இறைஇயேசுவில் அன்னை மரியாள்

திருமதி.ரெஜினா சின்னப்பன்

தந்தையாகிய கடவுள் தனது ஓரே மகனைப் பெற்றெடுக்க மாசற்ற அருள் நிறைந்த பெண்ணை தூய்மையாக உருவாக்குகிறார். அப்பெண் எளிமையானவர், இறைபக்தி மிக்கவர். இறைவார்த்தையைத் தன்னுள் பெற்றவர். இதனால் இவர் வழியாக மெசியா உலகிற்கு வருவாரென்று இறைவாக்கினர்கள் உரைத்தார்கள். உரைத்தபடியே நிறைவேறியது.

அன்னை மரியாள் உலகின் ஒளியைத் தாங்கும் விளக்கு. தன் கருவில் சுமப்பதற்கு முன்பே இதயத்தில் ஏற்றுக் கொள்கிறார்.

அன்னை மரியா இறைவனின் தாயாகும் தனது இறையழைத்தலை ஒரு தற்காலிக ஒப்பந்தமாக நினையாமல் தன் வாழ்நாள் முழுவதும் இறைவனோடு நிலைத்திருக்க வேண்டிய உறவாக வாழ்ந்து காட்டுகிறார்.

நான் ஆண்டவரின் அடிமை உம் செற்படியே எனக்கு நிகழட்டும் என்று கூறி தன்னையே கடவுள் விரும்பி குடியிருக்கு ஆலயமாக்கி கொள்கின்றார். உயிருள்ள உடன்படிக்கைப் பெட்டகமாக, பெட்டகத்தைத் தாங்கும் கோவிலாக, நற்கருணைப் பேழையாக உருவாகி விடுகின்றார்.

அன்னை மாியா எப்போதும் கன்னி மரியாள் தான். கன்னிமரியாள் பெண்களுள் பேறுபெற்றவர். அவரது திருவயிற்றின் கனியும் ஆசீர் பெற்றதே. மேலும் கன்னிமரியாள் ஆண்டவர் இயேசுவின் தாய். ஆண்டவரின் வாக்கு நிறைவேறும் என நம்பிய கன்னிமரியா பேறுபெற்றவர் என போற்றிப் புகழ்கிறோம்.

எனவே நாம் நமது வாழ்க்கைப் பயணத்தில் அன்னை மரியாளின் வழிசென்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மக்களாக வாழ இறைஆசீர் வேண்டுவோம்.