தேன் சுமந்த ரோஜா


அ. அல்போன்ஸ் - திருச்சி

தேன் சுமந்த ரோஜா

அறம்‌ பொருள்‌ இன்பம்‌ என நல்கும்‌ பரம்பொருள்‌ பாரினில்‌ பாலனாக வந்து தோன்றியுள்ளார்‌!

அந்தத் தேவகுமாரனின்‌ திருவருகையின்‌ நோக்கமென்ன ?

உலகில்‌ உள்ள பாவங்களின்‌ பரிகாரத்திற்காகத் தான்‌ பலியாகி மீட்பை தரவேண்டுமென்ற நோக்கமா? அது மட்டுமல்லை. அவதார நோக்கம்‌ இரண்டு அம்சங்களைக்‌ கொண்டது. மக்களிடையே கடவுள் பிறப்பது அதாவது அவர்களிடையே இறங்கி மானிட வடிவத்திலும்‌ 'இயல்பிலும்‌' தோன்றி தானே பலியாகி மீட்பைத்‌ தருவது ஒரு அம்சம்‌.

“கடவுள்‌ தம்‌ மகனை உலகிற்கு அனுப்பியது, அவர்‌ வழியாக உலகம்‌ மீட்புப்பெறவே” என்று இயேசு கூறியதைக்‌ காண்கிறோம்‌.

இரண்டாவது அம்சம்‌ மனிதன்‌ மேலேறி இறைவனில்‌ பிறப்பது. அதாவது மானிட ஆத்மா. இரண்டாம்‌ தடவையாக மறுபடி புதிதாகப்‌ பிறந்து இறைவனின்‌ இயல்பையும்‌ உணர்வையும்‌ அடையப்‌ பெறுவது ஆகும்‌. மானிடன்‌ இப்புதிய பிறவியை அடைவதே மிக முக்கிய நோக்கம்‌. இயேசு தந்தையிடம்‌ வேண்டுவது இதுவே.

“தந்தாய்‌ நீர்‌ என்னுள்ளம்‌; நான்‌ உம் உள்ளும் இருப்பது போல்‌ அவர்களும்‌ நம்முள்‌ ஓன்றாய்‌ இருக்கும்படி மன்றாடுகின்றேன்‌.”

மனிதன்‌ தானும்‌ கடவுள்‌ தன்மையை அடையலாமெனத் "தைரியம்‌ கொள்ளுவதற்கு தெய்வமே மண்ணில்‌ பிறக்கின்றது. இதைக் காணிபதற்காகக் கீழ்‌ திசையிலிருந்து ஞானியர்‌ புறப்பட்டனர்‌. கீழ்‌ திசை என்பது கிழக்கு திசையாகும்.‌ கிழக்கு திசையில்‌ தான்‌ சூரியன்‌ உதிக்கின்‌றான்‌, ஏதோன்‌ தோட்டத்தில்‌ நடுவில்‌ அறிவு கனிதரும்‌, மரம்‌ இருக்கின்றது. கிழக்கிலோ வாழ்வளிக்கும் மரம்‌ இருக்கின்றது, கிழக்குத்‌ திசையைப் பெண்ணாக உருவகப்‌ படுத்துவார்கள்‌. அந்த ஞானியர்‌ வானத்தில்‌ தோன்றிய விண்மீனைக்‌ கண்டு மீட்பரைப்‌ பார்க்க வருகின்றனர்‌.

வானத்தில்‌ தோன்றிய விண்மீன் என்றதும்‌ வானத்தை நோக்கிப்‌ பார்க்கக் கூடாது. அது கவிதை மொழியிலேயே சொல்லப்பட்டுள்ளது. அந்த விண்மீனை உள்ளத்தில்‌, உள்ளாழத்தில்‌, உள்‌ மனதில்‌ காணும்‌ விழிப்புணர்‌வாகும்‌. விழிப்பணர்வின்‌ வெளிப்பாடாகும்‌.

அந்த ஓளி வானத்தில்‌ தேடி காண முடியாது. அது உள் ஒளியாகும்‌, உள்‌ ஓளி ஏன்பது தன்னைத்‌ தானே அறிவது இருள்‌ நிறைக்க ஓரு அறையில்‌ “நான்‌ இருக்கிறேன்‌” என்பது எப்படித் தெரிகிறது. நம்மையே பார்க்காத பொழுதும்‌ நான்‌ இருக்கிறேன்‌ என்ற உணர்வுதான்‌, அந்த உணர்வின்‌ மூலம்தான்‌ நாம்‌ கிறிஸ்துவை உணரலாம்‌.

எல்லா ஆரம்பங்களும்‌ இருட்டில்‌ தான்‌ நடக்கின்றன. ஏனெனில்‌ இருள்‌ வாழ்க்கையின்‌ மிகவும்‌ அத்தியாவசமான பகுதி. ஒருவிதை தன்‌ வேரை இருட்டான மண்ணுக்குள்‌ செலுத்தும்பொழுது தான்‌ தன்‌ வளர்ச்சியைக் காட்டுகின்றது இந்த உலகத்து ஆரம்பங்கள்‌ அனைத்துமே புரியாதவை. ஆதியில்‌ படைப்பிற்கு முன்பு இருள்‌. சூழ்ந்த வெறுமையைத்‌ தான்‌ காண்கின்றோம். கிறிஸ்து பிறந்ததும்‌ இரவில்தான்‌. அந்த இரவில்‌ ஞானத்தின்‌ இரவலாகப் பக்தியின்‌ குளிர்ச்சியும்‌ உள்ளோடும்‌. அற்புத சங்கமமாக ஞானியர்‌ அவரைப்‌ பார்க்கவந்தனர்‌.

