
இ.பரதன், கும்பகோணம்
பங்கு மக்களின் பரபரப்பும், வேகமும் என்றும் இல்லாத அளவுக்கு அன்று இருந்தது. ஏனென்றால் அன்று கிறிஸ்துமஸ் பெரு விழா ! இரவு சரியாக ஒன்பது மணியளவில்... ! அனைவரும் எதிர்பார்த்தபடி பங்கு சாமியாரும், வேதியரும், சிறுவர் மற்றும் சிறுமியர் இவர்களுடன் சில இளைஞர்களும் வெளிப்பட்டார்கள். அனைவரும் அவர் தம் வீடுகளில் குடில்களை அழகுற அமைத்து , சரமியாருக்காகக் காத்திருந்தனர். என்றும் இல்லாத அளவுக்கு அன்று ஊரே புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.
காரணம்! பங்குத்தந்தையால் அறிவிக்கப் பட்டிருந்த "பரிசு மழை"? ஆம்! யார் வீட்டில் "குடில்|'' அழகாகச் செய்கிறார்கள்? அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு' “பரிசு'' அளிக்கப்படும், அதுவும் கிறிஸ்துமஸ் திருப்பலி முடிந்ததும் பரிசு ரூபாய் ஆயிரம் அறிவிக்கப்படும். பங்குத் தந்தையின் இந்த அறிவிப்பு ஒன்று போதாதா? அதுதான் ஊரே மின் விளக்கில் இரவைப் புதுப்பித்துக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு வீடாய் சென்று குடில்களைப் பார்த்துப் பங்குச் சாமியார் வேதியரிடம் ஏதோ சொல்ல... ! அதன்படி குறித்துக் கொண்டு ஒவ்வொரு வீடாய் மாறிச் சென்றனர். அப்பப்பா ! எத்தனை அழகு! புல்வெளிகள், மின்விளக்கு அலங்காரங்கள், சவுக்கு இலைகள், பஞ்சுத் துணிகள் எல்லாவற்றையும் மிஞ்சுமாறு எலக்ட்ரானிக்ஸ் பல்புகள், வித்தியாசமான குடில் சொரூபங்கள் ! ஒவ்வொருவரும் செயற்கையை, இயற்கையாய் நம்பும்படி “குடில்” செய்திருந்ததில் வித்தியாசம் காண முடியாத அளவுக்குத் திகைத்துப் போனார் பங்குக் குரு!
ஊரே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது! எல்லாம் ஒரு மணி நேரத்தில் நல்ல படியாய் நடந்தது! எல்லாம் முடித்தவராய் வெளிவந்த பங்குக் குருவை...! ஏழைச் சிறுவன் பவுலின் குரல் தடுத்து நிறுத்தியது! ஃபாதர் ! என்னோட குடிலையும் பாருங்க நானும் குடில் செய்து இருக்கிறேன்!” என்று கூறிய பவுலைப் பார்த்துப் புன்னகைத்தார் பங்குக் குரு! ஏனெனில் யாருக்கு பரிசு என்று முடிவெடுத்தவராய் இருந்ததில்…! சிறுவன் பவுல் தன்னுடைய பனை ஒலை குடிசைக்கு அழைத்துச் சென்றான்.
ஊரே ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது! ஏனெனில் மாடி மற்றும் நவீன வீடுகளின் மத்தியில் அந்தப் பனை ஓலை குடிசை... ஒரு துரும்பாய் தெரிந்தது அவர்களுக்கு! மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றப்பட்ட அந்தக் குடிசையில் குனிந்த பங்கு குரு குடிலைத் தேடினார் … தம்பி! எங்க உன்னோட குடில் என்ற பங்குக் குருவை வீட்டின் ஒரு மூலைப் பகுதிக்கள் அழைத்துச் சென்றான் பவுல்! “இதோ! இதுதான் என்னுடைய குடில்”! என்று காட்டினான், எரிந்து கொண்டிருத்த .... ஒரு மெழுகு வர்க்தியை”! “பங்கு குரு அதிர்ந்து போக,…! பங்கு மக்கள் சிலர் சிரிக்கலாயினர்...!”
ஏழைச் சிறுவன் பவுல் பேசினான்! ஃபாதர் என் வீட்டில் எந்த வசதியும் இல்லை. இதோ எரியும் இந்த ”மெழுகு வர்த்தி” தான் என் குடில்! நேற்று வரை இருளாய் இருந்த இந்த இடம் இன்று! இந்த...! மெழுகு வர்த்தியால் வெளிச்சத்துக்கு மாறியுள்ளது! இந்த மெழுகு தான் ”குழந்தை இயேசு” இருளாய் இருந்த உலகத்துக்கு வந்த பேரொளி''! எனவே இதுதான் என் குடில் ! என்று முடித்த பவுலை தட்டிக் கொடுத்து விட்டு அமைதியாய் வெளியேறினார் பங்குகுரு !
கிறிஸ்துமஸ் திருப்பலி முடிந்தது! எங்கும் சந்தோசம்: எல்லாரும் மிக ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருந்தனர்...! பங்கு குருவின் பரிசு முடிவுக்காக,…! பங்கு குரு பேசலானார்: முடிவை அறிவித்தார்...! கிறிஸ்துமஸ் பரிசு மழையில் பரிசைத் தட்டிச் சென்றது! ஆம் ! சிறுவன் பவுல் தான்...
இறை யேசுவில் பிரியமானவர்களே! குடிலை அழகுப்படுத்துவதில் மட்டுமல்ல...! நாம் பாவங்களிலிருந்து விடுபடுவதே, கிறிஸ்துமஸ் நன்னாளில் இயேசுவுக்கு நாம் செய்யும் காணிக்கை. சிந்திப்போமாக!