் ஆரவாரமின்றி மண்ணில் அவதரித்த அற்புத தருணத்தை கொண்டாடுவதன் மூலம், கடைநிலை எளியோரிலிருந்து உயர்நிலை மன்னர்கள்வரை சமூகத் தடைகள் அனைத்தையும் களைந்து, சமத்துவம், பகிர்வு, பரிவு, தன்னலமற்ற சேவை என்ற உயர்ந்த பண்புகளை நமக்குள் கட்டியெழுப்புவது தான் கிறிஸ்துமஸ் விழாவின் மையப்பொருள்.

பொலிவான மாட மாளிகைகள் இல்லை, உயர்ந்த கோபுரங்கள் இல்லை, ஆர்ப்பாட்டங்களும் அலங்காரங்களும் இல்லை. பசுமையான புல்மெத்தையே பஞ்சணை, வண்டுகளின் ரீங்காரமே தாலாட்டு ஆன அந்த புனித இரவு உலகம் முழுவதும் அன்பினால் இணைக்கப் போகும் அழகிய விழா.

எழிலுடன் இருண்மையான இரவில் உதித்த விண்மீன், புல் மெத்தையில் தங்கியிருந்த பாலன் இயேசுவை காணும் பாக்கியப் பாதை நோக்கி மேய்ப்பர்களை அழைத்துச் சென்ற விந்தையை உணர அழைப்புத் தரும் மாபெரும் விழா இது.

அடுத்தவர் வாழ்ந்து உயர்வதே நம் வாழ்வின் உண்மையான நோக்கம்” என்று கற்றுத்தந்த பாலன் ஏசுவின் தன்னலமற்ற அன்பின் வாழ்வு ஆன்மீக மறுமலர்ச்சியின் விதை ஆனது.

வேகமாக மாறும் உலகில் மனித மனம் சோர்ந்து அமைதியை ஏங்கும் வேளை பரிவோடு அணுக, பகிர்ந்து நடத்த, அயலார் வாழ்வு பெற உழைக்க கிறிஸ்துமஸ் நம்மை அழைக்கிறது.

இந்த புனிதப் பிறப்பு நம் இல்லங்களிலும் இதயங்களிலும் புதிய நம்பிக்கையை விதைக்கட்டும்; புதிய ஆசீர்வாதங்களால் நம் வாழ்க்கை நிறையட்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு கிறிஸ்மஸ்மலர்