புது வாழ்வு வந்தது.

Image சவேரியார்பாக்கம் கடற்கரை ஓரம் அலைகள் கரையை வந்து முத்தமிட்டு சென்றன. மீனவர்கள் தங்கள் கடல் செல்வத்தை கரையேறிக் கொண்டு இருந்தார்கன். காலை நேரம் ஏலம் கேட்டு வாங்க மீன் வியாபாரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
அங்கு கடற்கரையோரமாக ஒர் உருவம் நடந்தபடியே எதையே தேடிக்கொண்டு இருந்தது. முதுகில் தொங்கும் பை, கையில் சக்கரம் பதித்தப் பெட்டி, அணிந்திருந்த உடை எல்லாம் பார்த்தால் அவன் மிலிட்டரி சிப்பாய் போல் தோற்றம் அளித்தான்.
கடல் பக்கம் வந்து, நெருங்கிய பொழுது ஒருவன் " அட நம்ம ஜேம்ஸ் மாதரில்லா இருக்கு அண்ணே" என சொல்லிக் கொண்டே அவனை நெருங்கினான்.
"ஆமாடா. நான் தான் ஜேம்ஸ். நீ அந்தோனில்லா. என்னைத் தெரியுமாடா மச்சான்?"
"ஆமா அண்னே. எப்படிலே மறக்கமுடியும்? ஏழு வருடங்களுக்கு மேலே ஆயிட்டே, எப்படி மச்சான் இருக்கே? மிலிட்டரிலே சேர்ந்து எங்களையேல்லாம் மறந்துடே. என்னடா?"
“அதல்லாமில்லே மச்சான். அப்பனோடே சண்டை அதான். ஓடிப் போய் மிலிட்டரியிலே சேந்திட்டென். வரப்பிரியமில்லாம இருந்திட்டேன். நாட்களும் ஒடி போச்சு. டிஇப்போ பிரமேஷன். ஒரு மாசம் லீவு ஊருக்கு வந்து “உங்களையெல்லாம் பார்க்குனுங்க ஆசை மச்சான் து சரி அப்பச்சி எந்த வீட்டிலே இருக்காரு?
“பொறு மச்சி. நான் பிடிச்ச மீனை ஏலமிட்டுட்டு வரேன். கொஞ்ச நேரம் மரத்தடியில் நில்லு. உன் அப்பன் வரலே காய்ச்சல்”.
“சரி. நான் தென்னமரத்துக்கு அடியிலே நிற்கிறேன். முடிச்சுட்டு வா" எனச் சொல்லிக் கொண்டு தென்னமரத்து நிழலில் போய் நின்றான்.

கடலை நோக்கி ஜேம்ஸ் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். பத்து வருடங்களுக்க முன்னால் நடந்த சம்பவம் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது. ஜேம்ஸ் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அந்தப் பகுதி பையன்களில் அவன் படிப்பில் கெடடிக்காரன். அதனால் அங்கிருந்த பங்குத்தந்தை அவனது அப்பாவிடம் சிபாரிசு செய்து அவனது படிப்பிற்கு ஊக்கமளித்தார். ஜேம்ஸ்க்கும் மீன் பிடிப்பும் கொழிலில் நாட்டமில்லை. ஒரு நாள் தனது நண்பர்களுடன் மாலையில் கடற்கரையில் ஒரு மரக்கட்டையை வைத்துக் கொண்டு கடல் அலைகளின் மேல் நறுக்கி விளையாடிக் கொண்டு இருந்தான். பௌர்னமி நிலா கடல் கொந்தளித்துக் கொண்டு இருந்தது. அங்கு சில சிறுமிகளுடன் டெய்சியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டும் குளித்துக் கொண்டு இருந்தனர். அங்கு நின்ற ஒரு பெரியவர் " இந்த பொம்பளைப்பிள்ளைகள் என்ன ஆம்பிளைப் பசங்க மாதிரி பயமில்லாம ஆடிக்கிட்டு இருக்கு. ஏதாவது நடந்த யாரு பதில் சொல்லறது" எனப் புலம்பிக் கொண்டிருந்தார்.

