
அ. அல்போன்ஸ் - திருச்சி
கடவுளின் மகன், மீட்பர், மெசியா என்றெல்லாம் கூறப்படும் இயேசு "கிறிஸ்துவை உருவின்றி அறிவது எக்காலமும் இயலாத செயல். உருவழியில் இறைவனைக் காணத் தொடங்கி இறுதியில் வெளிமுகமாகக் கண்ட கிறிஸ்துவை உள்முகமாக, நமக்குள் வாழ்வதை உணரச் செய்வதே நற்செய்திகளின் நோக்கமாகும்.
சற்று ஆழ்ந்து பார்த்தால் இறைவனுக்கு ஏற்புடைவராக மாறவேண்டுமெனில் விசுவாசம். அவசியமாகிறது. விசுவாசம் என்பது கண்ணுக்குப் புலப்படாதவைப்பற்றி மனந்தளராத நிலை காண்பவற்றை அல்ல, காணாதவற்றையே நோக்கிய வண்ணம் நாம் வாழ்தல் வேண்டும் [ரோம 8:25]
காண்பவை என்பது தொடக்க நிலை காணாதவை முடிவான, நிறைவான நிலை. 5 வயது சிறுவனுக்கு ஆடு என்பதை அறிவிக்க ஆட்டின் படத்தை அரிச்சுவடியில் பார்க்கின்றோம். அவனுக்கே 10 வயதாகும் பொழுது “ஆ“ “டு“ என்ற இரு எழுத்துக்களைக் கண்ட மாத்திரத்தில் அவன் சிந்தனைக்கு ஆட்டின் உருவத்தை உணர்ந்து விடுகிறான். உருவநிலையில் - பருப்பொருளில் தொடங்கிய நம்மை அருவநிலையில் நுண்பொருளுக்கு அழைத்துச் செல்கின்றது. நற்செய்திகள் நான்கும். காண்பவையில் தொடக்கம் பெறுகின்றதையும் அதன் பயனாகக் காணாதவைகளைக் கண்டு அறிந்து அதிலே விசுவாசம் கொள்வதையும் லூக்கா தனது நற்செய்தியில் இயேசுவின் பிறப்பைக் கூறும் பொழுது கவிநயத்தோடு, வெகு நுணுக்கமாகக் கையாளுவதைக் காணலாம்.
இயேசுவின் பிறப்பின் பொழுது முதன் முதலாக அதே பகுதியில் சாமக்காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் நற்செய்திகளைக் கூறுகின்றனர். லூக்காவின் வரிகளைப் பார்ப்போம். அவள் ( மரியாள் ) தலைபேறான மகனை ஈன்றெடுத்து, துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள். (லூக் 2:7) வானதுாதர்கள் இடையர்களுக்குக் கூறுவார்கள். அவரே ஆண்டவராகிய மெசியா. குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து, முன்னிட்டியில் கிடத்தி இருப்பதையும் காண்பீர்கள். [2:12] இடையர்கள் விரைந்து சென்று “முன்னிட்டியில் கிடத்தியிருந்த குழந்தையைக் கண்டனர் ?”. (லூக் 2:16)
இங்கே பத்து வசனங்களுக்குள் 3 தடவை. முன்னிட்டியையும் 2 தடவை துணிகளையும் தெளிவாகக் கூறிவிடுகின்றார். நற்செய்திகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிக நுணுக்கம் வாய்ந்தவை.
இங்கே தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசுவின் சொல் வடிவமாகின்றது. பருப்பொருளை காட்டுகின்ற நிகழ்ச்சி, “காண்பவை” என்ற கருத்திற்குரிய காட்சி இயேசுவின் பிறப்பு. அன்னைமரி துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்த, வானதூதர்கள் அதையே கூற, இடையர்கள் சென்று அதையே காண அனைத்தும் ஒன்றாக இருக்கின்றது.
