கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
குடில்இயேசுவும் அசிசியும்
Bro S.ஜான் ஆரோக் cap -புனல்வாசல்
குடில் என்றால் அசிசிநகரை சேர்ந்த புனித பிரான்சிஸ் நினைவுக்கு வருவார். முதலில் இயேசுவின் பிறப்பை இயற்கையோடு ஒன்றிணைத்து குடில் அமைத்து நம் இதயங்களில் குடிக் கொண்டவர். இறைமகனின் பிறப்பு எளிமையாக இருக்கவேண்டும் என்பது புனிதரின் விருப்பம். ஆனால் ஆலயங்களில் ஆடம்பர அலஙகாரம், புந்தோட்டம் ஒலிஒளி என வருமானம் இல்லாத பங்குதளம் கூட இலட்சகணக்கில் செலவு செய்கிறார்கள். புனித பிரான்சிஸ் குடிலில் கண்ட எளிமை காணாமல் போய்விட்டது.
அரசியல் தலவரோ, புதியகட்சிகள் தலைவரோ ஆடம்பர சொகுசு காரில் வந்தால் தான் இன்றைய மக்களுக்கு விரும்பி, சாகவும், தயாரக கூட்டம் கூடுகிறார்கள். பேரறிஞர் அண்ணா, காமராஜ் போன்ற தலைவர்கள் எளிமையில் வாழ்ந்தது வீண்தான் இவர்களுக்கு. பணம் இருந்தால் தான், பல கட்சிகள் கூட்டணிக்கு வரும். பல இனமக்கள் ஒன்று சேர்வார்கள் என்பது இவர்களின் கணக்கு. பணம் ”பேய்” என்றார் புனித பிரான்சிஸ். பணம் ஆடம்பர வாழ்வு இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கமாட்டார். ஏதற்கு இவ்வளவு செலவு செய்கிறோம்?
இறைவார்த்தையின்படி வாழ்ந்தவர் புனித பிரான்சிஸ். வார்த்தையனவர் இயேசு. ஒரு நாளுக்கு எத்தனை அதிகாரங்கள் அல்லது பிரிவுகள் விவிலியத்தில் படிக்கிறோம்? அவை தான் கிறிஸ்து பிறப்பின் பரிசுகள் நமக்கு.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நற்கருணை ஆண்டவரை சந்தித்து ஆராதிப்போம். போற்றுவோம். பாடல்களைப் பாடி புகழ்வோம். அனைத்திற்கு மூவொரு கடவுளுக்கு நன்றி கூறுவோம்.
எவ்வளவ நேரம் செல்போனில் செலவிடுகிறோமோ, அவ்வளவு நேரம் நம் வாழ்க்கை நாட்கள் குறைந்துகொண்டே செல்லும். புனித பிரான்சிஸ் கண்ட இயேசு எளிமை, புன்சிரிப்பு, ஏழைகளுக்கு காட்சி, அமைதி, பகைவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனம். நம் விரும்பும் குழந்தை இயேசு SIR படிவம் போல் இருக்கிறது. பூர்த்தி செய்வதற்கு எங்கே செல்லலாம்? விவிலியத்தை நோக்கிச் செல்லோம்.
தொட்டில் கட்டி குழந்தை இயேசுவை தாலட்டி மகிழ வேண்டிய நம் வீட்டு குழந்தைகளை எப்படி உருவாக்கியுள்ளோம்? பிறக்கும் குழந்தை கையில் செல்போன். வெளியில் விளையாடும் நேரத்தில் வீடியோ கேம். விருந்தினர்களோடு பேசும் நேரத்தில் FaceBook, InataGramயில் ரீல்ஸ் பார்ப்பது. மற்றவர்களோடு பகிர்ந்து சிரிக்கும் நேரத்தில் தானாக மீடியை பார்த்து சிரிப்பது. புனித பிரான்சிஸ் போல் பறவைகளோடு பேசுவோம். இயற்கையில் இறைவனைக் காண்போம். மற்றவர்களோடு பேசி, சிரித்து மகிழ்வோம். குடும்ப உறவு என்ற தொட்டிலில் குழந்தை இயேசுவை தாலட்டி மகிழ்விப்போம்.