tsunami

ஒருபெரிய அலை வந்தது, ஜேம்ஸ் தனது கட்டையில் உட்கார்ந்து அலையின் மேல் ஏறி கடலுக்குள் சென்றான். அலையில் திரும்பம் பொழுது " ஐயோ டெய்சி" என அவளுடன் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் கதறினார்கள். ஜேம்ஸ் கரைக்கு திரும்பியதும் கூக்குரல் கேடடு மறுபடியும் கடலுக்குள் சென்றான். சில வினாடிகளில் அவள் தலை முடியைப் பற்றிக் கொண்டு கட்டையை ஒரு கையால் தள்ளிக் கொண்டு கரை சேர்ந்தான். அதற்குள் அக்கம்பக்கத்து ஆட்கள் ஓடி வந்தார்கள்.
முதலுதவி செய்து ஜேம்ஸ் அவளை கரையில் படுக்க வைத்தான். அவளைச் சுற்றி எல்லோரும் அமைதியாக நின்று கொண.டிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து கண் திறந்த டெய்சி பறக்க பறக்க முழித்தாள். அதற்குள் அவள் அம்மா ஓடி வந்தார்கள். டெய்சியை தூக்கிக் கொண்டு ஜேம்ஸ்சை நன்றியுடன் பார்த்தவிட்டு நகர்ந்தார்கள்.

"என்ன மச்சி என்னமோ ஓசனையிலே இருக்கே? மலரும் நினைவுகளா?"
" அமலே மச்சி நம்ம டெய்சியை காப்பத்தினோமே! அந்த சம்பவம் கண்முன் தோன்றியது. ஆமா அற்த அடய்சி எங்கே இருக்கா?"
"அதுவா? அது பெரிய கதையிலே. வா பேசிக்கிட்டே அப்பச்சியைப் பார்க்க போலாம்"
"என்ன பெரிய கதை. சொல்லுலே!"
அதாண்டா நீ போனப்புறம் இங்கே டெய்சியும் அவா அம்மாவும் இருந்தா! டெய்சி அம்மாவை தனியாக விட்டுட்டு, டெய்சியும் அப்பாவும் புத்தாண்டு டிரஸ் வாங்க ஊரக்குள் போனாகள். அந்த சமயம் வந்த சுனாமி அடித்ததிலே குடிதைகள் நாசமாகி டெய்சி அம்மா சுனாமிக்கு பலியாயிட்டா. டெய்சியும் அப்பாவும் பிறகு வந்து பார்த்ததில் அம்மாவை கண்டுபிடிக்கமுடியவில்லே. மனநொந்து ஊரைவிட்டு பக்கத்து அந்தோணியார்பாக்கம் பொயிட்டாங்க. டெய்சி 8-ம் வகுப்பு படித்தபின் நின்னுட்டா. பங்குசாமி எவ்வளவோ சொல்லியும் கேட்கலே. பாவம் நீயும் போய்ட்ட. பிறகு நான் பார்க்கவே இல்லை. வீடு மட்டும் தெரியும். இப்போ போனா பார்க்க முடியாது. ஞாயிற்றுக் கிழம போய் பாப்போம்."
ஒரு வீட்டை அடைந்ததும் அந்தோணி கதவைத்தட்டினான். " அண்ணாச்சி. இங்கே பாருங்க. யார் வந்திருக்கான்?"
கதவை திறந்து கொண்டு வெளியே வந்த அருளப்பன் ஆச்சரித்தில் நின்றான்.
" அப்பா என்ரன மன்னிச்சிடு. தெரியாம சென்சிட்டேன்." கதறிக் கொண்டு ஜேம்ஸ் அவரை கட்டி பிடித்து அழுதான்.
"அம்மா எங்கே? என்னாப்பா இப்படி உடம்பு கொதிக்குது.... காய்ச்சலா......ஆமாண்டா. அதோ அம்மா அடுப்படியில் சமைக்கிறா"
"அம்மா" என்ற அழைத்துக் கொண்டே உள்ளே போனான்.
"வரேன் மக்கா, ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு பின்பு பார்ப்போம் " என விடைபெற்றான் அந்தோணி.
ஞாயிறு பூசை முடிந்து வீடு திரும்பியஜேம்ஸ், அந்தோணி வரவிற்காக காத்திருந்தான். 10 மணிக்கு அந்தோணி வரும் பொழுதே " ஜேம்ஸ் நேரமாயிட்டா. டெய்சி அப்பா கோயிலுக்கு வரமாட்டார். அதுவும் வரதில்லே. டெய்சியும் வராது. சரிபோவோம். உன் ஆசையை கெடுப்பானே"
"அப்படியா ...சரி டெய்சி எப்படி இருக்கானு பார்க்கணும் மனசு கேட்கலே.
இருவரும் நடந்து டெய்சி வீட்டை அடைந்தார்கள்.

