மழைத்துளிக்குள் வானம்

அ.அல்போன்ஸ் - திருச்சி

கிறிஸ்து பிறப்பின் 2025 ஆம் ஆண்டினை நினைவு கூரும் விதமாக சிறப்பிக்க இருக்கின்றோம். இதன் மையக்கருத்து
நம்பிக்கையின் திருப்பயணிகள்’ (Pilgrims of Hope)
யூபிலி ஆண்டின் மந்திர சொல்லாகும். திருப்பயணங்கள் மற்றும் நம்பிக்கை' ஆகிய இரண்டும் முக்கியக் கருப்பொருள்களைக் குறிக்கின்றன.

இந்தப் பிரபஞ்சத்தை நாம் அண்ணாந்து பார்க்கையில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் அழகை வாரி இறைக்கும். ஆனாலும் நம் கண்களுக்குச் சூரியனும் நிலவும் தனியோர் அழகு. அதைப் போல் தான் என்றும் வாழும் நற்செய்திகள்.

கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது.

வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் தீர ஆராய்ந்து, இறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப் பெற்று ஆன்மிக வாழ்வில் கலந்த மனிதர்களின் வழிகாட்டுதலை இங்குப் பார்க்கலாம்.
மனிதனை நல்வழிப்படுத்தக்கூடிய முக்கிய விஷயங்களில் முதலாவதாக இருப்பது ஆன்மிகம். ஒருவர் தன் வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடியது தான் ஆன்மிக நம்பிக்கை. திருவிவிலியத்தின் அழகான அம்சங்களில் ஒன்று, நாம் அதை முழுவதுமாகப் படிக்கும்போது, நமது தருணம் அல்லது மனநிலைக்கு ஏற்றவாறு முழுமையான பாடத்தைப் பெறுகிறோம். கடவுள் நமக்கு வழங்கிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று நம்பிக்கை.
திருவிவிலிய நம்பிக்கை என்பது கடவுளின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு சாதகமான முடிவை எதிர்பார்ப்பதாகும்.

நம்பிக்கை என்பது எதிர்காலத்திற்கான விசுவாசம் (ரோமர்.8:24-25; எபி. 11:1). கிறிஸ்தவ நம்பிக்கை என்பது நிச்சயமானது; அஃது உறுதியானது விவிலியத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரத்தைக் காண்போம்…

நம்பிக்கை நட்சத்திரம்

“மார்த்தா”

லூக்கா மற்றும் யோவானின் நற்செய்திகளில் தோன்றும் ஒரு விவிலிய உருவம். ஜெருசலேமுக்கு அருகில் உள்ள பெத்தானியில் தனது உடன்பிறந்த சகோதரிகளான இலாசர் மற்றும் மரியா ஆகியோருடன் வசித்து வந்தார்.
புதிய ஏற்பாடு மார்த்தாவை மூன்று இடங்களில் குறிப்பிடுகிறது, மார்த்தாளுக்கும் இயேசுவுக்கும் இடையிலான உறவைப் பற்றிய ஒவ்வொரு கதையும் ஒரு பொக்கிஷம்.
மார்த்தா என்ற பெயர் எபிரேய மொழியில் எஜமானி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மார்த்தா சமையலறையில்