இப்பொழுது லூக்கா உயிர்ப்பின் பொழுது கூறும் வரிகளைப் பார்ப்போம். [ இயேசுவை ] சிலுவையிலிருந்து இறக்கிக் கோடித்துணியைச் சுற்றி பாறையில் குடைந்திருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். ( 23: 53 )“வந்திருந்த பெண்களும் கல்லறையையும் உடலை அங்கு வைத்த விதத்தையும் கவனித்தனர். (23:55)
பேதுருவோ எழுந்து கல்லறைக்கு ஓடினார். குனிந்து பார்க்கையில் துணிகள் மட்டும் கிடக்கக் கண்டார்: [24:12]
இங்கே 15 வசனங்களில் 3 தடவை - கல்லறையையும், துணிகளையும் காட்டுகின்றார். உயிர்த்த இயேசுவின் உடல். அங்கு இல்லை.
பிறப்பிலேயும், உயிர்ப்பிலேயும் சம்பவங்கள் இணையாகக் காண்கின்றன, பிறப்பிலே இடையர்கள் முன்னிட்டியில் துணிகளில் பொதிந்த குழந்தையைக் காண்கின்றனர். உயிர்ப்பிலோ சீடர்கள் கல்லறையில் துணிகளை மட்டும் காண்கின்றனர்.
இடையர்கள் மெசியாவாகக் காண்கின்றனர். சீடர்கள் உயிர்த்த கிறிஸ்துவாகக் காண்கின்றனர்.
இடையர்கள் இயேசுவைக் கண்டு மெசியாவாக உணருகினறனர். சீடர்களோ கிறிஸ்துவை காணாமல் உயிர்ப்பை நம்புகின்றனர். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது இடையர்களின் நிலை. தேடுங்கள் ஆனால் காணமாட்டீர்கள் என்பது சீடர்களின் நிலை. காண்பதில்: தொடக்கம் காணாததில் நிறைவு என்பதை லூக்கா கையாளுகின்றார்.
இடையர்கள் மலரைப் பார்க்கின்றார்கள். . சீடர்கள் ‘மணத்தை'ப் பார்க்கின்றார்கள். முன்னது அன்பின் நிலை. பின்னதோ விசுவாசத்தின் ஊற்று. அன்பு எனும் பொழுது “நான்” என்றும் “நீ.” என்றும் அன்பை தரவும், பெறவும், இரு நபர்கள் தேவைப்படும். இங்கே அன்பு செலுத்தும் பொழுது அன்பு செலுத்துபவரிடம் சிலசமயம் தவறு காணமுடியும். தன் முனைப்பும் தோன்றிவிடும். விசுவாசம் என்பதோ அவரைப் பார்த்ததில்லை, எனினும் அவர் மீது விசுவாசம் கொண்டு சொல்லொ அண்ணாத மகிழ்ச்சியும் மகிமைநிறை அக்களிப்பும் அடையலாம். இங்கே திறந்த நிலை மனப்பான்மை, ஏற்றுக் கொள்ளும் தன்மை, நான் என்பது கரைந்து சரணாகதி நிலையில் வாழும் நிலையாகும்.
விசுவாசத்தில் காணமுடியாதவை என்றால் அதை அறியவே முடியாதா? அது காண முடியாதவை தானே, ஒழிய அனுபவிக்கக்கூடியவை. உயிர்த்த கிறிஸ்துவை காண முடியவில்லை. ஆனால் அவரின் பிரசன்னத்தை இதயம் பற்றி எரியும் அனுபவமாகப் பார்த்தார்கள் சீடர்கள்.
வெளிமுகமாக இடையர்கள். இயேசுவைக் கண்டனர். “அது அன்பு, விசுவாசத்தின் வழியாகக் கிறிஸ்துவை உள்ளங்களில் கண்டனர். “சீடர்கள் இயேசுவின் பிறப்பின்-பொழுது ஒரே விதமாகக் காட்சிகளைக் காட்டி அதனால் நமக்கு அன்பையும் விசுவாசத்தையும் அழகுறப் படம் பிடித்துக் காட்டினார். விசுவாசத்தின் வளர்ச்சி யையும் கண்டு அனுபவிப்பதிலிருந்து அதிலும் உயர்ந்து காணாமல் "அனுபவம் பெற செய்கின்றார். இவ்விரு நிகழ்ச்சிகளையும் கருத்தில் நிறுத்தி நமக்கு தேவைப்படுவது “அன்பின் வழியில் செயலாற்றும் விசுவாசமே.”