" அண்ணாச்சி..." கதவைத்தட்டினான். "டெய்சி அப்பா இல்லையா? அந்தோணி கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான். ஜேம்ஸ் பின் தொடர்ந்தான். ஜேம்ஸ்சைப் பார்த்ததும் டெய்சி அழத் தொடங்கினாள். " ஏன் அழறே? நான் ஒன்னும் சொல்லலையே? நான் காப்பத்தினவா எப்படி இருக்கானு பார்க்க வந்தேன். அம்மாவும் போயிட்டாங்களாமே சரி அழதே...அப்பா எங்கே?" அப்பா ...சின்னம்மா.... கடைக்கு போயிட்டங்க விக்கி விக்கி பதில் சொன்னாள். ஜேம்ஸ், அந்தோணியிடம் "போகலாம். என சைகைக் காட்டினான்.
"இரு இரு என்னை ஏன் காப்பத்தினே? நான் கடலில் செத்து இருந்தாக் கூட நல்லா இருந்துருக்கும்.. என்னை ஏன் காப்பத்தினே. இப்போ நான் சின்னம்மகிட்டே மாட்டிகிட்டு முழிக்கிறோன். என்னை கொடுமைப்படுத்திராங்க. எனக்கு இங்கிருந்து போக வழி சொல்லு. எனக்கு இங்கிருந்து விடுதலை வேணும். மறுபடியும் கடல் போய் விழுந்து சாகலாமுன்னு தோனுது." என ஓப்பாரி வைக்க, மனநொந்து "சரி அழதோ. எதாவது ஒரு வழி செய்யலாம். பங்கு சாமியாரை கேட்டுகிறேன். பயப்படாதே. நான் ஒரு மாசம் இருப்பேன். அதங்குள் ஒரு வழி பிறக்காமலா போகும். வரேன்" எனக்கூறி இருவரும் விடைபெற்றார்கள்.

at beach

ஒரு வாரமாக ஜேம்ஸ் டெய்சியை நினைத்துக் கொண்டும் கவலைப்பட்டுக் கொண்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் அடைப்பட்டுக் கொண்டு இருந்தான். " நான் டெய்சியை காப்பற்றியது சரியா? தவறா? அவளை கடலிருந்து காப்பற்றியது போல் அவளை சின்னம்மாவிடமிருந்து எப்படி காப்பாற்றலாம். பங்கு சாமியாரைக் கண்டு யோசனை கேட்கலாமா, அந்தோணியிடம் கேட்டால் ஏதாவது தீர்வு கிட்டுமா? நான் உனக்கு உயிர் கொடுத்தேன். ஆனால் வாழ்வு கொடுக்கவில்லையே? உனக்கு நான் வேண்டும். எனக்கு நீ வேண்டும். உன் நொறுங்கிப் போன வாழ்க்கைக்கு அன்பு தேவைப்படுகிறது. கவலைப்பட்ட உள்ளத்திற்கு நான் தேவைபடுகிறேன். கவலைப்பட்ட உள்ளம் என்னால் சந்தோஷப்படுத்தப்பட்டு இருவரையும் இணைக்கட்டும்...." ஒரு முடிவுடன் ஜேம்ஸ் புறப்பட்டான்.

பங்குதந்தையை சந்தித்தான். டெய்சியின் கதையைச் சொல்லி அவளுக்கு விடுதலை கிடைக்க, அவன் அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டதாகக் கூறினான். பங்குதந்தையின் முயற்சியாலும், அந்தோணியின் உதவியாலும், இருவரும் கிறிஸ்மஸ் வாரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். புத்தாண்டு பிறந்தது. விடுமுறை முடிந்தது. காஷ்மிருக்கு இருவரும் புறப்பட்டு சென்றனர்...........

திரு. AJS ராஜன்- சென்னை