விளக்கின் திரி ஒன்று விடிவெள்ளியானது
விவிலியத்தின் ஆன்மீக சாரமாக விளங்குவது இயேசு மனிதகுலத்தின் பாவங்களுக்காக மனிதனாகப் பாடுகள் பட்டு மரிக்க வேண்டும். அதை நம்பிக்கை, விசுவாசம் கொண்டு பின்தொடர வேண்டும் இதனைத் நான்கு நற்செய்திகளும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
மனிதனாகவும் - கடவுளின் மகனாகவும் இயேசு யார், அவரை மனுமகனாகவும், கடவுளின் மகனாகவும் காண்கிறோம்.
நான்கு நற்செய்திகளும் இயேசு கிறிஸ்துவின் அடையாளத்தைப் பற்றி உலகிற்கு கொண்டு வரும் செய்தியில் ஒன்றுபட்டுள்ளன. நம்முடைய இயேசு மனிதன் என்றும் கடவுளின் மகன் என்றும் அறிவிக்கிறார்கள். மாற்குவின் நற்செய்தியின் தொடக்கத்தில், கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: (மாற்கு 1:1). இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். (மாற்கு 16:19) யோவானின் நற்செய்தி, "வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது" என்று தொடங்குகிறது. இறுதியில் தோமா கிறிஸ்துவின் காலடியில் விழுந்து, "என் ஆண்டவரே, என் தேவனே" என்று அதன் முடிவைக் காண்கிறோம்.
மத்தேயுவின் நற்செய்தி இயேசு இம்மானுவேல், கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற அறிவிப்போடு. தொடங்குகிறது; கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவரை கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள் என்று தொடங்கிய நற்செய்தி புதிய சீடர்கள் தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில் திருமுழுக்கு பெற வேண்டும் என்ற அறிக்கையுடன் முடிவடைகிறது. லூக்காவின் நற்செய்தி மரியாளுக்கு "அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்." என்ற அறிவிப்போடு தொடங்குகிறது, தொட்டியில் கிடந்த இயேசுவை, இடையர்கள் இறைமைந்தனாக, ஞானியர் யூதருக்கு ராஜாவாகவும் பார்க்கிறார்கள்.
இயேசு விண்ணுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.(லூக்கு 24:51)
அனைத்து நற்செய்தி எழுத்தாளர்களும் கிறிஸ்துவின் தெய்வீகத்தின் இந்த நம்பிக்கையில் ஒன்றுபட்டனர், கிறிஸ்து தந்தை மற்றும் ஆவியுடன் ஒரே உயிருள்ள கடவுளாக இருக்கிறார்.
நூற்றுவர் தலைவன் செந்தூரியன்
யூதரின் அரசன் - எனும் நற்செய்தியை முதன் முதலில் எழுத்து வடிவில் அறிக்கையிட்ட பெயர்ப்பலகை சிலுவையின் உச்சியில் பிரசுரமாகியிருக்கிறது. அவர் யூதர்களின் அரசர் என்பது அவரது தலைக்கு மேல் எழுதப்பட்ட குற்றச்சாட்டு. அதைக் கண்ட செந்தூரியன் அவர் ஒரு நூற்றுவர் வீரர். "உண்மையாகவே இவர் இவர் உண்மையாகவே இறைமகன் " (மத்தேயு 27:54) என்று நூற்றுவர் தலைவன் கூறுவதன் முக்கியத்துவம் என்ன?
மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாயிருந்தான் என்று சொல்லி, இறைவனை மகிமைப்படுத்தினான்.(லூக்கா 23:47) சின்ன வார்த்தைகளால் செந்தூரியன் சொன்ன வார்த்தைக்களுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது. நூற்றுவர் தலைவர் கூறியதை இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம். இயேசு தம்முடைய ஆவியைப் தந்தைவிடம் ஒப்படைத்தபின் சிலுவையில் இறந்த இயேசுவை நிமிர்ந்து பார்த்து, "உண்மையாகவே இந்த மனிதன் உண்மையாகவே இறைமகன் !" இங்கே செந்தூரியன் இறைவனின் மனித இயல்பைப் பற்றி இரண்டு விதமாகக் கூறுகிறான். முதலாக, நம் இறைவனின் மனித இயல்பைப் பற்றி - அவர் ஒரு மனிதன் என்று செந்தூரியன் சொன்னதை நாம் முதலில் கவனிப்போம். மேலும் இயேசு முற்றிலும் மனிதராக இருந்தார். பரிசுத்த ஆவியின் மூலம் மரியாவின் வயிற்றில் கருவுற்றார். அதன் காரணமாகவே அவர் மனிதகுலத்தின் பாவங்களுக்காக மனிதனாக மரிக்க முடிந்தது.
இரண்டாவதாக அவர் "கடவுளின் மகன்" என்று கூறுகிறான். மேலும், இயேசு முழுமையாகக் கடவுளின் மகனாகவும் இருந்தார். அவர் இறைமகனாக இருப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை; கடலை அதட்டினார், இறந்த லாசரை உயிர்ப்பித்தார், நோயாளிகளை குணப்படுத்தினார், குருடனுக்கு பார்வை தந்தார். நீரை ரசமாக்கினார் ஐந்து அப்பம் ஐயாயிரம் பெருகியது.
