அன்றாட வாழ்வில் புனித இஞ்ஞாசியரின் ஆன்மீகம்

(அருள்தந்தை தம்புராஜ் சே.ச. அவர்கள் எழுதிய "பத்து வாரங்களில் பரமனோடு பரவசம்" என்ற நூலின் பயிற்சிமுறைகள்)

தியான மறையுரை
அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

ஆறாம் வாரம்

பம்பரம் போல் பரபரப்பாக சுழுலும் வாழ்வில் ஒரமாய் ஒதுங்கி உன்னதர் இயேசுவோடு உரையாடி ஒளிதேடி இறைவாக்கை விளக்காக வாழ்வாக வரவேற்று வளம் பெறுக!

36ஆம் நாள் கொதித்தெழுந்த கோமகன்


அருள்வாக்கு : லூக்கா 15:25-32

25 "அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார். 27 அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். 28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29 அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமை போன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். 31 அதற்குத் தந்தை, மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32 இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்."

அருள் வேண்டல்

ஆண்டவரே! எனது பாவநிலையை அறிந்தும் நீர் என்னை ஏற்றுக் கொண்டுள்ளீர். நானும் பிறருடைய பலவீன நிலையை அறிந்து புரிந்து கொண்டு அவர்களை ஏற்றுக்கொண்டு அன்பு செய்ய அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. அவன் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தான்.
  2. பாரும்! இத்தனை ஆண்டுகளாக நான் அடிமை போன்று உமக்கு வேலை செய்து வருகிறேன்.
  3. மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய், என்னுடைய தெல்லாம் உன்னுடையதே.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! நான் எந்த நிலையில் இருந்தாலும் எப்பொழுதும் உம்முடனே நான் இருக்கின்றேன் என்ற உணர்வு எனக்கு வேண்டும். நான் என்றும் மகிழ்ச்சியோடு இருக்க வரம் தாரும்.

36th Day – The enraged elder son


Word of God: Luke 15:25 – 32

25 “Now his elder son was in the field; and when he came and approached the house, he heard music and dancing. 26 He called one of the slaves and asked what was going on. 27 He replied, ‘Your brother has come, and your father has killed the fatted calf, because he has got him back safe and sound.’ 28 Then he became angry and refused to go in. His father came out and began to plead with him. 29 But he answered his father, ‘Listen! For all these years I have been working like a slave for you, and I have never disobeyed your command; yet you have never given me even a young goat so that I might celebrate with my friends. 30 But when this son of yours came back, who has devoured your property with prostitutes; you killed the fatted calf for him!’ 31 Then the father said to him, ‘Son, you are always with me, and all that is mine is yours. 32 But we had to celebrate and rejoice, because this brother of yours was dead and has come to life; he was lost and has been found.’”

Prayer:

Lord! In spite of my sinfulness, you have accepted me. Give me the grace to discern and the weaknesses of others and accept and love them.

Reflective Meditation:

  1. He became angry and refused to go in.
  2. ‘Listen! For all these years I have been working like a slave for you’.
  3. ‘Son, you are always with me, and all that is mine is yours’.

Supplication:

Lord! I want to have the perception that I am always with you, irrespective of the status in my life. Give me the gift to be joyful forever.

37ஆம் நாள் இரக்கத்தைப் பெற்ற பாவி


அருள்வாக்கு : லூக்கா 18: 9-14

9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 10 "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். 11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் என்றார்." 14 இயேசு , "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என்றார்.

அருள் வேண்டல்

ஆண்டவரே! எனது தாழ்நிலையைக் கண்டுணர்ந்து உமது இரக்கத்திற்காக மன்றாட அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி நன்றி கூறுகின்றேன்.
  2. கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்.
  3. தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! எனது கர்வத்தை நான் அடக்கி ஆண்டு தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர எனக்கு உதவியருளும். பிறரைத் தீர்வையிடாத நிலையை நான் அடைய அருள்தாரும்.

