அன்றாட வாழ்வில் புனித இஞ்ஞாசியரின் ஆன்மீகம்

(அருள்தந்தை தம்புராஜ் சே.ச. அவர்கள் எழுதிய "பத்து வாரங்களில் பரமனோடு பரவசம்" என்ற நூலின் பயிற்சிமுறைகள்)

தியான மறையுரை
அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

Spiritual exercises in day-to-day life - Ignatian Retreat

(Blissful union with the Lord in ten weeks)

Reflective Meditations led by
Rev.Fr.Thamburaj SJ

உட்புகுமுன் ....

நவீன உலகம் அதுதான் இன்று நாம் வாழும் உலகம்! துரித உணவுக் கலாச்சாரம் நம்மைத் தூபம் போட்டு அழைக்கின்றது. விளம்பரம், நுகர்வுக் கலாச்சாரம் நம் கண்களைக் கவர்ந்து, கால்களைத் தன் பக்கம் இழுக்கின்றது. எங்கும், எதிலும், எப்போதும் பரபரப்பு, அவசரம், வேகம். பள்ளிக்கும், கல்லூரிக்கும், அலுவலகத்திற்க்கும் செல்ல வேண்டியிருப்பதால், ஆதவன் உதயமாகு முன்னரே விழித்தெழுந்து சமையல் மற்றும் ஏனைய கடமைகளை முடிக்கவேண்டிய கட்டாயம்!

சுழலும் பம்பரம் போல் வேகமாகச் சுழன்றாலும் விவேகம் வேண்டுமல்லவா? பரபரப்பு இட்டுச் செல்லும் பரிதவிப்பில் நிதானம் வேண்டுமல்லவா? அவசரம் காட்டும் மனதிற்குச் சற்று ஓய்வும் அமைதியும் வேண்டுமல்லவா? பொருள் தேடும் வாழ்வில் அருளும் வேண்டுமல்லவா? அந்த அருள் வளத்தையும் அருங்கொடையாகத் தரும் இறைவனோடு உரையாட, உறவாட, மனமகிழ்வு பெற, மனநிறைவு பெற, மன அமைதி பெற சற்றுத்தனியே ஒதுங்கியிருந்து செபிக்கவேண்டாமா ?

இதோ, ஒரு சிறிய அரிய நூல்! எளிய முறையில் இறைவனோடு உறவாட, உங்கள் கரங்களிலே தவழ விடுகின்றோம். உங்கள் எண்ணத்திலே புதுமை பெற, புத்துணர்வு பெற, வாழ்விலே மனநிறைவு அடைய இந்நூலினைப் படியுங்கள். படித்துத் தியானித்துப் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன்!

இக்கையேட்டைக் கையாளும் முறை

  • அதிகாலையில் அல்லது மாலையில் இறைவனோடு உறவாட சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
  • சுந்தடி சத்தமில்லாத, தனிமையான, ஓரிடத்தில் அமருங்கள். குறிப்பெடுத்துக்கொள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இந்நூலில் ஒவ்வொரு நாளும் குறிக்கப்பட்டுள்ள அருள்வாக்கை அவசரமில்லாமல் அமைதியாக இரு முறை படியுங்கள். அதன் பின் பெறவேண்டிய அருளுக்காக, அருள்வேண்டல் செபத்தைச் சொல்லுங்கள்.
  • அதன் பின் ஆழ்ந்து தியானித்தல் என்ற தலைப்பில் காணும் மூன்று முக்கிய வசனங்களை ஒன்றன் பின் ஒன்றாக, சிறிது இடைவேளை விட்டுப் படியுங்கள்.
  • முதல் வசனத்தைப் படித்தவுடன் சிறிது நேரம் அமைதி காத்து, ஆழ்ந்து சிந்தித்து உள்ளத்தில் எழும் உணர்வுகளைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அதைப் போலவே இரண்டாம், மூன்றாம் வசனங்களைப் படித்த பின்பு குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
  • பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் மூன்று வசனங்களைக் குறித்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு, அதனால் பெற்ற உள்ளுணர்வுகளின் பின்னணியில் உரையாடல் என்ற பகுதியில் காணும் செபத்தையும், உங்கள் மனதில் எழும் செபத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள்.
  • இறுதியாக கர்த்தர் கற்பித்த செபத்தை ஒரு தடவையும், அருள் நிறை.... என்ற செபத்தை ஒரு தடவையும் ......... புகழுரைச் செபத்தை ஒரு தடவையும், சொல்லி இந்த ஆழ்நிலை தியான, செபப் பயிற்சியை முடியுங்கள்.

