அன்றாட வாழ்வில் புனித இஞ்ஞாசியரின் ஆன்மீகம்

(அருள்தந்தை தம்புராஜ் சே.ச. அவர்கள் எழுதிய "பத்து வாரங்களில் பரமனோடு பரவசம்" என்ற நூலின் பயிற்சிமுறைகள்)

தியான மறையுரை
அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

ஐந்தாம் வாரம்

பம்பரம் போல் பரபரப்பாக சுழுலும் வாழ்வில் ஒரமாய் ஒதுங்கி உன்னதர் இயேசுவோடு உரையாடி ஒளிதேடி இறைவாக்கை விளக்காக வாழ்வாக வரவேற்று வளம் பெறுக!

29ஆம் நாள் கடவுளைப்போல் இருக்க விரும்பிய மனிதன்


அருள்வாக்கு : தொடக்க நூல் 3:1-19

1 ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், "கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?" என்று கேட்டது. 2 பெண் பாம்பிடம், "தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்," என்றாள். 4 பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்; 5 ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும் " என்றது. 6 அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். 7 அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்து கொண்டனர். 8 மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். 9 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார். 10 "உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன். 11 "நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார். 12 அப்பொழுது அவன், "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். 13 ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். 14 ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப் பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். 15 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். 16 அவர் பெண்ணிடம் "உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்” என்றார் 17 அவர் மனிதனிடம், "உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். 18 முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய். 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்றார்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! பகைவனின் சூழ்ச்சியிலிருந்து என்னைக் காப்பாற்றும்.

ஆழ்ந்து தியானித்தல்:

  1. என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப்பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நானும் உண்டேன்.
  2. உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
  3. நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து உமது சித்தத்தை நிறைவேற்ற வரம் அருளும். ஒவ்வொரு நாளும் எனது கதி என்னவென்று அறிந்து சிந்தித்துச் செயல்பட அருள்தாரும்.

29th Day – Man who wanted to be like God


Word of God: Genesis 3:1 – 19

1 Now the serpent was more crafty than any other wild animal that the Lord God had made. He said to the woman, “Did God say, ‘You shall not eat from any tree in the garden’?” 2 The woman said to the serpent, “We may eat of the fruit of the trees in the garden; 3 but God said, ‘You shall not eat of the fruit of the tree that is in the middle of the garden, nor shall you touch it, or you shall die.’” 4 But the serpent said to the woman, “You will not die; 5 for God knows that when you eat of it your eyes will be opened, and you will be like God, knowing good and evil.” 6 So when the woman saw that the tree was good for food, and that it was a delight to the eyes, and that the tree was to be desired to make one wise, she took of its fruit and ate; and she also gave some to her husband, who was with her, and he ate. 7 Then the eyes of both were opened, and they knew that they were naked; and they sewed fig leaves together and made loincloths for themselves.8 They heard the sound of the Lord God walking in the garden at the time of the evening breeze, and the man and his wife hid themselves from the presence of the Lord God among the trees of the garden. 9 But the Lord God called to the man, and said to him, “Where are you?” 10 He said, “I heard the sound of you in the garden, and I was afraid, because I was naked; and I hid myself.” 11 He said, “Who told you that you were naked? Have you eaten from the tree of which I commanded you not to eat?” 12 The man said, “The woman whom you gave to be with me, she gave me fruit from the tree, and I ate.” 13 Then the Lord God said to the woman, “What is this that you have done?” The woman said, “The serpent tricked me, and I ate.” 14 The Lord God said to the serpent, “Because you have done this, cursed are you among all animals and among all wild creatures; upon your belly you shall go, and dust you shall eat all the days of your life. 15 I will put enmity between you and the woman, and between your offspring and hers; he will strike your head, and you will strike his heel.” 16 To the woman he said, “I will greatly increase your pangs in childbearing; in pain you shall bring forth children, yet your desire shall be for your husband, and he shall rule over you.” 17 And to the man he said, “Because you have listened to the voice of your wife, and have eaten of the tree about which I commanded you, ‘You shall not eat of it,’ cursed is the ground because of you; in toil you shall eat of it all the days of your life; 18 thorns and thistles it shall bring forth for you; and you shall eat the plants of the field. 19 By the sweat of your face you shall eat bread until you return to the ground, for out of it you were taken; you are dust, and to dust you shall return.”