விவிலியத்தில் மார்த்தாவைப் பற்றிய முதல் குறிப்பு லூக்கா 10ல் காணப்படுகிறது.
இயேசு மார்த்தாவால் தனது வீட்டிற்கு அழைக்கப்பட்டார். பெரும்பாலும் பயணிகளை ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த அழைப்பது வழக்கம். இந்த விஷயத்தில், மார்த்தா அதைச் செய்தார், அவள் இயேசு குடும்பத்தை அறிந்திருந்தார்.
“இங்கே தலை சாய்க்க இடமில்லை” என்று கூறிய இயேசு மார்த்தாவின் வீட்டில் விருந்துண்ண வந்தார். இயேசு மார்த்தா மற்றும் அவளது உடன்பிறப்புகளின் நெருங்கிய நண்பராக இருந்தார். “...இயேசு மார்த்தாவையும் அவள் சகோதரியையும் இலாசரையும் நேசித்தார்” (யோவான் 11:5) என்று திருவிவிலியம் கூறுகிறது.
இயேசுவுக்கும் தன் வீட்டில் கூடியிருந்த சீடர்களுக்கும் மார்த்தா சமையலறையில் உணவு சமைத்துக்கொண்டிருப்பதை நாம் முதன்முறையாகப் பார்க்கிறோம் (லூக்கா 10:38).
லூக்கா, மார்த்தாவின் கவனத்தைத் திசைதிருப்பும் ஏற்பாடுகளைச் சொல்கிறார் - அவள் இயேசுவின் முன் சென்று மரியாவின் உதவியைக் கேட்கிறாள் (வச. 40)
மார்த்தா உற்சாகமாக மும்முரமாகச் சமைத்து தனது விருந்தினர்களுக்காகத் தயார் செய்துகொண்டிருந்தாள். மரியா உட்கார்ந்திருப்பதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
செய்ய வேண்டியது அதிகமாக இருந்தது! ஆனால் மரியா கடவுளின் முன்னிலையில் இருப்பதில் கவனம் செலுத்தினாள்.
அவளுடைய சகோதரி மரியா உதவாததால் மார்த்தா விரைவில் வருத்தமடைந்தாள். இயேசு வீட்டில் அமர்ந்திருந்தார், மரியாள் அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
மார்த்தா, இயேசுவை வீட்டிற்கு அழைத்திருந்தாலும், இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரி என்னைத் தனியாகப் பணிவிடை செய்ய விட்டுவிட்டதை உமக்குக் கவலையில்லையா?" என்று கேட்டாள்.
மார்த்தா தைரியமாக அவரிடம் "எனக்கு உதவி செய்யச் சொல்லுங்கள்" என்று கேட்டாள்.
மார்த்தா உணவை தயார் செய்கிறாள். உதவிக்காக அவள் தன் சகோதரி மரியாவை கூப்பிட்டு இருக்க வேண்டும்,
மாறாக வந்திருந்த விருந்தாளியை இயேசுவிடம் மரியாவை உதவிக்கு வரச்சொல்லுங்கள் என்று முறையிடுகிறாள்.
இது மார்த்தா இயேசுவிடம் கொண்ட அதிகமான அன்பின் வெளிப்பாடு. அன்பின் உரிமை மீறல்.
மார்த்தா மரியாளைப் பற்றி முறையிடும்போது, அவரது காலடியில் அமர்ந்து அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு மரியா "சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுத்தார்" என்று இயேசு அவளிடம் கூறுகிறார்.

இயேசுவின் பதிலில் ஆழமான அன்பு தெரிந்தது. வெகு கனிவாக “மார்த்தா”, “மார்த்தா” என்று இயேசு மார்த்தாவின் பெயரை இரண்டு முறை அழைத்தார், விவிலியத்தில், இயேசு மார்த்தாவின் பெயரை மட்டுமே இரண்டு முறை அழைத்தார். மற்ற எந்த பெண்ணையும் அப்படி அழைக்கவில்லை அவளை உயர்த்த: இயேசு தமக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த மரியாளுக்கு இணையான உயர்வைக் கொடுக்க, மார்த்தவை பல விஷயங்களைப் பற்றி முதன்மைப்படுத்தவும் கவலைப்படுவதை நிறுத்தவும்: மார்த்தாவின் பெயரை இரண்டு முறை அழைத்தார். லூக்கா 10:41 விவிலியத்தில், கடவுள் ஒருவரின் பெயரை இரண்டு முறை அழைத்தால், அவர்கள் ஒரு புதிய வாழ்க்கைக்கு அழைக்கப்படுகிறார்கள் என்று அர்த்தம். விவிலியத்தில், அன்பை வளர்க்கவும், கடவுளின் திட்டத்தை முன்னறிவிக்கவும், முந்தைய செயல்களை எதிரொலிக்கவும் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஆதியாகமம் 22:11-ல், ஒரு காட்சியை பார்க்கலாம்

ஆபிரகாம் தன் மகனின் உயிரைப் பறிப்பதிலும் அவருக்குக் கீழ்ப்படியத் தயாராக இருப்பதாக கடவுளிடம் நிரூபித்தார். அவன் கத்தியால் அவனை வெட்டுவதற்கு முன், கடவுள் அவனுடைய பெயரை இரண்டு முறை அழைத்தார் - ஆபிரகாம், ஆபிரகாம். அவர் கடவுளுக்கு பயப்படுவதை நிரூபித்து, தேர்வில் தேர்ச்சி பெற்றார். இயேசு மார்த்தாவின் பெயரை இரண்டு முறை அழைத்தார், அவருக்கு ஊழியம் செய்வதில் மரியாள் பெற்ற உயர்வை அவளுக்குக் கொடுக்கிறார்.