அவர் இப்போதும் என்றென்றும் முழு கடவுளாகவும், முழு மனிதராகவும், இரண்டு இயல்புகளுடன், ஒரு நபரில் காணப்பட்டார். மத்தேயுவில், செந்தூரியன் மட்டும் உணரவில்லை அவனுடன் இருந்த மற்ற வீரர்களும் உணர்ந்தார்கள் என்றார்.(மத்தேயு 27:54) இந்த நூற்றுவர் தலைவர் பார்த்த அனைத்தும் அவரது ஆன்மாவை ஆழமாகப் பாதித்தன. லூக்கா 23:47 அதையெல்லாம் பார்த்தபோது, “நிச்சயமாக இவன் நீதிமான் என்று சொல்லி, கடவுளை மகிமைப்படுத்தினான்” என்று நமக்குச் சொல்கிறது. அதன் அடித்தளம் நம்பிக்கைதான். கல்வாரி காட்சிகளை முழுமையாக உள்வாங்கி மனதில் விரித்தெடுத்து அவற்றில் லயித்து உய்த்துணர்ந்து கூறுவான். மார்த்தா, பேதுரு ஆகியோர் இயேசுவிடம் "கடவுளின் மகன்” உறுதியாகக் கூறினார்கள் செந்தூரியன் இயேசு இறந்த பிறகு "கடவுளின் மகன்” என்பதை உணர்ந்து கூறுகிறான். கிறிஸ்து கடவுளின் குமாரன் என்ற முதல் வாக்குமூலம் இதுவாகும் இது ஒரு அமைதியான, நியாயமான, பிரதிபலித்த கருத்து. அது மிகவும் எதிர்பாராத மூலத்திலிருந்து வந்தது.
இந்தச் படைவீரர்கள் அற்புதங்களைப் பார்த்ததில்லை, கிறிஸ்துவின் பிரசங்கங்களைக் கேட்கவில்லை, ஆனால் கேலி மற்றும் துன்பங்களுக்கு இயேசுவின் பதிலைக் கண்டார். கிறிஸ்துவை இகழ்வதற்கு அவர் மிகவும் அழுத்தத்தில் இருந்தார் - புறமத அழுத்தம் மற்றும் அவரது மேலதிகாரிகளின் சக அழுத்தம் மற்றும் யூத அழுத்தம் - இருப்பினும் அவர் இயேசு கடவுளின் மகன் என்று ஒப்புக்கொண்டார். அன்று அவருடைய சிலுவையைச் சூழ்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் பாவிகள், குற்றவாளிகள், வீரர்கள், மதவாதிகள், குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் இரண்டு சிறப்பு மனிதர்கள் இருந்தனர். ஒருவர் கொலை செய்யப்படுவதற்காகக் கல்வாரிக்கு வந்த ஒரு குற்றவாளி. மற்றவர் மனிதர்களைக் கொலை செய்ய அன்று கல்வாரிக்கு வந்த ஒரு ரோமானிய நூற்றுவர் தலைவர். அந்த நாள் முடிவதற்குள், இந்த இருவரும் புதிய உயிரினங்களாக இருப்பார்கள், அந்த நடு சிலுவையில் மரிக்கிறவரின் கிருபையினாலும் பலியினாலும் காப்பாற்றப்படுவார்கள். என்னை நினைவில் கூறும் என்ற மூன்று வார்த்தையில் நல்ல கள்ளன் ஏசுவை வேண்டிக்கொண்டு வானகம் சென்றான். நேரில் பார்த்த செந்தூரியன் கடவுளின் மகன் என்றான்.
செந்தூரியன் இவன் கடவுளின் அரசைக் கண்களில் கண்டவன். கானாவூரில் வந்த ரசத்தை சுவைத்தவன் விளக்கு தண்டின் மேல் வைத்த விளக்கு. தேடி கண்டு பிடித்த ஆடு. நல்ல நிலத்தில் விழுந்த விதை. சாரமுள்ள உப்பு.
வானமும் பூமியும்
இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “ என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் “ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. இயேசு தோற்றம் மாறினார்., “ என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் “ என்று ஒரு குரல் ஒலித்தது. இயேசுவை தன் மகனாகத் தந்தை மகிழ்ந்தபொழுது வானம் திறந்தது. அவர் சிலுவையில் இறந்தபொழுது வானம் இருள் சூழ்ந்தது இப்பொழுது பூமியிலிருந்து செந்தூரியன் குரல் இயேசு "கடவுளின் மகன்" என்று ஓங்கி ஒலித்தது
வெரோனிகா துணியில் இயேசுவின் முகம்
செந்தூரியன் நெஞ்சில் கடவுளின் மகன்
கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதில் பல அசாதாரண அம்சங்களைக் காணலாம் ஒரு பெரிய நிலநடுக்கம். பூகம்பம் பாறைகள் தெறித்தன, நடுப்பகல் இருள் சூழ்ந்தது மறைந்த புனிதர்களின் கல்லறைகள் திறக்கப்பட்டன, கோவிலின் திரை மேலிருந்து கீழாகக் கிழிந்தது நிச்சயமாக இது கடவுளின் மகன் என்று ஒரு மனிதனின் கூற்றும் எஞ்சியிருக்கிறது. இயேசு இறந்த பிறகு அவரை நம்பிக்கையோடு "கடவுளின் மகன்” முதலில் உலகுக்கு அறிவித்தவன் செந்தூரியன் என்ற விளக்கின் திரி ஒன்று விடிவெள்ளியானது. நம்பிக்கை பயணத்தைத் தொடர்வோம்


