இரக்கத்தின் திருவடிவமாம் பாலன் இயேசு



அருட்சகோதரி ஷீலா-திருச்சி பனித அன்னாள் சபை, சென்னை-24

இரக்கம் தொடரட்டும் -பாலன் இயேசு பிறப்பால்...
இறைதந்தையின் உருவம் - இயேசு
இறைஅன்பின் வெளிப்பாடு - இயேசு
இறைதந்தையின் இரக்கம் - இயேசு
மனித உறவுகளின் கணையாழி - இயேசு
மனிதனின் பாதுகாப்புக் கவசம் - இயேசு
மனிதனின் வலி நிவாரணம் - இயேசு
மனிதனின் உண்மையான மகிழ்ச்சி இயேசு


christmasஆக இறைச் சாயலையும் மனித உருவத்தையும் கொண்டவராய் நம் அனைவரையும் இரக்கம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்க வைக்க வருகிறார் நம் பாலன் இயேசு. உலகத்ததைப் படைத்த கடவுள் 300 நாட்கள் தன்னையே வெறுமையாகித் தீவனத் தொட்டியில் பிறப்பைக் கொடுத்து முழுமையான இரக்கதைக் கொடுத்தார்.


ஆனால் இன்றைய சூழல் கொடுத்த இரக்கத்தை மறந்து இரக்கம் என்றால் என்ன? என்று கேட்கிறது இந்த நவீன உலகம். கணணிமைய உலகத்தில் இரக்கம் மறைந்துக் கொலை, கொள்ளைப் போன்ற தீயச்செயல்கள் பெருகி வருகின்றது. மனிதனின் மத்தியில் இரக்கம் மடிந்துபோயிற்று. மடிந்த இரக்கத்தை உயிரோட்டம் பெற வைக்கப் பாலன் இயேசு நம்மிடையே வருகிறார்.

இரக்கம் மடிந்து போய்விட்டது என்று அதைப் புதைத்தோமென்றால் அது வெடித்து வெளியேவரும். இதுதான் இரக்கத்தின் இயல்பான குணம்.



இதைப் புனித அகஸ்தினார் கூறுகிறார்.

இறைவனுக்குக் கோபத்தை அடக்குவதைவிட - தனது இரக்கத்தை அடக்குவது கடினமாம்.

எனவே அன்பிற்குரியவர்களே நாம் பாலன் இயேசு பிறப்பை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடப் பிறர்க்கு வழிகாட்டுபவர்களாய், துன்புறுவோர்க்கு ஆறுதல் அளிப்பவர்களாய், தீமைசெய்வோரைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்பவராய், இருப்பதைப் பகிர்பவர்களாய், பகிர மறுக்கும் போது விட்டுக் கொடுப்பவர்களாய், இல்லாதோரை நிறைவாக்குபவர்களாய், இயலாதோரைத் தூக்கி விடுபவர்களாய் வாழ, இதைத் தொடர்பணியாக நம் உள்ளங்களில் கருத்தூன்றி உறவுகளில் தொடர்ந்து செயல்பாடுகளாக ஒவ்வொரு நாளும் புதுப்பிறப்பெடுக்கும்போது நிச்சயம் இரக்கம் என்பது நடைமுறை செயல்பாடாய் மாறித் தொடர்பயணமாய் உலகில் வலம் வருவோம்.


இரக்கத்தின் திருவடிவமாம் பாலன் இயேசுவை நம் மனதில் ஏற்போம். வாழ்வை மாற்றுவோம் புதுப்பிறப்புக் கிடைக்கும்..