37th Day – The sinner who received mercy.


Word of God: Luke 18:9 – 14

9 He also told this parable to some who trusted in themselves that they were righteous and regarded others with contempt: 10 “Two men went up to the temple to pray, one a Pharisee and the other a tax collector. 11 The Pharisee, standing by himself, was praying thus, ‘God, I thank you that I am not like other people: thieves, rogues, adulterers, or even like this tax collector. 12 I fast twice a week; I give a tenth of all my income.’ 13 But the tax collector, standing far off, would not even look up to heaven, but was beating his breast and saying, ‘God, be merciful to me, a sinner!’ 14 I tell you, this man went down to his home justified rather than the other; for all who exalt themselves will be humbled, but all who humble themselves will be exalted.”

Prayer:

Lord! Grant me the grace to perceive my lowliness and pray for your mercy.

Reflective Meditation:

  1. I thank you that I am not like this tax collector.
  2. ‘God, be merciful to me’.
  3. All who humble themselves will be exalted.

Supplication:

Lord! Help me to restrain my pride and grow in the virtue of humility. May I receive the grace not to judge others..

38ஆம் நாள் மன்னிக்க மறுத்த பணியாளன்


அருள்வாக்கு : மத்தேயு 18:21-35

21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். 22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். 23 விண்ண ரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் ; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். 24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய பொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். 25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். 26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்' என்றான். 27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுத்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். 28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு , நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். 29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். 30 ஆனால் அவன் அதற்கு இசையாது , கடனைத் திருப்பி அடைக்கும் வரை அவரைச் சிறையிலடைத்தான் . 31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்தைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள் .32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, “ பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன் . 33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். 34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். 35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். “

அருள் வேண்டல்

ஆண்டவரே! நீர் எனக்கு இரக்கம் காட்டியது போல் பிறருக்கும் நான் இரக்கம் காட்டும் அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. பணியாளரின் தலைவன் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
  2. நான் உனக்கு இரக்கம் காட்டியது போல் நீயும் உன் உடன் பணியாளனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும்.
  3. உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதிரிகளை மனமார மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! என் குற்றங்களையெல்லாம் நீர் மன்னித்ததற்கு நன்றி கூறுகிறேன். பிறருடைய குற்றங்களை மன்னித்து அவர்களை அன்பு செய்ய எனக்குத் தாராள மனதைத்தாரும்.

38th Day – The servant who refused to forgive.


Word of God: Matthew 18:21 – 35

21 Then Peter came and said to him, “Lord, if another member of the church[g] sins against me, how often should I forgive? As many as seven times?” 22 Jesus said to him, “Not seven times, but, I tell you, seventy-seven times. 23 “For this reason the kingdom of heaven may be compared to a king who wished to settle accounts with his slaves. 24 When he began the reckoning, one who owed him ten thousand talents was brought to him; 25 and, as he could not pay, his lord ordered him to be sold, together with his wife and children and all his possessions, and payment to be made. 26 So the slave fell on his knees before him, saying, ‘Have patience with me, and I will pay you everything.’ 27 And out of pity for him, the lord of that slave released him and forgave him the debt. 28 But that same slave, as he went out, came upon one of his fellow slaves who owed him a hundred denarii; and seizing him by the throat, he said, ‘Pay what you owe.’ 29 Then his fellow slave fell down and pleaded with him, ‘Have patience with me, and I will pay you.’ 30 But he refused; then he went and threw him into prison until he would pay the debt. 31 When his fellow slaves saw what had happened, they were greatly distressed, and they went and reported to their lord all that had taken place. 32 Then his lord summoned him and said to him, ‘You wicked slave! I forgave you all that debt because you pleaded with me. 33 Should you not have had mercy on your fellow slave, as I had mercy on you?’ 34 And in anger his lord handed him over to be tortured until he would pay his entire

debt. 35 So my heavenly Father will also do to every one of you, if you do not forgive your brother or sister from your heart.”

