கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

வானம் மெல்ல கிழிறங்கி

திரு அல்போன்ஸ் பெங்களுர்

பெத்லேகேமில் இயேசு பிறந்தபொழுது வானதூதர் இடையர்களுக்கு தோன்றி மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவித்தனர்.
“இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவராகிய மெசியா”.
இந்த வார்த்தைகளில் லூக்காஸ் இயேசுவை மீட்பர், ஆண்டவர், மெசியா. என்று மூன்று விதமாக இயேசுவை பெயரிடுகின்றார்.
மேலும் வானதூதரோடு வானோர் படைத்திரள் சேர்ந்து……….
“ உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!, உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக் 2:14)
மிக அற்புதமான வாழ்த்துக்கள்
இயேசு பிறந்தபொழுது வந்த இரு வாழ்த்தொலிகள் மிகவும் முக்கியமானவை
ஏன்………. எப்படி………..?
ஆம் இதே வாழ்த்தொலிகளை மீண்டும் நாம் கேட்கின்றேம்.
இயேசு எருசலேமிற்குள் கழுதை குட்டியின் மேல் ஊர்வலமாய் சென்றபொழுது வழியெங்கும் சீடர் கூட்டமெல்லாம் உரத்த குரலில் இதே வாழ்த்தை பாடலாக பாடுகின்றார்கள்
லூக்காஸ் இதை எழுதுகின்றார்.
"ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!"
இயேசு பிறந்தபொழுது பாடிய பாடல்களை இயேசுவின் பாடுகளின்பொழுதும் பாடலாக பாடுகின்றார்கள்


எருசலேமில் நடந்த சில சம்பவங்களைப் பார்ப்போம்
எருசலேமில் குழப்பமான அரசியல் நடந்து வந்தது
ரோம அரசின் அதிகாரம் ஒரு புறம், யூதசங்க தலைவர்கள் அன்னாஸ், கைப்பாஸ் மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பது ஒரு புறம்
மனிதனுக்கு எல்லாகாலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்குமா
காய்க்க ஒரு காலம் உண்டென்றால், கல்லெறிபடவும் ஒரு காலம் உண்டல்லவா
அந்த கல்லெறிபடும் காலம் இப்பொழுது எருசலேமின் வாசல் படிஏறி வந்து நிற்கின்றது.
விடுதலையை எதிர் நோக்கிய மக்கள் எருசலேமில் இயேசுவின் கண்டு ஆர்ப்பரித்தார்கள்.
கல்லெறிபடும் காலம் என்று சொன்னோமே……….
அது எருசலேமிற்கு மட்டுமல்ல……..
இயேசுவிற்கும் கூட……..
இயேசுவிற்கு கல்லெறிபடாமல் சிலுவை மரணத்தை தந்தது
"எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!(லூக் 13:34) என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.


உலக மீட்பு பெறுவதற்க்காக நீதிக்கும் அநீதிக்கும் நடந்த ஒரு யுத்தத்தின் களம் எருசலேம்.
எருசலேம் இயேசுவை கொன்றுபோட்டது பினனாளில் தானும் கல்மேல் கல் இராதபடி அழிந்து போனது.
“எருசலேம் மக்கள்… எப்போதுமே ஒரு அனுதாபத்தோடு இயேசுவை பார்த்தார்கள் ஏனென்றால் அவர் வழியாகத்தான் வழி பிறக்கும். இறந்தவரை உயிர்ப்பிப்பது, நோயாளிகளை குணப்படுத்திய நிகழ்வுகள் இயேசுவின் மேல் முழுநம்பிக்கையை வைத்தார்கள்
ஆனால் அவர்கள் யூதசங்கத்தை பற்றி மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்கள் கிடையாது நிறையபேர்களுக்கு அவர்களை பிடிக்காது. காரணம் எப்போதுமே அவர்கள் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தனர். கோவிலை வியாபார தலமாக்கினார்கள் அவர்கள் வாயிலிருந்து பிறக்கும் வார்த்தைகள் கோபங்களை சுமந்தபடியே தான் வெளிவரும் ஆன்னாஸ், கைப்பாஸ் இருவரும் தாங்கள் மன்னர்கள் என்ற நினைப்போடு வாழ்ந்தார்கள்
அவர்களுக்கு போட்டி யென்று யாரும் இருப்பதாக தெரிந்தால் அவனை அழிக்க கூட தயராகவே இருந்தனர் அதை மறப்பது கிடையாது அதிலிருந்து மாறியதும் கிடையாது.
இந்த சூழ்நிலையில் தான் எருசலேமில் ஊர்வலம் தொடங்கியது சிலுவையை நோக்கிய ஊர்வலம்………
மக்கள் ஆரவாரத்தோடு மகிழ்ச்சியோடு கூறுகின்றார்கள்
"ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" (லூக் 19:38)”
என்ன அற்புதமான சீடர் கூட்டத்தின் ஒப்புதல் வாக்குமூலம் …………


இயேசு பிறந்த அன்று வானதூதர் பாடிய அதே பாடலை பின்னாளில் இயேசுவின் எருசலேமில் ஊர்வலத்தில் கேட்கின்றேம்.
இறைதூதர் பாடிய வரிகளையும் சீடர்கள் பாடிய வரிகளையும் சற்று உற்றுநோக்குவோம்
வானதூதர் இடையர்கள் முன் பாடியது……….
“உன்னதங்களில் கடவுளுக்கு மகிமையுண்டாகுக உலகிலே அவர் தயவு பெற்றேர்க்கு அமைதி ஆகுக”
சீடர்கள் எருசலேமில் ஊர்வலத்தில் பாடியது
"ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!"
வானதூதர்கள் “உலகில் அமைதி உண்டாகுக” என்கின்றனர்
சீடர்களோ “வானகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக” என்கின்றனர்

அனைவரும் வானமும் பூமியும் அமைதியில் வாழவேண்டும் என்பதே விருப்பமாகும்
அந்த அமைதியை தரவல்லவர் இயேசு என்பதால் இயேசுவின் பிரசன்னத்தில்தான்
வானமும் பூமியும் அமைதி வேண்டி பாடுகின்றனர்
இங்கே ஒரு வினோதத்தை காணலாம்
பூமியும் அமைதி பெறவேண்டுமெனில் அதற்கு ஒரு நிபந்னையையும் பாடுகின்றனர்
அவர் தயவு பெற்றேர்க்கு அமைதி உண்டாகுக என்று வானதூதர்கள் பாடுகின்றனர்
ஆம் இயேசுவை நாம் ஏற்கவேண்டும் அவருடன் அவரில் விசுவாசம் கொள்ளும் பொழுது அமைதியை காணலம்
இயேசு இப்பூவுலகில் அமைதியை கொண்டுவருகின்றார்.
வானம் மெல்ல கிழிறங்கி வருவதை வரவேற்போம்…….


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com