
சிலுவைப்பாதைகளின் தொகுப்பு
உட்புகுமுன் ஒரு நிமிடம்...
சிலுவைப் பாதை என்கிற உன்னத சாதனம், பாடுகளின் பாதையாகவும், பரிகாரப் பாதையாகவும், தவக்காலத்துக்கு மட்டுமே உரிய ஒரு பக்தி முயற்சியாகவும், பார்த்துப் பழகிவிட்ட நம்மில் பலருக்கு, அது கிறிஸ்துவின் பாதை மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவனி(ளி)ன் அன்றாடப் பாதையும் அது தான் என்பது, பல சமயங்களில் புலப்படுவதில்லை. "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (லூக். 9:23) என்பதுதான் கிறிஸ்து தம் சீடருக்கு விடுக்கும் சவால் நிறைந்த அழைப்பு.
அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறவர்கள், சிலுவைப் பாதையை
1. ஆசீர்வாதத்தின் பாதை 2. மன்னிப்பின் பாதை 3. நேர்மையாளரின் பாதை 4. வெற்றியின் பாதை 5. மரியாவின் பாதை 6. இரக்கத்தின் பாதை 7. தேர்ந்து கொள்ளும் பாதை 8. விடுதலையின் பாதை 9. சுகம் தரும் பாதை 10. தலைவரின் பாதை 11. தவிர்க்க முடியாப் பாதை 12. நன்றியின் பாதை
என பலப் பரிமாணங்களில் பார்த்து, ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் அல்ல, "ஆண்டு முழுவதும் ஆண்டவரின் பாதையில்" பயணிக்க சிலுவைப் பாதை பக்தி முயற்சியை பயன்படுத்த முயலுவர். அத்தகையோருக்கு உறுதுணையாக, திருவழிபாட்டு காலத்திற்கு ஏற்றாற்போலவும், ஒவ்வொரு மாதத்திற்கு ஏற்றாற்போலவும், ஒரு மைய சிந்தனையை வலியுறுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட சிறப்பு சிலுவைப் பாதைகள் இவை.
இந்த யூபிலி ஆண்டிலே எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் ஆண்டு முழுவதும் ஆண்டவரின் பாதையில் பயணிக்க இது துணை புரிய வேண்டும் என்பதே நம் விருப்பமும் வேண்டுதலும்...
மார்ச் மாத சிலுவைப்பாதை
🕇 நேர்மையாளரின் பாதை 🕇
PDF கோப்பாக உள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.