தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே-ஆமென்.
நம் இறைவன்
நம் இறைவன் மூவொரு கடவுளாக இருக்கின்றார். அவரைத் தந்தை, மகன், தூய ஆவி என அழைக்கின்றோம். இந்த மூவொரு இறைவனின் பெயரை நாம் நாள்தோறும் பலமுறை பல இடங்களில் கூறிச் செபிக்கின்றோம். உதாரணமாக,
சிலுவை அடையாளம் வரையும்போது திரித்துவப் புகழ் கூறும்போது மூவேளைச் செபத்தில் செபமாலையில் திருப்பலியில் அருட்சாதனக் கொண்பாட்டங்களில் ஆசி கூறும்போது
மூவொரு இறைவனின் பெயரைச் சொல்லி செபிக்கும் பொழுதெல்லாம் நாம் இறைவனுடைய பெயரைப் பக்தியுடனும், அதேவேளையில் பொருள் உணர்ந்தும் சொல்ல வேண்டும். நமது அடிப்படை செபமான சிலுவை அடையாளத்தில் மூவொரு இறைவனின் பெயரைச் சொல்லி எப்படி செபிப்பது? கற்போமா?
சிலுவை அடையாளம்
- சிலுவை அடையாளம் என்பது வெளி அடையாளம் அல்லது செய்கை மட்டுமல்ல. மாறாக, நமது நம்பிக்கையின்வெளிப்பாடு.
- சிலுவை கழுத்தில் தொங்குவது நம்பிக்கை சார்ந்த பக்தி முயற்சியே. சிலுவை வழியாக நமக்குக் கிடைத்த மீட்பையும், மூவொரு இறைவன்பால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறோம்.
சிலுவை மீட்பின் சின்னம்
- இஸ்ராயேல் மக்கள் கொள்ளிவாய்ப் பாம்பின் பிடியில் இருந்தபோது அவர்களை அதிலிருந்து மீட்டது கம்பில் உயர்த்தப்பட்ட வெண்கலப்பாம்பு.
- அதே போல் பாம்பின் தூண்டுதலால் ஆதிப்பெற்றோர் வழியாக இந்த உலகத்தில் புகுந்த பாவம் ஒட்டுமொத்த மனித இனத்தையுமே தன் பிடியில் வைத்திருந்தது.
- இதிலிருந்து மனித குலத்தை மீட்டெடுத்தவர் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுகிறிஸ்து.
சிலுவை ஒப்புரவின் அடையாளம்
- இறைவனுக்கு எதிராக முணுமுணுத்து இஸ்ராயேல் மக்கள் இறைவனை விட்டு விலகிச் சென்றனர்.
- அவர்கள் மீண்டும் திரும்பி வந்த போது உயர்த்தப்பட்ட பாம்பின் வழியாக இறைவனோடு மீண்டும் ஒப்புரவாக்கப்பட்டனர்.
- இதைப் பவுலடியார், "சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஒருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார் (எபே 2:16) என்கிறார்..