கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

xmas2

அன்பின்மடலின் அன்பு வாழ்த்துக்கள்!

கிறிஸ்துமஸ் விழாக் காலத்தில் இல்லங்களில் எல்லோரும் ஒரே குடும்பமாக அன்பிலும், செபத்திலும் ஒன்று கூடி மகிழ்ந்திருப்பது எல்லாக் குடும்பங்களும் விரும்புகின்ற சிறப்பான நிகழ்வு. அறிவியல் வளர்ச்சி உலகை மாற்றிவிட்டது. அவசரமும், பரபரப்புகளும் நிறைந்த வாழ்க்கைச் சூழலில் ஒரே குடும்பமாகக் கூடுவது இயலாத நிகழ்வாகிவிட்டது.

"ஒராண்டு நிறைவுற்ற கொரோனா குழந்தை"யுடன் கொண்டாடும் இவ்வேளையில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வழக்கம்போல மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் நாம் கொண்டாடுகிறோம், ஏனெனில் நாம் கிறிஸ்துவில் வாழ்கிறோம். நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போதும், சோகமாக இருக்கும்போதும் அவர் நம்முடன் இருக்கிறார். அவர் நமக்குள் இருந்து நம்மை மேன்மைப்படுத்தி, மீட்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறார்.

நம் குடும்பங்களில் இழப்புகள் அதிகம் தான். ஆனாலும் பகிர்வு என்பதே கிறிஸ்மஸ் விழாவின் மையப் பொருளாகும். கிறிஸ்துத் தம்மையே நம்மோடு பகிர்ந்துக் கொண்டார். ஏழைகளுடனும், ஞானிகளுடனும் முதலில் தம்மைப் பகிர்ந்துக் கொண்டவர், பின்புக் கல்வாரியில் நம் அனைவருக்காகவும் தம்மைப் பகிர்ந்துக் கொண்டார்.

இந்த அன்பின் பரிமாணத்தை உணர்ந்தவர்களாய் நமக்கு அடுத்திருப்பவர்களுடன் இயேசுவின் அன்பைப் பகிர்ந்திடுவோம். குடும்ப உணர்வோடு ஒருவர் ஒருவருக்காக செபித்து, அன்பின் பிறப்பினை மகிழ்ந்துக் கொண்டாடிடுவோம்.

அன்பின்மடல் தனது 19ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு மடலை பார்வையாளரான உங்களுக்கு காணிக்கையாக்குகிறது.
படித்து மகிழுங்கள். அத்துடன் உங்கள் எண்ணங்களை விருந்தினர் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.
இம்மடல் சிறப்பாக அமைய தங்களின் படைப்புகளைத் தந்து ஊக்கமளித்த அனைத்து எழுத்தாளப் பெருமக்களுக்கும் எம் இதயம் கனிந்த நன்றிகள்!

இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க..

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்! நத்தார் வாழ்த்துகள்!!

என்றும் அன்புடன்
நவராஜன்