கிறிஸ்து பிறப்பு விழா உறவுகளின் சங்கமம்- நமக்கும் இயேசுக்கும் இடையேயுள்ள பிணைப்பு. நாம் இயேசுவை நமது வழி, உண்மை, வாழ்வு என்ற ஏற்றுக் கொள்ளுகிறோம். அப்பொழுது நாம் மூன்று வகையான புதிய உறவுகளில் இணைகின்றோம்.
முதல் புதிய உறவு என்பது நமது நீதிபதியான இறைவன்; தொலைவில் இருந்தவர் அருகமையில் வருகிறார். புதியவராக இருந்தவர் நமக்கு நெருங்கிய தோழனாகிறார். அவர் மேல் உள்ள பயமானது அன்பாக மாறுகிறது.
இரண்டாவதாக அருகாமையிலுள்ள மனிதர்களுடன் நாம் புதிய உறவு கொள்ளுகிறோம். வெறுப்பானது விருப்பாகிறது. சுயநலம் பிறர் நலமாகி சேவையில் ஈடுபடுகிறது. கசப்பான விரோதம் அமைதியான நட்பாகிறது.
மூன்றாவதாக நமக்குள்ளேயே நாம் ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ளுகிறோம். நமது பலவீனம் நமக்கு பக்கபலமாக மாறுகிறது.
பின்வாங்கும் மன உளைச்சலிருந்து சாதனை புரியும் பக்குவமடைகிறோம். நிலையற்று, துன்புறும் மனதிற்கு சாந்தியை பெற்றுக் கொள்ளுகிறோம்.
இயேசுவில் பிறந்து புத்துயிர் பெறுவோம்.
அன்பின் மடல் பார்வையாளரான உங்களுக்கு எம் இதயங்கனிந்த கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
தங்கள் படைப்புகளை எழுதி அனுப்பிய எமது எழுத்தாளர்களுக்கு எம் நன்றிகள் பல!!!
தொடரும் தங்கள் மேலான நல்ஆதரவுக்கும் எம் நன்றிகள்....
தங்கள் அன்புள்ளA Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com