புதிய ஏற்பாட்டில் ஒரு காட்சி

இயேசு பன்னிரு சீடர்களுடன் தனது கடைசி இரவு உணவைச் சாப்பிட்டார், அவர் காட்டிக்கொடுக்கும் நேரம் நெருங்கி வருகிறது. ஆனால் சீடர்கள் தங்களில் யார் பெரியவர் என்று சண்டையிடுகிறார்கள். வரவிருக்கும் இறையாட்சில் இஸ்ரவேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள் என்று இயேசு அவர்களிடம் கூறுகிறார். பின்னர் அவர் சீமோன் பேதுருவை தனிமைப்படுத்துகிறார்:

சீமோனே, சீமோனே

31 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைப் போல உங்களைப் புடைக்கச் சாத்தன் அனுமதி கேட்டிருக்கிறான்.
32 ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்.: (லூக் 22:31-32)

மார்த்தா வீட்டிற்கு வெளியே.

அடுத்த முறை மார்த்தாவை நற்செய்தியில் பார்க்கும்போது, அவளுடைய சகோதரன் இலாசர் (யோவான் 11) இறந்த பிறகுதான். அவளுடைய அன்புச் சகோதரர் இலாசர் இறந்துவிடுகிறார். இலாசர் இறந்தபோது இயேசு ஊருக்கு வெளியே இருந்தார்; இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள். அவள் சாலைக்குப் புறப்பட்டுச் செல்கிறாள், மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். (வச 21-22) இயேசு எதையும் செய்ய முடியும் என்று அவள் உண்மையிலேயே நம்பினாள்: இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். இயேசுவின் பதில் மார்த்தாவால் இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஓர் உண்மையால் நிரம்பியுள்ளது, மார்த்தா அவரிடம் ,”இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். ' இது மார்த்தாவுக்கு மட்டும் உண்டான கேள்வி இல்லை. நம் அனைவருக்கும் உண்டான கேள்வி மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார். ஒற்றை வரிக்குள் ஒளிவெள்ளம் பாய்ச்சுகிற நம்பிக்கை வாக்கு மார்த்தாவின் வார்த்தைகள் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன:இயேசுவின் வார்த்தைகளுக்கு மார்த்தா அளித்த பதில் கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது. மார்த்தாளின் ஆழமான விசுவாசத்தைப் பார்க்கிறோம்.

இயேசுவை நம்புவதாக முதலில் அறிவித்தவர் பேதுரு.

“ ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? “ என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் “ என்று உரைத்தார். அதற்கு இயேசு, “ யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். (மத்தேயு 16:16)