Prayer:

Lord! Deliver me from the conspiracies of the enemy.

Reflective Meditation:

  1. The woman whom you gave to be with me, she gave me fruit from the tree, and I ate.
  2. I will put enmity between you and the woman, and between your offspring and hers;
  3. You are dust, and to dust you shall return.

Supplication:

Lord! Grant me the grace to be obedient to your commandments and to fulfil your will. Help me to comprehend my destiny every day and act assiduously.

30ஆம் நாள் நாடோடி காயின்


அருள்வாக்கு: தொடக்க நூல் 4:1-16

1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். "ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள். 2 பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான். 3 சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். 4 ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். 5 ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது. 6 ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? 7 நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்" என்றார். 8 காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல் வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வெளியில் இருந்த பொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். 9 ஆண்டவர் காயினிடம் "உன் சகோதரன் ஆபேல் எங்கே" ? என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்கு தெரியாது. நான் என்ன , என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான். 10 அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக்கொண்டிருக்கிறது. 11 இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய். 12 நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார். 13 காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. 14 இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!" என்றான். 15 ஆண்டவர் அவனிடம் "அப்படியன்று ; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்" என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார். 16 பின்னர் காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! என்னில் உள்ள கோபம், காழ்ப்புணர்ச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த எனக்கு வரமருளும்.

ஆழ்ந்து தியானித்தல்:

  1. நீ நல்லது செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும்.
  2. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?
  3. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! எனது சினத்தைக் கட்டுப்படுத்த எனக்கு வரம் தாரும். காழ்ப்புணர்ச்சியில் நான் மூழ்காதபடி என்னைக் காப்பாற்றும். என் அயலாரை அன்பு செய்ய எனக்கு அருள்தாரும்.

30th Day – Cain, the fugitive.


Word of God: Genesis 4:1 – 16

1 Now the man knew his wife Eve, and she conceived and bore Cain, saying, “I have produced a man with the help of the Lord.” 2 Next she bore his brother Abel. Now Abel was a keeper of sheep, and Cain a tiller of the ground. 3 In the course of time Cain brought to the Lord an offering of the fruit of the ground, 4 and Abel for his part brought of the firstlings of his flock, their fat portions. And the Lord had regard for Abel and his offering, 5 but for Cain and his offering he had no regard. So Cain was very angry, and his countenance fell. 6 The Lord said to Cain, “Why are you angry, and why has your countenance fallen? 7 If you do well, will you not be accepted? And if you do not do well, sin is lurking at the door; its desire is for you, but you must master it.” 8 Cain said to his brother Abel, “Let us go out to the field.” And when they were in the field, Cain rose up against his brother Abel, and killed him. 9 Then the Lord said to Cain, “Where is your brother Abel?” He said, “I do not know; am I my brother’s keeper?” 10 And the Lord said, “What have you done? Listen; your brother’s blood is crying out to me from the ground! 11 And now you are cursed from the ground, which has opened its mouth to receive your brother’s blood from your hand. 12 When you till the ground, it will no longer yield to you its strength; you will be a fugitive and a wanderer on the earth.” 13 Cain said to the Lord, “My punishment is greater than I can bear! 14 Today you have driven me away from the soil, and I shall be hidden from your face; I shall be a fugitive and a wanderer on the earth, and anyone who meets me may kill me.” 15 Then the Lord said to him, “Not so! Whoever kills Cain will suffer a sevenfold vengeance.” And the Lord put a mark on Cain, so that no one who came upon him would kill him. 16 Then Cain went away from the presence of the Lord, and settled in the land of Nod,[d] east of Eden.

Prayer:

Lord! Grant me the grace to restraint the anger and grudge that arise within me.

Reflective Meditation:

  1. If you do not do well, sin is lurking at the door.
  2. Am I my brother’s keeper?
  3. You will be a fugitive and a wanderer on the earth.

Supplication:

Lord! Give the gift to control my anger; Deliver me that I do not get engulfed in animosity; Grant me the grace to love my neighbour.

