கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

நமக்காக ஓரு மகன்!

அருட்தந்தை அமிர்தராஜ் சுந்தர் -இளையரசனேந்தல்,கோவில்பட்டி

merry christmas எசா. 9:6 ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ ;வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் ; என்று அழைக்கப்டும்.
இறைவாக்கினர் வாயிலாக சொன்ன இந்த வார்த்தை இயேசு வழியாக நிறைவேறியது என்பதை நம்பும் நாம். எதற்காக, ஏன் தரப்பட்டார் என்பதனை அறிந்து கொள்ளவது நியாயமானது.
நெகே. 4:20 எந்த இடத்திலிருந்து எக்காள முழக்கம் கேட்குமோ, அந்த இடத்திற்கு எங்களிடம் ஒன்று கூடி வாருங்கள். நம் கடவுள் நமக்காகப் போர் புரிவார்.
நமக்காக தந்தை போரிடுவார். அவர் அக்கரையுள்ளவர். தன் மக்களை காப்பாற்ற அவா என்றுமே துணை நிற்பார். கைவிடுவதில்லை.
இதற்காகவே அவர் அவ்வப்போது, இறைவாக்கினர்களை, தலைவர்களை, அரசர்களை அனுப்பி வந்தார். எல்லாரையும் கொன்ற மக்கள் தன் மகனையாவது மதிப்பார்கள் என்று நம்பி தன் மகனை அனுப்பி வைக்க முன்வந்தார்.

மத். 5:12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
யோவா. 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
லூக். 1:70 அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்:

அவரையும் விட்டு வைக்ககாத கூட்டம் ஓழிக! ஓழிக! என் கூச்சலிட்டு சிலுவையில் அறைந்து கொன்றது.
உரோ. 5:6 நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.
உரோ. 5:8 ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.
உரோ. 5:10 நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்.

1 யோவா. 3:16 கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.
ஆனால் தந்தை அவரை உயிர்ப்பிக்கச் செய்தார். சொன்னபடியே தன் வலப்புறத்தில் அமரச் செய்தார். அங்கும் அவர் நமக்காக பரிந்து பேசுபவராகவே இருக்கின்றார்.
உரோ. 8:34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! நமக்காகவே, தந்தை மகன் தூயஆவியார் (திரியேக கடவுள்) செயலாற்றி வருகின்றனர். இன்றும் செயலாற்றி வருகின்றனர்.
இதனை இன்று இந்த உலகிலே செயலாற்ற நம்மையும் முன்கூறித்து வைத்து நம்மை படைத்து, அழைத்து, அர்ச்சித்து, பராமரித்து, பாதுகாத்து வருகின்றனர்.

எபே. 2:10 ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதற்காகவே ஆவியையும் தந்து அவரின் வரங்கினால், கனிகளானில் நம்மை நிரப்பி பெற்றவைகளை பொது நலனுக்காக நாம் செலவழித்து வாழ அழைக்கின்றார்.
1 கொரி. 12:7 பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

அவர் சார்பாக நாம் செயலாற்றும் போது, நாம் அவருடைய சாட்சிகளாகின்றோம்.
விழா கொண்டாட்டத்தில் உறுதி ஏற்போம், சாட்சிகளாக வாழ்வோம்.
நமக்காக மனுவுருவான கிறிஸ்துவை அயலாரில் கண்டு, அவர்களின் நல்வாழ்வுக்காக நம் வாழ்வை தியாகமாக்குவோம்.
இந்த தியாகத்திற்கு தந்தையாம் கடவுள் மகனுக்கு கொடுத்த பரிசினை நமக்குமு; தந்து நம்மை ஆசீர்வதிப்பார். நல்வாழ்த்துக்கள்.


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com