கண்களில் தெரியும் கடவுளின் அரசு
அ.அல்போன்ஸ்- திருச்சி
திருவிவிலியத்தில் "இயேசு அவரிடம், “ நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.” என்று மத்தேயு 8:20 மற்றும் லூக்கா 9:58-ல் கூறப்பட்டுள்ளது.
"நரிகள்" அது ஒன்றும் செய்வில்லை வளைகளைக் கட்டவில்லை மாறாக ஏற்கனவே யாரோ கட்டியிருந்த வளைகளில் சென்று தங்கிக்கொள்கிறது. பறவை அது தன் எதிர்காலத்திற்கு, குஞ்சுகள் பொரித்து அடை காக்க கூட்டில் வாழத் தொடங்குகிறது. நரிகள் இறந்த காலத்தைக் குறிக்கிறது. பறவை எதிர்காலத்தைத் தெரிவிக்கிறது.
மனிதன் ஒன்று இறந்த காலத்தில் இருக்கிறான் ஏற்கனவே கொண்டிருந்த எண்ணங்களில் ஒட்டிக்கொண்டு அல்லது எதிர்காலத்தை நோக்கி ஓடுகிறான் மனுமகனுக்குத் தலை வைக்க இடம் இல்லை. இது இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஒரு வழி உண்டு என்பதையும் இது காட்டுகிறது. உவமை மிகவும் எளிது. எளிமையானது எப்போதும் புரிதலுக்கு அப்பாற்பட்டது, அதனால்தான் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. கடவுள் எளிமையான விஷயம், முற்றிலும் எளிமையான விஷயம். அது எப்போதும் அப்படித்தான். ஒரு விஷயம் எவ்வளவு எளிமையானதோ, அவ்வளவு புரிந்துகொள்வது கடினம். புரிந்து கொள்ள, ஒரு நிகழ்ச்சி ஒன்று தேவை.
இறந்த நிகழ், எதிர் காலங்களில் வாழ்ந்த நற்செய்தி மனிதர்களை கொஞ்சம் பார்ப்போம்.. இதைப் புரிந்து கொள்ளச் சமாரியா பெண்ணிடமிருந்தே கற்றுக்கொள்ளலாம். அவள் இயேசுவிடம் பேசும்பொழுது எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார். யோவான்4:12. இறந்த கால எண்ணங்களில் அவள் கேட்கிறார். அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார்.. இப்பொழுது எதிர் கால நினைவுகளில் மாறி விடுகிறாள். இயேசு அவளை நிகழ் காலத்திற்குக் கொண்டுவர ஒரு யுக்தியை கையாளுகிறார். உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே” என்றார். அப்பெண் அவரிடம், “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். (யோவான் 4:18,19)
நம் அனைவரும் ஒன்று இறந்த காலத்தில் வாழ்கிறோம் அல்லது எதிர் காலத்தில் வாழ்கிறோம். நிகழ் காலத்திற்கு வந்து விட்டார். இயேசுவின் வார்த்தையை உணர்ந்தார். ஊருக்குள்ளேபோய், மக்களிடம் கிறிஸ்துவை அறிவித்தார்.
இரண்டாவதாக நிக்கதேம் என்ற பரிசேயாிடம் இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார்.. நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார்.. தன் கடந்த கால எண்ணங்களைக் கொண்டு கேள்வியைத் தொடங்குகிறார். அவரால் நிகழ் கால இயேசுவுடன் அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.. மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்? என்றார் இயேசு.. எதிரில் நிற்கும் இயேசுவை சமாரியா பெண்ணைப் புரிந்து கொண்டதை போல நிக்கதேம் கிறிஸ்துவை புரிந்து கொள்ள முடியவில்லை.
மூன்றாவது இயேசு அவர் தோற்றம் மாறியபோது பேதுரு இயேசுவைப் பார்த்து, “ ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? “ என்றார். பேதுரு எதிர் காலக் கனவுகளில் பேசுகின்றார்..
நான்காதாவாக இயேசு பரிசேயர் வீட்டில் பந்தியிலிருக்கும்போது ஒரு பெண் அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் கூந்தலால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, விலையேறப்பெற்ற பரிமளதைலத்தைப் இயேசு தலையின் மேல் ஊற்றினார். நிகழ் காலத்தில் வாழ்கின்ற பெண் இவர்.
ஆறாவதாகக் கல்வாரியில் சிலுவையில் தொங்கிய இயேசுவை அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா “ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். கடந்த காலங்களில் வாழ்பவர்கள் இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். மற்றவர்களோ, “பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம் “ என்றார்கள். எதிர் காலங்களில் வாழ்பவர்கள் ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.
நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன் “ என்றார்கள். நிகழ் காலங்களில் வாழ்பவர்கள். இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள், முதல் வகை என்பது மனம் இல்லாத மகிழ்ச்சியைக் கொண்ட மனிதன். குரு அந்த வகையான மனிதருடன் முற்றிலும் மாறுபட்ட முறையில் நடந்து கொள்கிறார், ஏனென்றால் அவர் புரிந்துகொள்வார் என்பது அவருக்குத் தெரியும். மனம் இல்லாத நிலைதான் உயர்ந்த நிலை. நாம் மனம் இல்லாத நிலையில் முற்றிலும் அமைதியாக இருக்கும்போது, நமக்குள் எதுவும் அசையாமல் இருக்கும்போது, எந்த யோசனையும், கடந்த எதிர் காலச் சிந்தனையும் இல்லாதபோது, நாம் தெளிவான நிலையில் இருக்கிறோம். இரண்டாவது வகை மனிதர்கள், சில சமயங்களில் பழைய தீர்மானங்களில் திரும்பிச் சென்று, மனதால் பயன்படுத்தப்படுகிறார்கள், சில சமயங்களில் எதிர் காலச் சிந்தனைகளுடன் இருந்துகொண்டு நிகழ் காலத்தின் உண்மை தன்மையைப் பார்க்கத் தவறி விடுகிறோம். மனம் இல்லாத நிலையில் முற்றிலும் அமைதியாகப் பார்க்கும்பொழுதுதான்… கிணற்று அருகில் கண்ட இயேசுவை மெசியாவாகக் காணலாம். சிலுவையில் இறந்த இயேசுவை கடவுளின் மகனாகக் காணலாம். கல்லறையில் கண்ட தோட்டக்காரரை உயிர்த்த கிறிஸ்துவாகக் காணலாம். இவர்கள் கானாவூர் நீரை ரசத்தைச் சுவைத்தவர்கள்.
இயேசு”இப்போது மற்றும் இங்கே" என்ற தனது கருத்தாக்கத்துடன் நிகழ்காலத்தில் வாழ்வது பற்றி அடிக்கடி பேசினார். இயேசு கூறினார், "கடந்த காலம் இனி இல்லை; எதிர்காலம் இன்னும் இங்கே இல்லை. உண்மையானது நிகழ்காலம் மட்டுமே." வலைகளில் வாழும் நரிகளும் கூடுகளில் வாழும் பறவைகளும் இதைத்தான் சொல்லுகின்றன. இதோ, கடவுளின் அரசு உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.(மத்17:21) நிகழ்காலத்தில் இந்தக் கவனம் வாழ்க்கையுடன் ஆழமான தொடர்பை அனுமதிக்கிறது, இது உள் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நிறைவை ஏற்படுத்துகிறது. நிகழ்காலத்தில் வாழ்வது: மத்தேயு 6:34 இல், இயேசு எதிர் காலத்தைப் பற்றிக் கூறுகிறார்: ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. ” அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
இயேசு: இறந்த காலத்தைப் பற்றிக் கூறுகையில் கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் கடவுளின் அரசுக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். ஏனென்றால் கடந்த காலத்தில் பார்க்கும் எந்த மனிதனும் நிகழ்காலத்தில் இருக்க முடியாது. பின்னிட்டுப் பார்ப்பது என்பது கடந்த காலத்தைக் குறிக்கின்றது. கடந்த காலத்திலிருந்து நாம் எடுத்துச் செல்லும் அனைத்தும் ஒரு சுமை, ஒரு தடை, அது நம்மை நிகழ்காலத்திற்குத் திறந்திருக்க அனுமதிக்காது. நாம் திரும்பிப் பார்க்கிறோம் அல்லது எதிர்காலத்தைப் பார்க்கிறோம் இப்படித்தான் நாம் நிகழ்காலத்தை இழக்கிறோம். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கடந்த காலம் மனதில் வரத் தொடங்கும்போது, நிதானமாக இருப்போம், அமைதியாக இருப்போம், விழிப்புடன் இருப்போம், வார்த்தைகளால் கூடச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.விழிப்புடன் இருக்க வேண்டும். தலை சாய்க்க இடமில்லை அதாவது தங்க ஒரு இடம் இல்லாமல் தொடர்ந்து பயணத்திலேயே இருக்க வேண்டும் என்று சொல்லவருகின்ற வசனங்களில் ஒரு குறிப்பை நற்செய்திகளில் காணலாம். சீடத்துவப் பயணத்தின் கருப்பொருள் நன்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தலை சாய்க்க இடமில்லை என்று சொல்ல வருகின்ற வரிகளுக்கு முன்பும், பின்பும் லூக்காவில் தொடர்ந்து வரும் ஏழு வரிகளைப் பார்ப்போம் (லூக் 9:51-62) இது "போக, செல்ல, பயணம் செய்ய" என்று பொருள்படும் ஒரு வார்த்தை வருகிறது.
- வசனம் 51. இங்கே எருசலேமுக்குள் பயணிக்க உறுதியாகத் தீர்மானித்துள்ளது.
- வசனம் 52-- அவர்கள் ஒரு சமாரிய கிராமத்திற்குள் போய் நுழைகிறார்கள்.
- வசனம் 53-- ஏனெனில் அவரது பயணத்தின் இலக்கு எருசலேம்.
- வசனம் 56-- அவர்கள் வேறொரு கிராமத்திற்குள் போகப் பயணித்தார்கள்.
- வசனம் 57-- அவர்கள் வழியில் பயணித்தபோது, ஒரு குறிப்பிட்ட நபர் அவரிடம் கூறினார்.
- வசனம் 58 -- தலை சாய்க்க இடமில்லை என்றார்.
- வசனம் 59 – "நான் முதலில் போய் என் தந்தையை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்."
- வசனம்.60-- "ஆனால் நீ போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் என்றார்.
ஒவ்வொரு வரிகளிலும் பயணத்தைக் குறிக்கும் சொல்லாகவே காணப்படுவது என்ன அதிசயம், அற்புதம். தலை சாய்க்க இடமில்லை என்று சொல்ல வரும் வரிகளில் கூட நிற்கவில்லை. பத்து வரிகளில் ஏழு வரிகள் பயணம் மற்றும் பயணத்தைக் குறிக்கும் சொற்கள் வருகின்றது வசனங்களும் பயணித்துக்கொன்டே போகின்றது. நாமும் பயணத்தைத் தொடருவோம்.