31ஆம் நாள் எனது இதயத்திற்கடுத்தவன்


அருள்வாக்கு : 2 சாமுவேல் 11:1-17

1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார். 2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள். 3 தாவீது அவள் யாரென்று கேட்க, ஆளனுப்பினார். " அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா" என்று கூறினர். 4 தாவீது தூதரை அனுப்பி அவளை வரழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள். 5 அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள். 6 அப்பொழுது தாவீது "இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை" என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார். 7 உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார். 8 பிறகு தாவீது உரியாவிடம் , "உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்" என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார். உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை. 10 உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், "நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?" என்று கேட்டார். 11 அதற்கு உரியா தாவீதிடம், "பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளரும் திறந்த வெளிகளில் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்தும் என் மனைவியோடு உறவு கொண்டும் இருப்பேனா? உம்மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்” என்று சொன்னார். 12 தாவீது உரியாவிடம் , " இன்றும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பி வைக்கிறேன்" என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார். 13 தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்குக் குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார்; தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை. 14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். 15 அம்மடலில் அவர், "உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு . அவன் வெட்டுண்டு மடியட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 16 யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த பொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். 17 நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.

அருள் வேண்டல் :

ஆண்டவரே! எனது பாவநிலையை உணரச் செய்யும். பாவத்திற்காக மனம் கசிந்து அழக் கூடியக் கண்ணீ ரைத் தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

  1. தாவீது, ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை மாடியிலிருந்து கண்டார். அவள் மிக அழகிய தோற்றம் கொண்டிருந்தாள்.
  2. உரியாவைப் போர்கடுமையாக நடக்கும் முன் நிலையில் நிறுத்தி,அவனை விட்டுப் பின் வாங்கும். அவன் வெட்டுண்டு மடியட்டும்.
  3. இத்தியர் உரியாவும் மாண்டார்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! என் வாழ்க்கையில் ஒரு பாவத்தை மறைக்கப் பல பாவங்களைச் செய்துள்ளேன். தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

31st Day – One close to my heart.


Word of God: 2 Samuel 11:1-17

1 In the spring of the year, the time when kings go out to battle, David sent Joab with his officers and all Israel with him; they ravaged the Ammonites, and besieged Rabbah. But David remained at Jerusalem. 2 It happened, late one afternoon, when David rose from his couch and was walking about on the roof of the king’s house, that he saw from the roof a woman bathing; the woman was very beautiful. 3 David sent someone to inquire about the woman. It was reported, “This is Bathsheba daughter of Eliam, the wife of Uriah the Hittite.” 4 So David sent messengers to get her, and she came to him, and he lay with her. (Now she was purifying herself after her period.) Then she returned to her house. 5 The woman conceived; and she sent and told David, “I am pregnant.” 6 So David sent word to Joab, “Send me Uriah the Hittite.” And Joab sent Uriah to David. 7 When Uriah came to him, David asked how Joab and the people fared, and how the war was going. 8 Then David said to Uriah, “Go down to your house, and wash your feet.” Uriah went out of the king’s house, and there followed him a present from the king. 9 But Uriah slept at the entrance of the king’s house with all the servants of his lord, and did not go down to his house. 10 When they told David, “Uriah did not go down to his house,” David said to Uriah, “You have just come from a journey. Why did you not go down to your house?” 11 Uriah said to David, “The ark and Israel and Judah remain in booths; and my lord Joab and the servants of my lord are camping in the open field; shall I then go to my house, to eat and to drink, and to lie with my wife? As you live, and as your soul lives, I will not do such a thing.” 12 Then David said to Uriah, “Remain here today also, and tomorrow I will send you back.” So Uriah remained in Jerusalem that day. On the next day, 13 David invited him to eat and drink in his presence and made him drunk; and in the evening he went out to lie on his couch with the servants of his lord, but he did not go down to his house. 14 In the morning David wrote a letter to Joab, and sent it by the hand of Uriah. 15 In the letter he wrote, “Set Uriah in the forefront of the hardest fighting, and then draw back from him, so that he may be struck down and die.” 16 As Joab was besieging the city, he assigned Uriah to the place where he knew there were valiant warriors. 17 The men of the city came out and fought with Joab; and some of the servants of David among the people fell. Uriah the Hittite was killed as well.

Prayer:

Lord! Make me realise my sinfulness. May I repent and wail with tears for my sins.

