கருவில் வளரும் குழந்தையும் - காவல் தூதரும்.

Image

காவல்தூதர்: குழந்தாய் உன்னை பாதுகாக்க ஆலோசனை கூற கண்ணின் மணியென காத்துகொள்ள உனக்காக நான் அனுப்பப்பட்டுள்ள காவல்தூதர்.

குழந்தை: மகிழ்ச்சி என்னை பாதுகாக்க, பராமரிக்க, அன்பு செய்ய உன்னால் முடியுமா? தாய் வயிற்றில் இருக்கும் போது நான் விருமபாத குழந்தையாக (பெண்குழந்தை) இருநதால் உலகில் நான் பிறப்பேனா? என் தாய் என்னை கருவில் அழித்து விடுவாளோ சற்று பயமாகவே உள்ளது. கடவுளின் திட்டத்தை நிறைவேற்ற நான் குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது கடவுள் விருப்பம். அற்த விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு துணைப் புரிவிராக.

காவல்தூதர்: அதற்காகத்தானே கடவுள் (உனக்காக மட்டுமே) என்னை அனுப்பியுள்ளார்.

குழந்தை: நான் இயேசு குழந்தை போல பிறப்பேனா…

காவல் தூதர்: நீஎப்படி பிறக்க வேண்டும் விரும்புகிறாய்.

குழந்தை: நான் அன்பில் கருவாக வேண்டும் பாசத்தில் உருவாக வேண்டும். பண்பாட்டில் வளர்க்கப்பட வேண்டும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

காவல் தூதர்: வேறு எதிர்பார்ப்ப என்ன?

குழந்தை: திருமணம் என்னும் அருட்சாதனம் பெற்ற அன்புள்ள தாய் தந்தையுள்ள குடும்பத்தில் பிறக்க வேண்டும்.
நான் தேவை என்று உணரும் பெற்றோருக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்.
ஒருவர்ஒருவரை மதிக்கவும் மன்னித்து ஏற்கவும் மனமுள்ள பெற்றோருக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்.
எனக்கு உடன் பிறப்புகள் எள்ள குடும்பத்தில் பிறக்கவேண்டும்.
எனக்கு உடன்பிறப்புகள் உள்ள குடும்பத்தில் பிறக்கவேண்டும்.
காலத்தின் அறிதறிகளுக்கேற்ப கடவுளுக்கும் மக்களுக்கும் ஏற்றவாராக என் மீது அக்கரை கொண்ட குடும்பத்தில் பிறக்க வேண்டுமு
. இது தான் என் ஆசை.

காவல்தூதன்: குழந்தாய் உன் ஆசைநிறைவேற்ற பாவன் இயேசு இருக்கிறார் உன்னோடு. பிறக்கபோகிறார். சந்திப்போம் வாரீர்.

ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் வெளிப்பாடு
அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

  

அருட்சகோ. பெர்னார்டு லூர்துமேரி - FIHM - காரைக்கால்