குழந்தையைப் போல மகிழ்ந்திருப்போம் பாலன் இயேசுவுடன்

xmas

“கடவுளை யாரும்‌ கண்டதில்லை. தந்தையின்‌ நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும்‌, கடவுள்‌ தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை 'வெளிப்படுத்தியுள்ளார்‌” (யோவா 1:18).

ஆகவே, கிறிஸ்துமஸ்‌ விழா என்பது இயேசு இறைத்‌ தந்தையின்‌ நெஞ்சத்திலிருந்து புறப்பட்டு, அன்னை மரியாவின்‌ மடியில்‌ குதித்து தவழ்ந்த நிகழ்வைக்‌ கொண்டாடுவது. நாமும்‌ குழந்தைக்‌குரிய துணிச்சலோடு இறைவனிடம்‌ விளையாடி, அவரைத்‌ தொட்டு மகிழ்ந்து, அவரது கனி விரக்கத்தைப்‌ பெறுவோம்‌.

இந்நன்னாளில் இறைமகன் இயேசு பாலன் நம் உள்ளத்திலும், நம் இல்லத்திலும் பிறக்க வேண்டும். நம் வாழ்வின் மையமாக அவர் இருக்க வேண்டும். அவரை விட்டுபிரியாமல், நாம் என்றும் அவரில் இணைந்திருக்க வேண்டும். நம் நற்பணிகள் மூலம் அவர் நம்மில் தினமும் பிறந்திட வேண்டும். பிறந்தபோது அமைதியைத் தந்தவர் விண்ணகம் சென்றபோது அந்த அமைதியை நம் உள்ளத்தில் பதித்துவிட்டுச் சென்றார். அந்த அமைதியைப் பகிர்ந்திடுவோம். அன்பின் தூதராய் தரணியில் வலம் வருவோம்.

அன்பு நிறை இணையத்தளப் பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பின்மடல் தனது 23ஆம் ஆண்டுக் கிறிஸ்மஸ் சிறப்பு மலரைக் காணிக்கையாக்கி மகிழ்கிறது. உங்களின் கனிவான ஆதரவுக்கு என்றும் எங்கள் நன்றியும், செபங்களும்..
எம்மை உற்சாகத்துடன் பணியாற்ற ஊக்குவிக்கும் அருள்பணியாளர்களுக்கும், பார்வையாளராகிய உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நல்வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க...
என்றும் உங்கள் பணியில்
நவராஜன் - அன்பின்மடல்