பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலியின் முதல் நிமிட நிகழ்ச்சி

Image

பாசமுள்ள பார்வையில்...

பாசமுள்ள பார்வையில்...

2017ம் ஆண்டு புலர்ந்துள்ளது. இந்த ஆண்டைக் குறித்து எண்ணிய வேளையில், மனதில் முதலில் தோன்றியது, மரியன்னை. ஆம், பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சி கொடுத்த முதல் நூற்றாண்டு, வருகிற மே மாதம் சிறப்பிக்கப்படவுள்ளது. இந்த அற்புத நிகழ்வைக் கொண்டாட, இவ்வாண்டு மே மாதம் 12, 13 தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கல் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பாத்திமா அன்னை திருத்தலத்திற்குச் செல்கிறார்.

இந்த வரலாற்று நினைவையொட்டி, வத்திக்கான் வானொலியில், முதல் நிமிட நிகழ்ச்சி, அன்னை மரியாவுக்கும், பொதுவாக, அன்னையருக்கும் அர்ப்பணமாக்கப்பட்டுள்ளது. "பாசமுள்ள பார்வையில்..." என்ற பெயரில் துவங்கும் இந்த முதல் நிமிட நிகழ்ச்சி, ஒரு சேயின், மகவின் பார்வையிலிருந்து, அன்னையை, குறிப்பாக, மரியன்னையைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வருகிறது. கடந்த ஆண்டுகளில், வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிடம், வரலாற்றில் இன்று, நாளுமொரு நல்லெண்ணம், கவிதைக் கனவுகள், வாழ்ந்தவர் வழியில், கற்றனைத்தூறும், புனிதரும் மனிதரே, கடுகு சிறுத்தாலும், இது இரக்கத்தின் காலம்... என்ற பல வடிவங்களில் உங்களை வந்தடைந்தது. இந்த வரிசையில், ஜனவரி ஒன்று முதல், உங்களை வந்தடைவது... பாசமுள்ள பார்வையில்..

அன்பின் மடல் பார்வையாளர்களும் அன்னையின் பாசமழையில் சுவைத்திட வத்திக்கான் வானொலியின் அனுமதியுடன் இங்கு பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சிக் கொள்கிறது. வத்திக்கான் வானொலியின் தமிழ் பணிக் குழுவினருக்கு எம் இதயம் கனிந்த நன்றி