உயிருள்ள தண்ணீரின் தாகம்

அ.அல்போன்ஸ் - திருச்சி

இயேசுவின் பாடுகளின் போது அவர் சவுக்கால் அடிக்கப்பட்டார். அவரது தலையில் ஒரு முள் கிரீடம் அழுத்தப்பட்டது. அவர் தனது சிலுவையைத் தோலுரித்து, வெளிப்படும் முதுகில் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் அவரது கைகள் மற்றும் கால்களில் ஆணிகள் அடிக்கப்பட்டன. பின்னர் இயேசு ஆறு மணி நேரம் சிலுவையில் தொங்கினார். கடுமையான சோர்வு மற்றும் வேதனையான வலியை அனுபவித்தார். சித்திரவதையின் மத்தியில், இயேசு மிகவும் தாகமாக இருந்தார். அவரது உடல் தாகம் அவர் அனுபவித்து வந்த வேதனையைக் குறிக்கிறது.

"எனக்குத் தாகமாக இருக்கிறது"

“யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்.” யோவான் 7:37
water கிணற்றருகே இருந்த சமாரியப் பெண்ணிடம் இந்தத் தண்ணீரைக் குடிக்கும் அனைவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும், ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவர்களுக்கு ஒருபோதும் தாகம் எடுக்காது.” அவர்தான் இப்போழுது "தாகமாக இருக்கிறேன்” என்றார்.
இயேசு சமாரியப் பெண்ணிடம் குடிக்கக் கேட்டபோது, சிலுவையிலிருந்து பேசிய அதே கிரேக்க வார்த்தையைத் தாகத்திற்குப் பயன்படுத்தினார் என்பது கொஞ்சம் சுவாரஸ்யமானது.
இயேசுவின் "தாகமாக இருக்கிறேன்" என்ற எளிய இரண்டு வார்த்தைகள்.
இது வெறும் உடல் ரீதியான தண்ணீருக்கான தாகத்தை மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு மீட்பையும் அன்பையும் மற்றவர்களுக்காகத் தன்னை முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பமாகவும் ஆழ்ந்த ஆன்மீக ஏக்கத்தையும் குறிக்கிறது,

உயிருள்ள தண்ணீருக்குத் தாகம் எடுத்தது

இயேசு ஒருபோதும் வீணாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் செய்த மற்றும் சொன்ன அனைத்திற்கும் ஒரு நோக்கம் இருந்தது. புதிய ஏற்பாடு இயேசுவை முழு மனிதனாகவும் முழுத் தெய்வீகமாகவும் சித்தரிக்கிறது. கிறிஸ்துவுக்கு இரண்டு வேறுபட்ட மற்றும் எதிரெதிர் இயல்புகள் இல்லை. இயேசுவுக்கு ஒரே இயல்பு உண்டு - சமமாக மனிதனாகவும், சமமாக தெய்வீகமாகவும் இருந்தார். தனது மரணத்திற்கு எல்லைக்குத் தள்ளப்படும்போது அவர் உடல் தாகத்தை உணர்கிறார். அவரது உடல் அனைவரும் பார்க்கவும், கேலி செய்யவும் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளது. சிலுவையில் தொங்கும் இயேசுவின் தாகம் என்ன? அன்பையும் கருணையையும் ஊற்றுவதற்கான விருப்பம். அந்தத் தாகத்தில், அவர் நமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுக்க விரும்புகிறார்; கிணற்றில் இயேசு அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த அதே வாழ்வு தரும் தண்ணீர்.

நித்திய நீரூற்று

பாஸ்கா பண்டிகையின்போது, (விடுதலைப்பயணம் 12:22) யூதர்களின் மர வாசலில் பாஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பூசுவதற்கு ஈசோப்புப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஈசோப்புத் தண்டின் முடிவு அனைத்து மனிதகுலத்தின் மீட்ப்பிற்காக மர சிலுவையில் பயன்படுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைக் குறிக்கிறது என்பது சுவாரஸ்யமானது.
இங்கே ஒன்று கவனிக்க வேண்டும்.
முன்னதாக, இயேசு தனது துன்பத்தைப் போக்க அவருக்குக் கொடுக்கப்பட்ட காடியை மறுத்துவிட்டார் (மத்தேயு 27:34; மாற்கு 15:23). வீரர்கள் அவருக்குக் கேலி செய்யும் விதமாக மது காடியைக் கொடுத்தார்கள், ஆனால் அவரைக் குடிக்கவில்லை (லூக்கா 23:36).
ஏனெனில் அவரைக் கடவுள் அப்பொழுது கைவிடவில்லை இயேசு சமமாக மனிதனாகவும், சமமாக தெய்வீகமாகவும் இருந்தார்…
பிறகு சிலுவையில் கடவுள் இயேசுவை கைவிட்டதைக் காண்கிறோம்.
இது மகனுக்கு மட்டுமான வலியல்ல,
மகனைக் கைவிட்ட தந்தைக்குமான வலி !
வலியிலேயே கொடிய வலி நிராகரிப்பின் வலி தான்.
இயேசு தந்தையிடமிருந்து பிரிந்த வேதனையை இயேசு மனிதனாக மட்டுமே அனுபவித்ததார். தெய்வீகமாக இப்போது இல்லை.
எப்படி?

