யூபிலி ஆண்டு 2025 சிறப்பு மலர்
கிறிஸ்து பிறப்பின் 2025 ஆம் ஆண்டினை நினைவுகூரும் விதமாக நவம்பர் 24 கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று யூபிலி 2025 ஆண்டிற்கான கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டது. நம் கத்தோலிக்கத் தாய்த் திருஅவையானது வருகின்ற 2025 ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாகக் கொண்டாட நம்மை அழைக்கின்றது. இவ்வாண்டு “எதிர்நோக்கின் திருப்பயணிகள்” என்ற தலைப்பில் நாம் யூபிலி ஆண்டினை சிறப்பிக்கின்றோம்.
இவ்வாண்டை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடி மகிழ அன்பின்மடல் சிறப்பு மலரைத் தொகுத்து வழங்குகிறது. இதில் சிறப்புக் கட்டுரைகள், செபங்கள், திருஅவையின் செய்திகள், அறிவுப்புகள் மற்றும் பல நிகழ்வுகளைப் பற்றித் தொகுத்துத் தரப்படும். படித்துப் பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.