Reflective Meditation:

  1. David saw from the roof a woman bathing; the woman was very beautiful.
  2. Set Uriah in the forefront of the hardest fighting, and then draw back from him, so that he may be struck down and die.
  3. Uriah the Hittite was killed as well.

Supplication:

Lord! In my life, I sinned many a time to cover-up one sin after another. Do not take your holy spirit from me. Restore to me the joy of your salvation.

32ஆம் நாள் அண்ணனை ஏமாற்றிய தம்பி


அருள்வாக்கு: தொடக்க நூல் 27:30-45

30 இவ்வாறு ஈசாக்கு யாக்கோபிற்கு ஆசி வழங்கி முடிந்ததும் , யாக்கோபு தந்தையின் முன்னிலையிலிருந்து விரைந்து வெளியேற, அவன் சகோதரன் ஏசா வேட்டைக்கறியுடன் வந்தான். 31 அவனும் சுவையான உணவுவகைகளைச் சமைத்துத் தன் தந்தையிடம் கொண்டுவந்து அவரை நோக்கி, "என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக்கறியை உண்டு , மனமார எனக்கு ஆசி வழங்குவாராக" என்றான். 32 அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி: நீ யார்' என, அவன்: நான் தான் உங்கள் தலைப்பேறான மகன் ஏசா' என்றான். 33 ஈசாக்கு மிகவும் நடுநடுங்கி, "அப்படியானால் வேட்டையாடி எனக்குக் கொண்டு வந்தவன் எவன்? நீ வருமுன் அந்த உணவை நான் உண்டு அவனுக்கு ஆசி வழங்கி விட்டேன். அவனே ஆசி பெற்றவனாய் இருப்பான்" என்றார். 34 ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, மிகவும் மனக்கசப்படைந்து பெருங்குரலெழுப்பிக் கதறி அழுதான். அவன் தன் தந்தையை நோக்கி, "அப்பா! எனக்கும் ஆசி வழங்குவீர்” என்றான். 35 அதற்கு அவர்: "உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்றுவிட்டான்" என்றார். 36 அதைக் கேட்ட ஏசா , "யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் இருமுறை என்னை ஏமாற்றி விட்டான். ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்குரிய ஆசியையையும் பிடுங்கிக் கொண்டான்" என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி: 'நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா?' என்று கேட்டான். 37 ஈசாக்கு ஏசாவிடம், "நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன். இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?" என்று சொல்ல, 38 ஏசா அவரை நோக்கி, "அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா" என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான். 39 அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக, " உன் குடியிருப்புக்கு நிலத்தின் செழுமையோ மேல் வானின் பனித்துளியோ கிட்டாது. 40 நீ உன் வாளினால் வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்கு அடிமையாய் இருப்பாய்; நீ கிளர்ந்து எழும் போது உன் கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை முறித்து விடுவாய்" என்றார். 41 தந்தையிடமிருந்து யாக்கோபு பெற்றிருந்த ஆசியை முன்னிட்டு ஏசா அவன் மீது வர்மம் கொண்டு, 'என் தந்தைக்காகத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கிவிட்டன. அதன்பின், என் தம்பி யாக்கோபைக் கொன்று போடுவேன்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அருள் வேண்டல்

ஆண்டவரே! நான் பிறரை ஏமாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை என்னிடமிருந்து முழுவதுமாய் அகற்றிவிடும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்று விட்டான்.
  2. யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில் அவன் இருமுறை என்னை ஏமாற்றிவிட்டான்.
  3. என் தந்தைக்குத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கி விட்டன. அதன்பின், என் தம்பியாக்கோபைக் கொன்று போடுவேன்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! என் அயலார் மீது வர்மம் வைக்காது என்னைப் பாதுகாத் தருளும். சுயநலத்தை என்னிடம் இருந்து அறவே அகற்றியருளும்.

32nd Day – Younger one who deceived his elder brother.


