செபம் செய்வோமா?

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே-ஆமென்.மகன்


இரண்டாவது, முன் நெற்றியிலிருந்து நேராக 'மகன் என்று சொல்லி கீழ்நோக்கி நெஞ்சுப் பகுதியில் இடும் அடையாளம் இறை மைந்தனாம் இயேசுவை நம் நினைவிற்குக் கொண்டு வருகின்றது.

 • யார் இந்த இறைமகன்? கடவுளால் மனித உருவில் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர். இந்த இறைமகன் இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையே செய்தார்..
 • பதியதொரு நாளை, புதியதொரு வேலையை தொடங்கப் போகும் நாமும் “நல்லதையே! செய்ய இறைவா வரம் தா என்றவாறு வேண்டுவோம்.

நன்றி செலுத்துவோம்

 • இயேசுவே! புதியதொரு நாளுக்காக நன்றி.
 • இயேசுவே! இன்று நான் ஆலயத்திற்குச் செல்ல ஆர்வம் தந்தமைக்காக நன்றி.
 • இயேசுவே! பள்ளிக்கூடத்திற்குச் செல்ல நல்ல உடல் நலன் தந்து வழிநடத்துவதற்காக நன்றி.
 • இயேசுவே! இந்நாளில் நான் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளுக்காகவும் நன்றி.
 • இயேசுவே! எனது சிந்தனை செயல் அனைத்திற்காகவும், நான் கற்கவிருக்கும் அனைத்து நல்ல செய்திகளுக்காகவும் நன்றி.
 • இயேசுவே! நல்லவற்றை கற்றுத்தரும் ஊடகங்கள் சமூகத் தொடர்பு சாதனங்களுக்காய் நன்றி.

வேண்டுதல்செய்வோம்

 • இயேசுவே! நல்லவற்றை சிந்திக்கவும் செயல்படுத்தவும் எங்களுக்கு வழிகாட்டும் நல்லுள்ளங்களைத் தாரும்.
 • இயேசுவே! தங்களது முன்மாதிரியான வாழ்வால் நான் பலவற்றைக் கற்றுக்கொள்ள நல்ல நாட்டுத் தலைவர்கள், ஆன்மீகத்தலைவர்கள், சமூக ஆர்வலர்களைத் தாரும்.
 • இயேசுவே! எங்களது உணர்வுகளை உறவுகளை ஊனப்படுத்தி காசு சம்பாதிக்கும் நபர்கள் தங்களது செயல்பாடுகளிலிருந்து திருந்தி வாழ உதவி செய்யும்.
 • இயேசுவே! இணையத்தளம் அதில் உள்ள சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஆர்க்குட் போன்றவற்றை நல்லவற்றிற்காக பயன்படுத்த அருள்தாரும்.
 • இயேசுவே! ஊடகங்களுக்கு நாங்கள் அடிமையாகாமல் வாழ்ந்திட ஆற்றல் தாரும்.
 • இயேசுவே! நல்லவற்றை சிந்திக்கவும், செயல்படுத்தவும் நாளும் குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கி நல்ல தரமான நூல் வாசிக்கவும் பொதுநலன் காக்கும் செயல்களில் ஈடுபடவும் எங்களுக்கு நல்ல வழிகாட்டுதல் தாரும்.