Prayer:

Lord! Grant me the grace to have mercy on others, as you are having mercy on me.

Reflective Meditation:

  1. Out of pity for him, the lord of that slave released him and forgave him the debt.
  2. ‘Should you not have had mercy on your fellow slave, as I had mercy on you?’.
  3. So my heavenly Father will also do to every one of you, if you do not forgive your brother or sister from your heart.

Supplication:

Lord! I thank you for forgiving all my sins. Give me a benevolent heart to forgive the sins of others and to love them.

39ஆம் நாள் பகிராத வாழ்வு பயனில்லாத வாழ்வு


அருள்வாக்கு லூக்கா 16:19-31

19 "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். 21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். 22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். 23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். 24 அவர், தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். 25 அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார். 27 "அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். 29 அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். 30 அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். 31 ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்' என்றார்."

அருள் வேண்டல்

ஆண்டவரே! ஏழை எளியோரைப் பற்றிக் கவலைப்படாது இருக்கும் எனக்கு அவர்கள் மீது கனிவிரக்க அன்பை என்னில் சுரக்க வையும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
  2. தந்தை ஆபிரகாமே, எனக்கிரங்கும். லாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்.
  3. அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால் இறந்த ஒருவர் உயிர்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! பிறரது துன்பத்தைக் கண்டும் காணாதது போல் மந்தமாக இருந்ததை நினைத்து மனம் வருந்துகிறேன். உமது குரலுக்குச் செவிசாய்த்து அதன்படி என் வாழ்க்கையை மாற்றியமைக்க வரம் தரும்.

39th Day – Life not shared with others is fruitless.


Word of God: Luke 16:19 – 31

19 “There was a rich man who was dressed in purple and fine linen and who feasted sumptuously every day. 20 And at his gate lay a poor man named Lazarus, covered with sores, 21 who longed to satisfy his hunger with what fell from the rich man’s table; even the dogs would come and lick his sores. 22 The poor man died and was carried away by the angels to be with Abraham. The rich man also died and was buried. 23 In Hades, where he was being tormented, he looked up and saw Abraham far away with Lazarus by his side. 24 He called out, ‘Father Abraham, have mercy on me, and send Lazarus to dip the tip of his finger in water and cool my tongue; for I am in agony in these flames.’ 25 But Abraham said, ‘Child, remember that during your lifetime you received your good things, and Lazarus in like manner evil things; but now he is comforted here, and you are in agony. 26 Besides all this, between you and us a great chasm has been fixed, so that those who might want to pass from here to you cannot do so, and no one can cross from there to us.’ 27 He said, ‘Then, father, I beg you to send him to my father’s house— 28 for I have five brothers—that he may warn them, so that they will not also come into this place of torment.’ 29 Abraham replied, ‘They have Moses and the prophets; they should listen to them.’ 30 He said, ‘No, father Abraham; but if someone goes to them from the dead, they will repent.’ 31 He said to him, ‘If they do not listen to Moses and the prophets, neither will they be convinced even if someone rises from the dead.’”

Prayer:

Lord! I am callous about the poor and needy. May compassionate love for them gush forth within me.

Reflective Meditation:

  1. Rich man feasted sumptuously every day.
  2. ‘Father Abraham, have mercy on me, and send Lazarus to dip the tip of his finger in water and cool my tongue’.
  3. ‘If they do not listen to Moses and the prophets, neither will they be convinced even if someone rises from the dead’.

Supplication:

Lord! I am sorry that I am apathetic to the sufferings of others. Grant me the grace to listen to your voice and transform my life accordingly.

40ஆம் நாள் கொடிய குத்தகைக்காரர்


அருள்வாக்கு மத்தேயு 21:33-41

33 "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத்தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். 35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப்புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். 36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். 37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். 38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், 'இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். 40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?" என இயேசு கேட்டார். 41 அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.