Word of God: Genesis 27: 30 – 45

30 As soon as Isaac had finished blessing Jacob, when Jacob had scarcely gone out from the presence of his father Isaac, his brother Esau came in from his hunting. 31 He also prepared savory food, and brought it to his father. And he said to his father, “Let my father sit up and eat of his son’s game, so that you may bless me.” 32 His father Isaac said to him, “Who are you?” He answered, “I am your first-born son, Esau.” 33 Then Isaac trembled violently, and said, “Who was it then that hunted game and brought it to me, and I ate it all before you came, and I have blessed him?—yes, and blessed he shall be!” 34 When Esau heard his father’s words, he cried out with an exceedingly great and bitter cry, and said to his father, “Bless me, me also, father!” 35 But he said, “Your brother came deceitfully, and he has taken away your blessing.” 36 Esau said, “Is he not rightly named Jacob? For he has supplanted me these two times. He took away my birthright; and look, now he has taken away my blessing.” Then he said, “Have you not reserved a blessing for me?” 37 Isaac answered Esau, “I have already made him your lord, and I have given him all his brothers as servants, and with grain and wine I have sustained him. What then can I do for you, my son?” 38 Esau said to his father, “Have you only one blessing, father? Bless me, me also, father!” And Esau lifted up his voice and wept. 39 Then his father Isaac answered him: “See, away from the fatness of the earth shall your home be, and away from the dew of heaven on high. 40 By your sword you shall live, and you shall serve your brother, but when you break loose, you shall break his yoke from your neck.” 41 Now Esau hated Jacob because of the blessing with which his father had blessed him, and Esau said to himself, “The days of mourning for my father are approaching; then I will kill my brother Jacob.” 42 But the words of her elder son Esau were told to Rebekah; so she sent and called her younger son Jacob and said to him, “Your brother Esau is consoling himself by planning to kill you. 43 Now therefore, my son, obey my voice; flee at once to my brother Laban in Haran, 44 and stay with him a while, until your brother’s fury turns away— 45 until your brother’s anger against you turns away, and he forgets what you have done to him; then I will send, and bring you back from there. Why should I lose both of you in one day?”

Prayer:

Lord! Remove from me completely the thinking in my mind of deceiving others.

Reflective Meditation:

  1. Your brother came deceitfully, and he has taken away your blessing.
  2. Is he not rightly named Jacob? For he has supplanted me these two times.
  3. The days of mourning for my father are approaching; then I will kill my brother Jacob.

Supplication:

Lord! Save me that I may not have hatred on my neighbours; Remove selfishness from me completely.

33ஆம் நாள் கண்காணிக்காத ஆயர்கள்


அருள்வாக்கு : எசேக்கியேல் 34: 1-25

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. 2 மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்குரை. அவர்களுக்கு இறைவாக்குரைத்துச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்து கொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும் ! 3 நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. 4 நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காய முற்றவற்றிற்குக் கட்டுப்போட வில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை . காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். 5 ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. 6 என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர். 7 எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: 8 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை . என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள். எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள் : 10 தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன். எனவே தாங்களே மேய்ந்துக் கொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! என் சுயநலத்தை அழித்துவிடும். பிறரை வழிநடத்தி ஆற்றப்படுத்தும் நல்ல ஆயனாக என்னை உருமாற்றும்.

ஆழ்ந்து தியானித்தல் :

  1. காணாமற்போன ஆடுகளை நீங்கள் தேடவில்லை.
  2. நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன்.
  3. என் மந்தை திறந்த வெளியில் பாதுகாப்பாய் வாழ்ந்து காடுகளில் உறங்கும்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! பலவீனம் உள்ளவர்களை நான் ஒதுக்கித் தள்ளியிருக்கின்றேன். பாதை தவறிப் போனவர்களைத் தேடி வழிநடத்த எனக்கு வரம் தாரும். நீரே நல்ல ஆயன், உம் வழி நடக்க எனக்கு வரமருளும்.

33rd Day – False shepherds who do not take care of the flock.