மார்த்தாவின் புரிதல்

இயேசு இந்த வார்த்தைகளைப் பேசியபிறகு, மார்த்தா பதிலளித்தார், பின்வருவது மார்த்தாவுக்கும் இயேசுவுக்கும் இடையே ஓர் அழகான சொற்பொழிவு. 24-27 வசனங்களில் மார்த்தா நம்பியதையும், கடவுளின் திட்டத்தைப் பற்றி அவள் அறிந்தவற்றையும் நாம் நிறையப் பார்க்கிறோம்.
இங்கு ஒன்று கவனிக்க வேண்டும்.
இயேசு இன்னமும் கல்லறைக்குப் போகவில்லை, லாசரை உயிர்ப்பிக்கவில்லை. ஆனால் மார்த்தா அதற்கு முன்னமேயே தன் நம்பிக்கை அறிக்கையை அறிவிக்கின்றாள். லாசர் உயிர்த்த பிறகு கூறியிருந்தால் அதிசயத்தின் பேரில் கூறியிருக்கிறாள் எனலாம்.
குழப்பத்தின் மத்தியில் பேசப்பட்ட மார்த்தாவின் விசுவாச அறிக்கை, இறைவனுடன் இணைந்த இதயத்தை நிரூபிக்கிறது. அதனால் அவள் அவனுடைய வழிகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவள் அவரை நம்புகிறாள்.
ஆஹா! மார்த்தா என்னே விசுவாச அறிக்கை!
மார்த்தாவின் விசுவாசம் நம் அனைவருக்கும் தெரியும்படி பிரகாசிக்கிறது.
நீதியின் பாதையைத் தழுவவும், இறைவனின் படிகளைப் பின்பற்றவும், கடவுளுடைய அரசில் பிள்ளைகளாக நம்மை உருவாக்கவும் இது நமக்கு நினைவூட்டுகிறது.
அவள் இதை உண்மையாக நம்புகிறாளா என்று இயேசு அவளிடம் கேட்டபோது, மார்த்தா உடனடியாக, தெளிவான பதிலை அளிக்கிறாள். இறந்துபோன தன் சகோதரன் லாசருக்காக அவள் வருத்தப்பட்டாலும், கடவுளுடைய சக்தி எல்லையற்றது, அவருடைய அன்பு நித்தியமானது என்ற அறிவிலிருந்து அவள் பலத்தைப் பெறுகிறாள். அவள் ஆம் என்கிறாள்
எப்பொழுதும் வீட்டுப் பணிப்பெண், நடைமுறை பெண்மணி, மார்த்தா-இவர் இறைவன் மீது தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொண்டவர், நமது சொந்த வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், மார்த்தாவிடம் இயேசுவின் கேள்வி நம்மை எதிர்கொள்கிறது. நாம் மார்த்தாவின் குரலை எதிரொலிக்கிறோம், அதே தெய்வீக ஒளியில் நிலைத்திருக்கும் கண்களுடன், கிறிஸ்துவின் உடலில் ஒன்றாக நம் இதயங்கள் துடிக்கின்றன.
நமது ஆளுமைகள் எதுவாக இருந்தாலும், மார்த்தாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும், நம் எல்லா உணர்வுகள் மற்றும் ஏமாற்றங்களுடன் இயேசுவிடம் வருவது எப்படி இருக்கும் என்பதையும் அவள் நமக்குக் காட்டுகிறாள். கவனச்சிதறல்கள், கோரிக்கைகள் அல்லது மரணங்கள் எதுவாக இருந்தாலும் கிறிஸ்துவில் நிலைத்திருக்கக்கூடிய நம்பிக்கையைக் காண்பிப்பதன் மூலம், நம்முடைய தவறுகளைப் பொருட்படுத்தாமல் இயேசுவை எப்படி நம்புவது என்பதை மார்த்தா நமக்கு முன்மாதிரியாகக் காட்டுகிறார்.

இயேசு, "லாசரே, வெளியே வா!"
வெளியே வந்தது லாசர் மட்டுமல்ல.
இயேசுவின் குரலுக்குத் தந்தை செவி சாய்த்தது வெளியே வந்தது.
மார்த்தாவின் நம்பிக்கை வெளியே வந்தது.
பரிசேயரின் வஞ்சகம் வெளியே வந்தது.
சுற்றியிருத்தவர்களின் விசுவாசம் வெளியே வந்தது.
இங்கே மார்த்தாவின் செயலைக் கவனிப்போம்.

இயேசு வருவதைக் கேட்டு மார்த்தா அவரை எதிர்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்று சந்தித்தாள். இயேசுவை சந்தித்த பின்பு மீண்டும் வீட்டிற்கு வந்து தன் சகோதரி மரியாவை ரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். அவள் அதைக் கேட்டவுடனே, மரியா சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள். இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
இங்கே ஒரு கேள்வி

ஏன் அவரை வீட்டைவிட்டு வெளியே சென்று சந்தித்தாள்? பின் தன் சகோதரி மரியாவிடம் ரகசியமாகப் பேசுகிறாள்? காரணம்
விவிலியம் பதில் சொல்லுகிறது (யோவான் அதிகாரம் 11)
இயேசு யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீடர்கள்; ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா? என்றார்கள்.
யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசுவுக்கு இங்கே எதிரிகள் அவரைக் கொல்ல திட்டமிட்டு இருக்கின்றார்கள். என்று பாதுகாப்பு கருதியே வீட்டைவிட்டு வெளியே சென்றதும், மரியாவிடம் ரகசியமாகப் பேசியதும் காரணமாகும்
இங்கே இரண்டு விஷயங்கள் தனித்து நிற்கின்றன:
மார்த்தா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.

