தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்
- பார் இந்த தீயோன்?
- தீயோனின் இருப்பிடம் எது?
- தீயோன் மனித இனத்திற்குச் செய்வது என்ன?
விவிலியப் பார்வை
விவிலியத்தில் தீமை என்பதும், தீயோன் என்பவனும் கடவுளின் எதிரிகள். கடவுளுக்கு எதிராகவும், விரோதமாகவும் விளங்கும் தீயவனைச் சாத்தன் எனக் குறிப்பிடுகிறோம். சாத்தானைக் குறிப்பிடும் எபிரேயச் சொல் எதிராளி' கடவுளின் எதிரி கடவுளின் மக்களுக்கும் எதிராகவே செயல்படுவான் (1குறி21:1). அப்படியெனில் இந்தத் தீயவனான சாத்தான் எங்கு குடிகொண்டுள்ளான்? என்பதற்கு நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையே பதில்.
நம் வாழ்வில்
- நம்மோடு வாழும் சிலரைப் பார்த்து அவன்(ள்) தெய்வம் என்பதற்கும், இன்னும் சிலரைப் பார்த்து பேய், சாத்தான் என்பதற்கும் காரணம் வாழ்க்கையின் செயல்பாடுகளே!
- நம் ஒவ்வொருவரிடமும் சாத்தானாகிய தீயவனும், நல்லதையே செய்யும் வானதூதரும் குடிகொண்டுள்ளனர்.
- அன்றாடச் செயல்களைச் செய்யும்போது நாம் நம் மனசாட்சிக்கு ஏற்றபடி நடந்தால் சாத்தானின் சோதனையிலிருந்து விடுபடுகிறோம். மனசாட்சிக்கு எதிராகச் செயல்பட்டால் சாத்தானின் சோதனைக்கு நாம் இசைவு கொடுத்தவர்களாகி விடுவோம்.
குழந்தாய் உரசிப்பார்
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் என்று நாம் வேண்டும் பொழுது.
- சமூகச் சூழலிலே காலத்தை வீணாக்கி, நம்பிக்கை இழந்து படிக்காமல் களவு செய்து பொய் பேசி, குடிநோய்க்கு இலக்காகி பிறரை நம்பிப் பிழைக்கலாம் என வாழ்க்கையை ஒட்டும் சோம்பேறி முள்ளின் கைப்பிடியில் பயணம் செய்யும் மேதாவிகள் என்பதைப் புரிந்திடுங்கள். நீதியைத் துண்டாக்கிடும் குறை களைய, உண்மைக்காய் குரல்கொடுக்க முடிவெடுக்கலாமே செல்லக் கண்ணுகளே.
- பூக்களைப் போல் வாடிப்போகும் புல்வெளியைப்போல் மறையும் மானிடர் என்பதைத் துறந்து, அறிவை இடுப்பில் சுமக்கும் பெரியவர்கள் கருணையில்லாமல் செய்யும் தடுமாற்றச் செயல்கள் மாறிட வல்லமை கேட்கிறோம்.
- நீதியைத் தூளாக்கி, நியாயம் இல்லாத நிலையில் இனம், மதம், நாடு போன்ற குறுகிய எல்லைகளுக்காக போராலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும், நோய்களாலும் நொந்து சாகும் தீயக்குணங்கள் அழிய வேண்டும். மனித சமூகம் இணைய வேண்டும் என்ற நம்பிக்கையோடு இறைவனை நாடி வருவோம். இவைகள் முடிவு பெற்றிட முடிவில்லா இறைவனிடம் முறையிடுவாயா முழுமதியே.