Word of God: Ezekiel 34: 1 – 25

1 The word of the Lord came to me: 2 Mortal, prophesy against the shepherds of Israel: prophesy, and say to them—to the shepherds: Thus says the Lord God: Ah, you shepherds of Israel who have been feeding yourselves! Should not shepherds feed the sheep? 3 You eat the fat, you clothe yourselves with the wool, you slaughter the fatlings; but you do not feed the sheep. 4 You have not strengthened the weak, you have not healed the sick, you have not bound up the injured, you have not brought back the strayed, you have not sought the lost, but with force and harshness you have ruled them. 5 So they were scattered, because there was no shepherd; and scattered, they became food for all the wild animals. 6 My sheep were scattered, they wandered over all the mountains and on every high hill; my sheep were scattered over all the face of the earth, with no one to search or seek for them. 7 Therefore, you shepherds, hear the word of the Lord: 8 As I live, says the Lord God, because my sheep have become a prey, and my sheep have become food for all the wild animals, since there was no shepherd; and because my shepherds have not searched for my sheep, but the shepherds have fed themselves, and have not fed my sheep; 9 therefore, you shepherds, hear the word of the Lord: 10 Thus says the Lord God, I am against the shepherds; and I will demand my sheep at their hand, and put a stop to their feeding the sheep; no longer shall the shepherds feed themselves. I will rescue my sheep from their mouths, so that they may not be food for them. 11 For thus says the Lord God: I myself will search for my sheep, and will seek them out. 12 As shepherds seek out their flocks when they are among their scattered sheep, so I will seek out my sheep. I will rescue them from all the places to which they have been scattered on a day of clouds and thick darkness. 13 I will bring them out from the peoples and gather them from the countries, and will bring them into their own land; and I will feed them on the mountains of Israel, by the watercourses, and in all the inhabited parts of the land. 14 I will feed them with good pasture, and the mountain heights of Israel shall be their pasture; there they shall lie down in good grazing land, and they shall feed on rich pasture on the mountains of Israel. 15 I myself will be the shepherd of my sheep, and I will make them lie down, says the Lord God. 16 I will seek the lost, and I will bring back the strayed, and I will bind up the injured, and I will strengthen the weak, but the fat and the strong I will destroy. I will feed them with justice.17 As for you, my flock, thus says the Lord God: I shall judge between sheep and sheep, between rams and goats: 18 Is it not enough for you to feed on the good pasture, but you must tread down with your feet the rest of your pasture? When you drink of clear water, must you foul the rest with your feet? 19 And must my sheep eat what you have trodden with your feet, and drink what you have fouled with your feet? 20 Therefore, thus says the Lord God to them: I myself will judge between the fat sheep and the lean sheep. 21 Because you pushed with flank and shoulder, and butted at all the weak animals with your horns until you scattered them far and wide, 22 I will save my flock, and they shall no longer be ravaged; and I will judge between sheep and sheep. 23 I will set up over them one shepherd, my servant David, and he shall feed them: he shall feed them and be their shepherd. 24 And I, the Lord, will be their God, and my servant David shall be prince among them; I, the Lord, have spoken. 25 I will make with them a covenant of peace and banish wild animals from the land, so that they may live in the wild and sleep in the woods securely.

Prayer:

Lord! Abolish my selfishness; Transform me as a good shepherd to guide and exhort others.

Reflective Meditation:

  1. You have not sought the lost.
  2. I myself will be the shepherd of my sheep, and I will make them lie down.
  3. My flock may live in the wild and sleep in the woods securely.

Supplication:

Lord! I have rejected the weak. Give me the grace to seek, bring back and guide the ones strayed away. You are the good shepherd. May I follow your way

34ஆம் நாள் வணங்காகக்கழத்துள்ள மக்கள்


அருள்வாக்கு : விடுதலைப் பயணம் 32:7-10

7 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இங்கிருந்து இறங்கிப்போ . நீ எகிப்திலிருந்து நடத்தி வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். 8 நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, 'இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக் கொள்கிறார்கள்." என்றார். 9 மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம் மக்களை எனக்குத் தெரியும் ; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள். 10 இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள் மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்" என்றார்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! உம்மைத்தவிர வேறு கடவுள் எமக்கில்லை. உம்மை எம் வாழ்வின் மையமாக வைத்து உம்மை ஆராதிக்க அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

  1. உம் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர்.
  2. வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்.
  3. நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! எங்கள் பாவங்களை மன்னித்து நீர் பேரிரக்கம் கொண்டவர் என்பதை நாங்கள் உணர வழிசெய்யும். எங்களை உமது மக்களாக ஏற்றுக் கொள்ளும்.

34th Day – The stiff-necked people.


