நினைக்க நினைக்க நெஞ்சம் எல்லாம் தித்திக்கிறது. உலகினைப் படைத்த மைந்தன் நமக்காக நம்மைத்தேடிப் புவிக்கு வந்தார், மானிடராய் வாழ்ந்தார் என்பதை எத்தனை மகிழ்ச்சி எத்தனை ஆனந்தம்.
உலகின் முன்னேற்றம் விண்ணைத் தாண்ட, குயிலுக்கு இணையாகப் பெண்கள் குரல்கள் கூட வீதி எங்கும், அடுப்பூதும் பெண்கள் என ஒதுக்கி வைத்த பெண்கள் முன்னேற்றத்தின் சிகரத்தை எட்டிப் பிடிக்கக் காலம் இன்று...
அன்றோ.. பனிப் பூத்த இரவிலே மடித் தாங்கிய மனுமகனைக் கொண்ட தங்கிட, இடமின்றித் தவித்த அன்னையை நினைத்துப் பார்க்கவேண்டும் நாகரிகம் அறியாத காலத்திலும், இறைவனுக்குக் கட்டளைக்கு அடிபணிந்து, இதோ! இறைவனின் அடிமை! என்று தாழ்பணிந்த அன்னையை நாம் முன்மாதிரியாக எண்ணிப் பார்த்தாலே போதும் பெண் விடியலின் முன்னுரை நம் தாய் மரி என்று. சினிமா நடிகையின் பின்னே நசுங்கிச் சின்னாபின்னமாவதை விட்டு விட்டு அன்னை மரியின் காலடி நடந்தாலே நம் இல்லத்தில் இணையில்லாக் கிறிஸ்தவப் பிறப்பினை ரசிக்கலாம்.
தந்தையாகிய கடவுளின் மகன் பூலோக வானகச் சக்கரவர்த்தி மனிதனாகப் பிறக்கக் கட்டளையிட்டபோது மறுக்கவில்லை. தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படிந்துக் கன்னிமரியின் கர்ப்பமாக மலர்ந்தார்.
இன்று குருதிக் கொடுத்துப் பெற்றெடுத்த அன்னை முதியோர் இல்லத்தில்! உயிரைக் கொடுத்து வளர்த்தத் தந்தைக்கு இடமில்லாக் கொடுமை. மிஷனரிகளோடு பெண்களோடு உறவு வைத்து.... உறவை நட்பு விலை மிதித்துக் கொன்றிட்ட வெறுமை... இந்த நிலை மாற வேண்டும். அன்று கிறிஸ்து பிறப்பின் உண்மை மகிழ்ச்சி விடியலை ரசிக்கும்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... ஆம் தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா, அண்ணன், அண்ணி, தம்பி என்ற உறவுகளில் கட்டுண்டுக் கிடந்த சிறு சமூகம்.
இன்று செல்போனிலும் வலைத்தளத்தின் மோகத்திலும் கிறங்கிக் கிடக்கின்றன.
வாழ்வு முழுவதும்
தேடிப் பார்த்தாலும்
இன்னொரு பெற்றோரை
காண இயலாதுக் கண்மணியே!
பெற்ற தாயும் கூட இருக்கும் இருக்கும் உறவுகளையும் மதிக்கும் இளம் தலைமுறைகள், மாற்றத்தை இந்த மண்ணில் வைத்தால் மட்டுமே உண்மையான கிறிஸ்து பிறப்பு விழாவாக மாறும்.
நாம் இறைவனால் பலுகிப் பெருகி, பூமியை ஆண்டு நடத்திடப் படைக்கப்பட்ட பேரினம்...
உயிரற்றவைகளுக்கு முதலிடம் கொடுக்க மறுப்போம். உயிராக உணவாக உறவை மதிப்போம். மாறிவரும் சூழலில் மாற்றங்கள் தேவை. சிறுவயதில் நீதி நேர்மையான கதைகள் கூறிடுவோம் குடும்பத்தில் சிதைக்கும் சீரியலை விட்டு ஒழிப்போம். குடும்பம் நந்தவனமாக மாறிடஓற்றுமையாய் அமர்ந்துச் சிரிப்போம்.
பணம் "காகிதம்" என்ற எண்ணத்தை வளரும் தலைமுறையிடம் விதைப்போம். இறைவனுக்குப் பயப்படும் இதயம் நீதி, நேர்மை என்னும் கண்கள் கொண்டு இவ்வுலகினைப் பார்க்கும் எண்ணத்தை மலர வைப்போம். பிறக்கும் பாலன் பிறந்தது நமக்காக. நம் வாழ்வோ வாழப் பொவது பிறருக்காக என்ற மனித நேய மாண்போடு வளரும் சமூகம் நிச்சயம் வரும் ஒவ்வொரு கிறிஸ்து பிறப்பையும் மகிழ்வோடு கொண்டாடும்.
என் சமூகமே எண்ணத்திலும் எழுத்திலும் நிச்சயம் மாற்றங்களை மாற்றங்களை விதைக்காது மாற்றி ஒருவருக்கு வந்தால் மட்டுமே நல்ல விளைச்சலைத் தரும் விடைப் பெற்றுத் தரமுடியும்.
சிறுவயதில் நாம் பெற்ற பல இன்பமான உறவுகளையும் இனிமையான நினைவுகளை நம் பிள்ளைகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவில் சென்று விட்டோம். நம் எதிர்காலம் எப்படியோ? பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க கிறிஸ்து பிறப்பின் உண்மையான நிலையை உணர்த்துவோம். பாவச் சாத்தனின் ஆணி வேரை இவ்வுலகில் இருந்து அகற்றுவோம்.