இறை இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!
இந்த விழாக்காலத்தில் இறைமகன் இயேசு உங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கு தமது நிறைவான ஆசீரைப் பொழிவாராக! வரும் புத்தாண்டில் அருளும், அமைதியும், வளமும், நற்சுகமும் அளித்து எந்நாளும் அனைவருக்கும் நிறைவான மகிழ்ச்சி தருவாராக!
அன்பின்மடல் தனது 11ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்பு மடலைப் பார்வையிடும் உங்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
நவராஜன்
வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.
லூக்கா2.10-12