Word of God: Exodus 32: 7 – 10

7 The Lord said to Moses, “Go down at once! Your people, whom you brought up out of the land of Egypt, have acted perversely; 8 they have been quick to turn aside from the way that I commanded them; they have cast for themselves an image of a calf, and have worshiped it and sacrificed to it, and said, ‘These are your gods, O Israel, who brought you up out of the land of Egypt!’” 9 The Lord said to Moses, “I have seen this people, how stiff-necked they are. 10 Now let me alone, so that my wrath may burn hot against them and I may consume them; and of you I will make a great nation.”

Prayer:

Lord! We have no other god besides you. Give us the grace to have you as the centre of our life and adore you.

Reflective Meditation:

  1. Your people have acted perversely.
  2. They are stiff-necked people.
  3. I may consume them; and of you I will make a great nation.

Supplication:

Lord! Forgive our sins and make us realise that you are compassionate. Accept us as your people.

35ஆம் நாள் தப்புக்கணக்கு


அருள்வாக்கு : மத்தேயு 20:1-16

1 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாளர்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். 2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். 3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையன்றி நிற்பதைக் கண்டார். 4 அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் என்றார். 5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். 6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். 7 அவர்கள் அவரைப் பார்த்து, எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை என்றார்கள். அவர் அவர்களிடம் நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் என்றார். 8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்கள் வரை அவர்களுக்குரிய கூலி கொடும் என்றார். 9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். 10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் விதம் தான் பெற்றார்கள். 11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, 12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே என்றார்கள். 13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, தோழரே நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை . நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? 14 உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? என்றார். 16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர், முதன்மையானோர் கடைசியாவர் என்று இயேசு கூறினார்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! உமது அன்புப் பெருக்கை , உமது தாராள மனதை , எனக்குத்தாரும். பிறருக்கு நிபந்தனையின்றி நான் அன்பு செய்ய அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

  1. நீங்கள் என் திராட்சைத் தோட்டத்திற்குப் போங்கள்.
  2. பகல் முழுவதும், வேலைப் பளுவையும், கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே!
  3. நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! உமது கணிப்பு தனித்தன்மை வாய்ந்தது. அதை நாங்கள் புரிந்து கொள்ள முடியாது. காலந்தப்பிப் பிறந்த கால் தவறி விழுந்த, தொலை தூரம் போய்த் தொலைந்த, கடையனாக கடைசி நேரத்தில் வந்த என்னக் கட்டியணைத்துக் கண்காணித்து வருவதற்காக உமக்கு நன்றி!

35th Day – The wrong calculation.


Word of God: Matthew 20: 1 – 16

1 “For the kingdom of heaven is like a landowner who went out early in the morning to hire laborers for his vineyard. 2 After agreeing with the labourers for the usual daily wage, he sent them into his vineyard. 3 When he went out about nine o’clock, he saw others standing idle in the marketplace; 4 and he said to them, ‘You also go into the vineyard, and I will pay you whatever is right.’ So they went. 5 When he went out again about noon and about three o’clock, he did the same. 6 And about five o’clock he went out and found others standing around; and he said to them, ‘Why are you standing here idle all day?’ 7 They said to him, ‘Because no one has hired us.’ He said to them, ‘You also go into the vineyard.’ 8 When evening came, the owner of the vineyard said to his manager, ‘Call the labourers and give them their pay, beginning with the last and then going to the first.’ 9 When those hired about five o’clock came, each of them received the usual daily wage. 10 Now when the first came, they thought they would receive more; but each of them also received the usual daily wage. 11 And when they received it, they grumbled against the landowner, 12 saying, ‘These last worked only one hour, and you have made them equal to us who have borne the burden of the day and the scorching heat.’ 13 But he replied to one of them, ‘Friend, I am doing you no wrong; did you not agree with me for the usual daily wage? 14 Take what belongs to you and go; I choose to give to this last the same as I give to you. 15 Am I not allowed to do what I choose with what belongs to me? Or are you envious because I am generous?’ 16 So the last will be first, and the first will be last.”

Prayer:

Lord! Grant me your abundant love and generosity. Give me the grace to love others unconditionally.

Reflective Meditation:

  1. You go into the vineyard.
  2. You have made them equal to us who have borne the burden of the day and the scorching heat.
  3. Are you envious because I am generous?

Supplication:

Lord! Your assessment is distinct, which we cannot understand. I thank you for embracing and keeping me, the one who was born untimely, had fallen many a time, strayed away long and lost and came last of all.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பரமனோடு பரவசம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com