செபம் செய்வோமா?

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே-ஆமென்.



ஆமென்


கடைசியாக நாம் சொல்லும் ”ஆமென்” என்பது நம் தாய் அன்னை மரியாவைப் போல் ”அப்படி ஆகட்டும்” என்ற நம்மை முழுவதும் ஆண்டவரிடம் சரணாகதி ஆக்குவதாகும்.

  • உறுதிப்பாட்டிற்கும், நம்பகத் தன்மைக்கும் ஆமென் என்ற எபிரேயச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
  • நாம் அறிக்கையிடும் நம்பிக்கையை உறுதியாகவும், முழுமையாகவும் ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்துகிறது.
  • உறுதியான "ஆமென்" ஆக விளங்கும் கிறிஸ்து ஆண்டவருக்கு நம்மை முழுவதுமாக கையளிப்புதை இது வெளிப்படுத்துகிறது.
  • எருசலேம் நகரத்துப் புனித சிரில் “ஆமென்” என்பது "நம்பிக்கையின் சுருக்கம்" என்கிறார். இந்த சுருக்கம் மனித சம்மதத்தினால் செய்யப்பட்டதல்ல.
  • சிறிய கடுகு விதைக்குள் பல கிளைகள் அடங்கி இருப்பது போல ஆமென்' என்ற வார்த்தைக்குள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ள உண்மையான சமயத்தின் கருத்துக்கள் அடங்கியுள்ளன.

குழந்தைகளே நாம் ஆமென்' என்று சொல்லும்போது

  • நமது நம்பிக்கைத் தீர்மானத்தை உறுதிப்படுத்திக்கிறோம்.
  • மூவொரு இறைவனை நம்புகிறோம், மூவொரு இறைவன் கற்றுத் தரும் விழுமியங்களைப் பின்பற்றுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.
  • மூவொரு இறைவன் உடனிருப்பை பெற்றோர் பெரியோரில் நாம் வாழும் சமூகத்தில் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறோம்.
  • மூவொரு இறைவன் தரும் அனுபவம் நல்ல பண்புள்ள குழந்தைகளாக நம்மை மாற்றுகிறது.

ஜேம்ஸ் சாம்சன் ஓர் அறிவியலாளர். மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் குளோரோஃபார்மைக் கண்டுபிடித்தவர். ஒருமுறை அவரிடம், 'உங்களுடைய வாழ்வின் மிக முக்கியமான மகிழ்ச்சியான நாள் எது?" என்று கேள்வி கேட்டபோது அவர், "எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாள் இயேசு கிறித்துவை என் ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்று அவர் மீது நம்பிக்கை கொண்ட நாள்" என்றார்.

அன்புக் குழந்தைகளே! ஜேம்ஸ் சாம்சன் போன்று கிறித்துவை ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக் கொள்வதே எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்று நம்மால் சொல்ல முடியுமா? நாம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது நம் பெற்றோரின் நம்பிக்கையை முன்னிட்டு நமக்குத் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. நம் பெற்றோர் நம் நம்பிக்கைக்கு பொறுப்பேற்றார்கள்.

இன்று

  • நமது நம்பிக்கை வாழ்வு எப்படி உள்ளது?
  • திருவருட்சாதனங்களில் தகுந்த தயாரிப்போடு நாம் பங்கெடுக்கிறோமா?
  • இறை உறவில் வளர தடையாக உள்ள பலவீனங்களை மாற்றிட முயல்கிறோமா?
  • இறைவார்த்தையில் நம்பிக்கைக் கொண்டு அது கற்றுத் தரும் படிப்பினைகளின்படி நடந்து கொள்கிறோமா?
  • ஒவ்வொரு நாளையும் தொடங்கும் முன் செபிக்கிறோமா? அந்த நாளை இறைபதம் ஒப்புக்கொடுக்கிறோமா?