முதலாவதாக, அவர் தன் சகோதரனைக் குணமாக்குவார் என்பதில் அவளுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இரண்டாவதாக,
“உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே.” என்றபோது "ஆம், ஆண்டவரே” என்ற மார்த்தா வார்த்தைகள் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.
மார்த்தா – நம்பிக்கையின் உருவம்
மரியா - திருவடி சரணம்
இயேசு - மலரடி தொழுவோம்
மார்த்தா மீண்டும் சமையலறையில்.
மார்த்தா சம்பந்தப்பட்ட வேதாகமத்தின் இறுதிக் கதை.
எருசலேமுக்குச் செல்லும் வழியில், இயேசுவும் அவருடைய சீடர்களும் மார்த்தா, மரியா மற்றும் புதிதாக மீட்கப்பட்ட லாசர் வழங்கும் இரவு விருந்தில் கலந்துகொள்வதற்காக வந்தார்கள்.

யோவான் நற்செய்தி நமக்குச் சொல்கிறது, எல்லோரும் உணவருந்துவதற்கு உட்கார்ந்து "மார்த்தா பரிமாறினார்." மார்த்தா மீண்டும் இயேசுவுக்காக உணவைத் தயாரித்து, அவரும் அவருடைய நண்பர்களும் உணவும் பானமும், இளைப்பாறும் இடமும் இருப்பதை உறுதி செய்தாள். மேலே சென்று, சமையலறைக்குள் எட்டிப் பார்த்தால் மார்த்தா சேவை செய்வதையும் மற்றும் மரியாள் வாழ்க்கை அறையில், இயேசுவின் காலடியில் அமர்ந்து, சேவை செய்வதையும் காண்கிறோம்

மேலோட்டமாகப் பார்த்தால், எதுவும் மாறவில்லை என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் தவிர. இந்த இரண்டு இரவு உணவு நிகழ்வுகளுக்கு இடையில், மார்த்தாவிற்குள் ஒரு மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

லூக்காவும் யோவானும் மார்த்தாவின் காட்சிகளுக்கு முன்னும் பின்னும் காண்கிறோம்.
முதலில் உணவு தயாரிப்பதிலும் விருந்தினர்களுக்குப் பரிமாறுவதிலும் கவனம் மாறிவிட்டது.
இரண்டாவதாக கிளர்ச்சியடைந்த, திசைதிருப்பப்பட்ட மார்த்தா அமைதியான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த மார்த்தாவாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவள் கிறிஸ்துவுடன் நெருங்கி வளர அவளுக்குள் ஒரு ஆழமான உண்மையை இயேசு வெளிப்படுத்துகிறார்.

இயேசு அவரிடம், “உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். '
மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார். (வச. 25-27).

இது மார்த்தாவின் முழு நம்பிக்கை அறிக்கை, இதன் மூலம் அவர் இயேசுவின் அடையாளத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்! அவளுடைய எல்லா செயல்களும் கிறிஸ்துவின் மீதான அவளுடைய அன்பு, பக்தி மற்றும் நம்பிக்கையின் நிரம்பி வழிவதிலிருந்து அதன் நோக்கத்தையும் சக்தியையும் பெறுகின்றன நிறைவு செய்வோம்

மார்த்தாவின் கதையிலிருந்து சில பாடங்கள் இங்கே:
இயேசுவை நம்புங்கள்: மார்த்தாவின் கதை, நம்முடைய கவலைகளை இயேசுவின் மீது செலுத்தவும், நம்முடைய கவலைகளை அவரை நம்பவும் கற்றுக்கொடுக்கிறது. கவலையைப் பிரார்த்தனையுடன் மாற்றவும்: நாம் கவலைப்படும் நேரத்தை ஜெபம், நன்றி செலுத்துதல் மற்றும் வழிபாட்டுடன் மாற்ற வேண்டும். இயேசுவை ஆதரிக்கவும்: இயேசுவையும் அவருடைய சீடர்களையும் ஆதரித்த பெண்களில் மார்த்தாவும் ஒருவர். கடின உழைப்பாளி மற்றும் பொறுப்புடன் இருங்கள்: மார்த்தா பெரும்பாலும் கடின உழைப்பாளி மற்றும் பொறுப்பான பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார், அவர் தனது குடும்பத்திற்கும் வீட்டிற்கும் அர்ப்பணித்துள்ளார்.
எனக்குள் கிறிஸ்து
கிறிஸ்துவுக்குள் நான்
மழைத்துளிக்குள் வானம்
நமக்குள் நம்பிக்கை
தொடங்குவோம் பயணத்தை...

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  யூபிலி மலர்