எதற்காக ஞானியர்‌ மீட்பரைத்தேடி வந்தனர்‌. அவர்களே வெகு அழகாக்‌ கூறுகின்‌றனர்‌.

“அவரை வணங்க வந்தோம்‌”

ஆஹா! எவ்வளவு அற்புத பொருள்‌ வாய்ந்த சொல்‌.

நாம்‌ துன்பப்படும்‌. பொழுதும்‌, ஆறுதலுக்காகவும்‌, உதவிக்‌காகவும்‌, விடுதலைக்காகவும்‌, மோட்சம்‌ பெற வேண்டும் என்பதற்காகவும்‌ தான்‌ இறைவனை நாடுகின்றோம்‌. அஞ்ஞானத்தின்‌ காரணமாக அவர்பால்‌ ஞான ஓளிபெற திரும்பும்‌ பக்தி ஓன்றுள்ளது. தெய்வ உதவிக்காகவும்‌. பாதுகாப்புக்காகவும்‌ விருப்பத்தின்‌ திருப்திக்காகவும்‌ நாடும்‌ பக்தி உள்ளது. ஆனால்‌ இங்கு ஞானியரின்‌ பக்தி அன்பர்கள்‌. தங்கள்‌ அன்பின்‌ சக்தியால்‌ ஆத்மிக ஐக்கியம்‌ பெற, வேறு எந்தத் தேவைகளையும்‌ கேட்காமல்‌ அவரை அவருக்காக அவரின்‌. அருள்‌ நிறைவுக்காகப் பூரணத்தைப் பெறுவதற்காக வணங்க வந்தது நமக்கு ஓரு பாடமாக, வழியாக இருக்க வேண்டும்.

வான்‌ வீட்டைக் கொடு என்று, நல்லகள்ளன்‌ சிலுவையில்‌ கேட்கின்‌றான்‌. வலது பக்கம் அமரும் தகுதியைக் கொடு என்று சீடரின்‌ தாய்‌ விண்ணப்பிக்கின்றாள்‌. பார்வையைக் கொடு என்று குருடன்‌ வேண்டுகின்‌றான்‌, அவரை வணங்கமட்டும்‌ வந்த ஞானியரைப்‌ பார்க்கின்றோம்‌.

ஞானியரிடம்‌ உள்ள ஞானம்‌- ஆண்‌. அது பரம்‌ பொருள்‌, உலகம்‌, தான்‌ என்ற பிரிவுகளே இல்லாமல்‌ மேலே மேலே செல்லும் நிலை.

பத்தியோ பெண்ணின்‌ உருவகம்‌. தன்னைக் கீழாக்கி சரணாகதிச் செய்யும்‌ பணிவு, இங்கு ஞானியர்‌ இறைமகனிடம்‌ பக்திச் செலுத்தும்‌ நிலையை ஞானத்தையே பக்தியாகக்‌ கொண்டு வணங்கும்‌ ஞானியரைக்‌ காண்கின்றோம்‌.

இங்கு ஞானியருக்கு வழிகாட்ட விண்மீன்‌ இருந்தது. நாம்‌ கிறிஸ்‌துவிடம்‌ செல்லுவதற்கு வழிகாட்ட என்ன உள்ளது?

தேடுங்கள்‌. கண்‌டடைவீர்கள்‌” என்ற இறைவாக்கு வித்தியாசமான பொருளைக்‌ கொண்டது. எப்படி?

தேடுங்கள்‌ கண்டடைவீர்கள்‌ என்பதில்‌ தேடுபவன்‌ தேடிச்‌ செல்லச் செல்ல, முடிவில் அவன்‌ மறைந்துவிடப் பின்‌ தேடுவது அகட்படும்‌. என்‌ பொருட்டுத் தன்னுடரை இழப்பவன்‌ அதைக்‌ கண்டைவான்‌ என்பதேபொருளாகும்‌.

வாழ்வது "நானல்ல - எனக்குள் வாழ்வது கிறிஸ்து என்ற திருத்தூதர் பவுலின்‌ பொன்னுரைகள்‌ இதைத்‌ தான் குறிப்பிடுகின்‌றன. எவன்‌ தேடினானோ அவனே இல்லாமல்‌ போய்க் கிறிஸ்து மட்டும் நிற்கின்‌ற நிலை, உப்புப்‌ பொம்மையானது சமுத்திரத்தை ஆழம்பார்க்கப் போன கதையாகக் கிறிஸ்துவப் பயணம்‌ முடிகிறது. “பூமியின்‌ உப்பு” என்று இயேசு நம்மை இந்த அனுபவத்தைப் பெறுவதால்‌ தான்‌ உப்புக்கு ஓப்பிடுகின்‌றார்‌. அவரை வணங்க வந்தோம்‌ என்று ஞானியர்‌ கூறியதைப்‌ போல்‌ அவருக்காக அவரை வணங்கச் செல்வோம்.
அதற்கு அவனருளே வழிகாட்டும்‌.அவனருளால்‌ அவன்தாள்‌ வணங்கி வாழ்வு பெறுவோம்‌.