நண்பா! சக்தியாகவும் சத்தியமுமாகவும் வாழும் நம் தெய்வம் “உன்னைத் தேடி உறவாட” இன்று உனக்காக மண்ணில் பிறந்துள்ளார். குடிலில் பிறந்த மழலை செல்வத்திற்கு ஆயிராமாயிரம் நாமங்களும் வாழ்த்துக்களும் நீ வாரி வழங்கலாம்..ஆனால் அவர் விரும்பும் பரிசுதான் என்ன? உன் வாழ்வு தானே! நூற்றுக்கணக்காக வடிவங்களும் உருவங்களும் குழந்தை இயேசுவுக்கு நீ வழங்கி வாழ்த்தலாம்.. ஆனால் அவர் விரும்பும் பிராத்தனை தான் என்ன? காணிக்கை தான் என்ன? நீ தானே! தோழா! கணக்கற்ற இதிகாசங்களையும் இறைவேண்டல்களையும் குழந்தை பாலனுக்கு நீ வாழ்த்தி வணங்கலாம். ஆனால் அவர் விரும்பும் வேண்டல் என்ன? நண்பா உன் சுத்தமான சிந்தனை - சொல் - செயல் தானே! ஆம் தோழா! நீ தான் அவர் விரும்பும் மிக உயர்ந்த பிறந்த நாள் பரிசு! உன் உள்ளம் தான் அவர் அவர் பிறக்க நேசிக்கும் குடில் காரணம் தோழா! விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தவரை நீ விண்ணுக்கு மட்டும் உரிமையாளர் என்று சொல்லி மனிதன் மண்ணிற்கு வந்தவரை விரட்டி விட்டான். மண்ணை பட்டா போட்டு மதங்களை மதமாக்கி சமூகங்களை கூறுபோட்டு சத்தியங்களுக்கு சமாதி கட்டி கலாச்சாரங்களை கருச்சிதைவுச் செய்து கண்ணியங்களுக்கு கல்லறை அமைத்து மண்ணில் மானிடரின் பிழைப்பை சூறையாடுகிறான். நண்பா! விரட்டி அடித்த இறைவனை மீண்டும் மண்ணில் ஈன்றெடுக்க நீ வேண்டும்! மண்ணகத்தை விண்ணகமாக்க சிதறுண்ட மனங்களின் புண் ஆற விண்ணவரை மனித உள்ளங்களில் ஈன்றெடுக்க நீ வேண்டும் ! ஏனென்றால் உன் இளமையே குடியிருக்கும் கோவில். உன் குரல் இறைநீதியின் உன்னத எதிரெளி! இளைய நெஞ்சமே! உன் மாண்பினை அறிந்திடு!மதிப்புடன் வளர்ந்திடு! நாகரீக தொட்டில்களில் உறங்கிட மறுத்திடு! அடுத்தவருக்கு நலன்கள் நல்கிட இறைமகன் உலகில் பிறந்திட உன்னையே அவரது மலர் மஞ்சமாக்கிடு! மழலை மன்னவனே! உனக்கு நாங்கள் மணிமுடியாயாகிட இளையோர் யாம் சரணடைகிறோம்.
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com