அருள் வேண்டல்

ஆண்டவரே! நீர் கொடுக்கும் கொடைகளை நன்றியுணர்வோடு நான் ஏற்று அவற்றை உமது மகிமைக்காகப் பயன்படுத்த அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. அவர் தமக்குச் சேரவேண்டிய பழங்களைப் பெற்றுவரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.
  2. வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம். அப்போது இவன் சொத்து நமக்குக்கிடைக்கும்.
  3. அத்தீயோரை ஈவிரக்கிமின்றி ஒழித்து விடுவார்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! நீர் என்னிடம் ஒப்படைத்தக் கொடைகளை உமது மேன்மைக்காகப் பயன்படுத்தி உம்மை மகிமைப் படுத்த வரம்தாரும்.

40th Day – The hardhearted lessor.


Word of God: Matthew 21:33 – 41

33 “Listen to another parable. There was a landowner who planted a vineyard, put a fence around it, dug a wine press in it, and built a watchtower. Then he leased it to tenants and went to another country. 34 When the harvest time had come, he sent his slaves to the tenants to collect his produce. 35 But the tenants seized his slaves and beat one, killed another, and stoned another. 36 Again he sent other slaves, more than the first; and they treated them in the same way. 37 Finally he sent his son to them, saying, ‘They will respect my son.’ 38 But when the tenants saw the son, they said to themselves, ‘This is the heir; come, let us kill him and get his inheritance.’ 39 So they seized him, threw him out of the vineyard, and killed him. 40 Now when the owner of the vineyard comes, what will he do to those tenants?” 41 They said to him, “He will put those wretches to a miserable death, and lease the vineyard to other tenants who will give him the produce at the harvest time.”

Prayer:

Lord! Grant me the grace to accept your gifts with thanks and use them for your glory.

Reflective Meditation:

  1. He sent his slaves to the tenants to collect his produce.
  2. ‘Come, let us kill him and get his inheritance’.
  3. Will put those wretches to a miserable death.

Supplication:

Lord! Give me the grace to glorify you by using the gifts that you have endowed me with for your honour.

41ஆம் நாள் விழிப்பாய் இருந்த தோழியர்


அருள்வாக்கு : மத்தேயு 25: 1-13

1"அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். 2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். 3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. 4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். 5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். 6 நள்ளிரவில், 'இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. 7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். 8 அப்போது அறிவிலிகள் முன் மதியுடையோரைப் பார்த்து, 'எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். 9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, 'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது' என்றார்கள். 10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. 11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, 'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்து விடும்' என்றார்கள். 12 அவர் மறுமொழியாக, 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். 13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."

அருள் வேண்டல்

ஆண்டவரே! நாங்கள் சோம்பலைத் தவிர்த்து விழிப்புடன் உம் ஊழியத்தில் ஈடுபட அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. முன்மதி உடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
  2. எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்.
  3. விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது
.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! நாங்கள் விழித்திருந்து செபித்து உமது இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் முன்மதியை எங்களுக்குத் தாரும்.

41st Day – The prudent bridesmaids.


Word of God: Matthew 25:1 – 13

1 “Then the kingdom of heaven will be like this. Ten bridesmaids took their lamps and went to meet the bridegroom.[b] 2 Five of them were foolish, and five were wise. 3 When the foolish took their lamps, they took no oil with them; 4 but the wise took flasks of oil with their lamps. 5 As the bridegroom was delayed, all of them became drowsy and slept. 6 But at midnight there was a shout, ‘Look! Here is the bridegroom! Come out to meet him.’ 7 Then all those bridesmaids[c] got up and trimmed their lamps. 8 The foolish said to the wise, ‘Give us some of your oil, for our lamps are going out.’ 9 But the wise replied, ‘No! there will not be enough for you and for us; you had better go to the dealers and buy some for yourselves.’ 10 And while they went to buy it, the bridegroom came, and those who were ready went with him into the wedding banquet; and the door was shut. 11 Later the other bridesmaids[d] came also, saying, ‘Lord, lord, open to us.’ 12 But he replied, ‘Truly I tell you, I do not know you.’ 13 Keep awake therefore, for you know neither the day nor the hour.