தொடர் அனுபவம்:

இவ்வாறு,பத்துவாரங்களில் செய்து முடித்த இப்பயிற்சி முடிந்த உடன், மீண்டும் முதல் வாரப் பயிற்சிகளையும், அதன்பின் தொடர்ந்து பத்து வாரங்களுக்கான பயிற்சிகளையும் மீண்டும் செய்யுங்கள். ஏனெனில் முதல் தடவை செய்த பயிற்சிகளை மீண்டும் செய்கின்ற பொழுது, "ஆழம் ஆழத்தை அழைப்பது" போல (தி .பா:42:7) நமது உள்ளத்தில் இறைவார்தை இன்னும் ஆழமாகச் சென்று, பல புதிய, புதுமையான சிந்தனைகளையும் உள்ளுணர்வுகளையும் பெறச் செய்யும்.

  • தியானிக்கப் பழகி விட்டால் செபமும் எளிதாக, இனிதாக இருக்கும்.
  • மேலும் ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போகுமுன், அந்த நாளுக்குரிய அருள்வாக்கினை மையமாக வைத்து, ஐந்து நிமிடங்களாவது ஆத்தும சோதனை செய்தால், புனித வாழ்வுக்குச் செல்லும் எளிய, சிறிய, குறுக்கு வழியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை .

"ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின் மீது எத்துணை பற்றுக் கொண்டுள்ளேன். நாள் முழுவதும் அதைப் பற்றியே சிந்திக்கின்றேன். என் காலுக்கு உம் வாக்கே விளக்கு. என் பாதைக்கு ஒளியும் அதுவே. (தி.பா.119:97,105) என்ற திருப் பாடல்களின் புகழிசை நம் நாவிலும், உள்ளத்திலும் ரீங்காரமாக இசைக்கட்டும்.

Spiritual exercises in day-to-day life

These spiritual exercises are a silent Ignatian retreat built around the elements of Lectio Divina and the Examen prayer of St.Ignatius of Loyola. The Examen prayer is a technique of prayerful reflection on the events of our everyday life, in order to discern God’s direction for us. On this retreat, we will review our life from a prayerful and God-centered perspective.

These reflective meditations are a package of retreat program, based on the spiritual exercises of St.Ignatius of Loyola, scheduled for 70 days. St.Ignatius of Loyola’s Examen is an opportunity for peaceful reflective prayer. It invites us to find the movement of God in all the people and events in our day-to-day life.. The Examen is simply a set of introspective prompts for us to follow or adapt to our own character and spirit.

Before commencing this spiritual exercise:

  • Spare some time every day, either in the morning or evening, to converse with the Lord in silence.
  • Choose a place, for example, a corner of your house; Let it become a sacred space for you. Place a mat or towel and keep the Holy Bible there. Let the Holy Bible be open always in that sacred place.
  • Before starting the prayer, light a lamp, preferably an oil lamp: Instead you may also light a candle. Put some flowers around the Holy Bible.
  • Keep a note book for taking notes on the reflections.
  • Begin the day’s spiritual exercise with a pause and a slow, deep breath or two; become aware that you are in the presence of the Holy.
  • Start reading the prescribed passage from the Word of God calmly and slowly. You may also read the same passage for the second time to grasp the main theme of the passage.
  • After reciting the particular “Prayer”, read the three points given in the “Reflective Meditations”, one by one slowly and attentively. Ponder over these points carefully and intensively, again one by one, and write down the thoughts that arise in your mind.
  • Meditate on these three points comprehensively for fifteen to twenty minutes. In this background, pray the “Supplication”, together with your personal prayers that arise in your mind.
  • Finally, recite ‘Our Father’, ‘Hail Mary’ and ‘Glory be to the Father’ and conclude the meditative exercise.




மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
professional logo design
professional logo design

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com