இயேசுவின் வார்த்தைகளில் காணலாம்

“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று பகைவர்களுக்காக வேண்டினார் (லூக்கா 23:34). சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனிடம் “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார். தந்தையிடம் கடவுளின் மகன் கொண்டிருந்த உறவில் பேசுகிறார்.
இயேசுவை கைவிட்டபொழுது ”தந்தையே” என்று கூப்பிடவில்லை மாறாக “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்றார்.(மாற்கு 15:34) தெய்வ நிலையில் இல்லாமல் மனிதநிலையில் மட்டும் நின்று பேசுகிறார்.
விவிலியம் கருத்து எதுவெனில் இயேசு மனிதனாகப் பிறந்து நமக்காகப் பாவங்களைச் சுமந்து பலியாக வேண்டும். தந்தையோடு சேர தாகம் கொண்டார். "தாகமாக இருக்கிறேன் என்றார். இயேசுவின் தாகத்தை அறிவித்தல் அவரது உண்மையான மனிதத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மனித நிலையில் இருக்கும் அவர் நம்மைப் போலப் பாவங்களைச் சுமக்கின்ற நிலையை உணர்த்துவதுபோலத் தாகத்தில் இருக்கும் அவருக்கு. எனவே காவலர்கள் ஈசோப்புச் செடியின் ஒரு தண்டை எடுத்துப் புளித்த காடியைக் இயேசுவின் உதடுகளில் வைத்தார்கள்".
ஆதாமை தோட்டத்தை விட்டு அனுப்பியபொழுது அவன் கடவுள் தன்னைக் கைவிட்டதை உணரவில்லை. கடவுளோடு மறுபடியும் சேர தெரியவில்லை. சேர வேண்டும் என்ற தாகமும் இல்லை அனால் இரண்டாம் ஆதாம் கைவிட்டபொழுது“என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று இரண்டு முறை உரத்த குரலில் கூறினார்.

இது திருப்பாடல் 69:21-ஐ எதிரொலிக்கிறது, அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
யோவான் நற்செய்தியில், "இதற்குப் பிறகு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்தபோது, (இறைவார்த்தை நிறைவேற்றுவதற்காக)," எனக்குத் தாகமாக இருக்கிறது "என்று கூறினார்.
ஈஸ்ட் அல்லது புளிப்பு (பொதுவாக) திருவிவிலியத்தில் பாவத்தின் சின்னமாகும். இயேசு இந்தப் பானத்தை (அதாவது "புளிப்பூட்டப்பட்ட" ஒரு பானத்தை) அருந்தியபோது, அது உலகத்தின் பாவங்களைத் தம்முடைய சரீரத்திற்குள் எடுத்துக்கொண்டதைக் குறிக்கிறது.
இப்பொழுது இயேசுவை கைவிட்டு அவரை மனித நிலையில் பாவங்களுடன் பாடுகளைச் சுமந்து நமக்காக உயிரைவிட வேண்டும் என்பது தந்தையின் விருப்பம்.
மனித நிலை புளித்த காடியை பாவங்களை ஏற்று உயிர் துறந்தார்.

உயிர் விட்டார்.

இப்பொழுது ”என் இறைவா!” என்று சொல்லவில்லை மாறாக இயேசு: “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இப்பொழுது கடவுளின் மகனாக மீண்டும் வரிசையாகப் பார்ப்போம்.

  1. இயேசு புளிப்பு காடியை குடிக்க மறுக்கிறார். அப்பொழுது இயேசு முழு மனிதனாகவும் முழுத் தெய்வீகமாகவும் இருக்கிறார்.
  2. இயேசு தந்தையே இவர்களுக்கு மன்னியும் என்று பகைவர்களுக்காக வேண்டினார் கடவுளின் மகனாக...
  3. இயேசுவை கைவிட்டபொழுது. “என் இறைவா!” என்று கடவுளின் மகனாக இருந்தவர் மனித நிலையில் இருக்கின்றார்.
  4. இயேசு, "தாகமாயிருக்கிறேன்" என்றார். அதாவது தந்தையுடன் மீண்டும் சேருவதற்குத் தாகமாயிருக்கிறார்.
  5. மனித நிலையில் இருக்கும் பாவமில்லாத இயேசுவின் மீது பாவங்கள் சுமத்தப்படுகிறது. அதன் உருவகமே காவலர்கள் ஈசோப்புச் செடியின் ஒரு தண்டை எடுத்துப் புளித்த காடியைக் இயேசுவின் உதடுகளில் வைத்தார்கள்". ஆம் சுமத்தப்படுகிறது.
  6. இயேசு "புளிப்பூட்டப்பட்ட"பானத்தை அருந்தியபோது, அது உலகத்தின் பாவங்களைத் தம்முடைய சரீரத்திற்குள் எடுத்துக்கொண்டதைக் குறிக்கிறது. மனித அனுபவத்தில் முழுமையாகப் பங்கு கொள்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
  7. மனித நிலையில் எல்லாம் முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். புளிப்புத் திராட்சை ரசத்தைப் பெற்ற உடனேயே, இயேசு, "முடிந்தது" என்று அறிவிக்கிறார் இந்த வார்த்தைகளால், சிலுவையில் தம் மீட்புப் பணியின் நிறைவை அவர் அறிவிக்கிறார்.
  8. கடவுளின் மகனாகப் “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்றார்.

இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், “இவர் உண்மையாகவே நேர்மையாளர்” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
உயிருள்ள தண்ணீரின் தாகம் தீர்ந்தது...
உயிர்த்தது அனைத்து உயிர்களும்...