Prayer:

Lord! Grant me the grace to avoid our lethargic attitude and commit ourselves in your service prudently.

Reflective Meditation:

  1. The wise took flasks of oil with their lamps.
  2. ‘Give us some of your oil, for our lamps are going out’.
  3. Keep awake, for you know neither the day nor the hour.

Supplication:

Lord! Give me the wisdom to be awake, praying and waiting for your second coming.

42ஆம் நாள் பயனற்ற பணியாளன்


அருள்வாக்கு : மத்தேயு 25: 14-30

14 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். 15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். 17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். 18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். 19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். 20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, 'ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். 21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். 22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, 'ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். 23 அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்' என்றார். 24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, 'ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். 25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். 26 அதற்கு அவருடைய தலைவர், சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? 27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். 28 எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். 29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். 30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம் பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

அருள் வேண்டல்

ஆண்டவரே! நான் சோம்பேறியாக இல்லாமல் நீர் கொடுத்துள்ள கொடைகளைப் பயன்படுத்தி வெற்றிவாழ்க்கை வாழ அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.
  2. நன்று நன்று நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.
  3. உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும் அவர்கள் நிறைவாகப் பெறுவர் இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! நான் பொறுப்புணர்வோடு எனது கொடைகளைப் பெருக்கி உமது பயனுள்ள ஊழியனாக இருக்க என்னை வழிநடத்தும்.

42nd Day – The unproductive servant.


Word of God: Matthew 25:14 – 30

14 “For it is as if a man, going on a journey, summoned his slaves and entrusted his property to them; 15 to one he gave five talents, to another two, to another one, to each according to his ability. Then he went away. 16 The one who had received the five talents went off at once and traded with them, and made five more talents. 17 In the same way, the one who had the two talents made two more talents. 18 But the one who had received the one talent went off and dug a hole in the ground and hid his master’s money. 19 After a long time the master of those slaves came and settled accounts with them. 20 Then the one who had received the five talents came forward, bringing five more talents, saying, ‘Master, you handed over to me five talents; see, I have made five more talents.’ 21 His master said to him, ‘Well done, good and trustworthy slave; you have been trustworthy in a few things, I will put you in charge of many things; enter into the joy of your master.’ 22 And the one with the two talents also came forward, saying, ‘Master, you handed over to me two talents; see, I have made two more talents.’ 23 His master said to him, ‘Well done, good and trustworthy slave; you have been trustworthy in a few things, I will put you in charge of many things; enter into the joy of your master.’ 24 Then the one who had received the one talent also came forward, saying, ‘Master, I knew that you were a harsh man, reaping where you did not sow, and gathering where you did not scatter seed; 25 so I was afraid, and I went and hid your talent in the ground. Here you have what is yours.’ 26 But his master replied, ‘You wicked and lazy slave! You knew, did you, that I reap where I did not sow, and gather where I did not scatter? 27 Then you ought to have invested my money with the bankers, and on my return I would have received what was my own with interest. 28 So take the talent from him, and give it to the one with the ten talents. 29 For to all those who have, more will be given, and they will have in abundance; but from those who have nothing, even what they have will be taken away. 30 As for this worthless slave, throw him into the outer darkness, where there will be weeping and gnashing of teeth.’

Prayer:

Lord! Grant me the grace to avoid laziness and make my life fruitful by using the gifts you gave me.

Reflective Meditation:

  1. The man summoned his slaves and entrusted his property to them.
  2. ‘Well done, good and trustworthy slave; you have been trustworthy in a few things, I will put you in charge of many things’.
  3. For to all those who have, more will be given, and they will have in abundance; but from those who have nothing, even what they have will be taken away.

Supplication:

Lord! Guide me to be your servant, by multiplying the gifts you gave me with trustworthiness.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பரமனோடு பரவசம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com