இரட்டிப்பு மகிழ்ச்சி

" பாட்டி வரப் போறாங்க கிறிஸ்மஸ்க்கு " அம்மாவின் அலறல் கேட்டு நாங்கள் சமையல் அறைக்கு சென்றோம். அம்மா கையில் கைப்பேசியுடன், சிரித்த முகத்துடன் பாட்டியிடம் பேசக் கொண்டு இருந்தார்கள். நாங்கள் பாட்டியுடன் கிறிஸ்மஸ் கொண்டடியது ஐந்து வருடங்களுக்கு முன்னால் . எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. நாங்கள் எல்லோரும் அரையாண்டு தேர்வுக்கு படித்தும், எழுதிக்கொண்டு இருந்தோம். பாட்டி ஐந்து நாட்களுக்கு முன் வந்து விட்டார்கள். பாட்டிக்கு 80 வயது தாண்டிவிட்டது. ஆனாலும் பழைய சுறுசுறுப்பு, உடல்பலம், வேலை செய்வதில் எந்த தொய்வும் கிடையாது. என் கடன் பணி செய்த கிடப்பதே என்பதற்கு எடுத்துக் காட்டு.

நான் பாட்டியிடம் " பாட்டி,பாட்டி அம்மா கிறிஸ்மஸ்க்கு பலகாரஙங்கள் செய்யமாட்டார்கள். கடையில் வாங்கி கொடுப்பாங்க.. நீங்க ஏதாவது புதியதாக இந்த கிறிஸ்மஸ்க்கு செய்யுங்களேன் " என்றேன். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

' சரி பாட்டி அதுக்கு வேண்டிய சாமான்கள் வாங்க ஒரு லிஸ்ட் போடு பாட்டி "

' போடி ஜெயமேரி! இந்த கிறிஸ்மஸ் என்ன? பரிட்சைக்கு படிப்பது ஒரு பக்கம். அவுங்க எல்லோருமா பலகாரங்கள் செய்வாங்க ? நீயும் நானும் செய்வோம். அவுங்க நாக்கில் எச்சி சொட்ட ரசித்துச் சாப்பிடட்டும்" அப்பா ஊரிலிருந்து வருவதற்க்குள் நாங்கள் குடில் ஜோடித்து எல்லா அலங்கர வேலைகளை முடித்து விட்டு அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி தர மும்மரமாக இருந்தோம்.

christmas crib

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு நான் கதவைத் திறந்தால் அங்கே அப்பா நின்றுகொண்டு இருந்தார். " அப்பா வந்தாச்சி அம்மா " என்று குரல் கொடுக்க, பாட்டி வந்து " வாங்க மாப்பிளே சௌக்கியமா? நாங்கள் எல்லாம் எங்கே நீங்க வராம போயிவிடுவேங்களோன்னு கவலையாக இருந்தோம். இனி என்ன கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஜேஜே தான் " என உற்சாகமாகச் சொன்னார்கள்.

உடை மாற்றிக் கோண்டு முன்அறைக்கு வந்தவர், அண்ண்ன் செய்து கொண்டிருந்த குடிலைப் பார்த்து முகம் சுளித்து நின்றார். " என்னடா இது இயேசு சிறு மாட்டுத் தொழுவில் பிறந்தார். நீ என்னன்னா பெரிய மாளிகை மாதிரி ஜோடிக்கிருக்கே! " என்றார். அப்பாவின் எண்ணம் அறிந்த அண்ணன், நேராக அம்மாவிடன் அப்பாவின் கோபத்தை சொன்னான். அம்மா விரைந்து வந்து " என்னப்பா பிள்ளைகளை நல்ல நாளுமா, கிழமையுமா அழவிடனும். முப்பது வருடமா ஜோடிச்சாசி இல்லையா விடுங்க. இப்போ அதிலேருந்து ' ரிடையர் " ஆகுங்க. வாங்க 'டீ" குடிக்கலாம் " என அம்மா அப்பாவை அழைத்தாள். " என்ன சத்தம் " என்று பாட்டியும் முன்அறைக்கு வந்தார்கள்.

" ஒன்னுமில்லை அம்மா. அருள் ஜோடிச்சது அவுங்களுக்கு பிடிக்கல. அதனாலே கோபம். பிரிக்கச் சொல்றங்க. பிள்ளைகள் அதைக் கேட்டு ஏமாந்து போய் அழுறாங்க. அவ்வளவு தான் " நிலமையை அம்மா, பாட்டிக்கு விளக்கினர்.

' ஆமாம் நான் என்னிக்காவது ஒரு கிறிஸ்மஸ்க்கு சந்தோஷமா வரமுடியதா? கொண்டாட முடியுதா? நான் சொன்னாயாரும் கேட்க மாட்டங்க. என் சொல்லுக்கு மதிப்பில்லையினா நான் எதற்கு அங்கே இருக்கனும் " என்ற சொல்லிக் கொண்டே அறைக்குள் போனார். சிறிது சேரத்தில் உடை மாற்றிக் காண்டு தனது பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். ' நீங்கள் எல்லாம் எக்கேடு கெட்டுப் போங்கள். நான் போறேறன் நிம்மதியா. நீங்க உங்க பிரியம் போல எல்லாம் செய்யுங்கள் " எனக் கூறிக்கொண்டே கோபமா க விருட்டென சென்று விட்டார்.

" என்னடி ஜெயமேரி உன் மாப்பிள்ளைக்கு என்ன? இப்படி கோபப்பட்டு நல்ல நாளும் கிழமையுமா பிள்ளைகளோடு சந்தோஷமா கிறிஸ்மஸ் கொண்டாடம போயிடடாரு " என்றாள் பாட்டி.

" அம்மா! என்ன செய்யட்டும். அவா முன்கோபி. முப்பதுவருடமா அவரோடு சமாளிக்கிறேன். இன்னும் பிள்ளைகளிடம் அன்பு, பாசம் கிடையாது. விட்டுக் கொடுக்கமாட்டார். என்ன செய்ய எல்லாம் தலையெழுத்து " என புலம்பினாள் அம்மா. நான் மாதா படத்துக்கு முன் சென்று " டடி எப்படியாவது மனமாறி கிறிஸ்மஸ் கொண்டாட வந்திடனும் தாயே " என வேண்டிக்கொண்டேன். அம்மாவும் அழுது கொண்டே சமையலறைக்கு சென்றாள். எல்லோரும் "டீ" குடித்து விட்டு என்ன செய்வது எனத் தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.

பாட்டி வந்து " நீங்க ஜோடிங்க கண்ணுங்களா. அப்பா ஒரு முன்கோபி. எல்லாம் சரியாயிடும். எல்லோரும் குழந்தை இயேசுவிடம் மன்றாடுவோம். அவர் அப்பாவுக்கு நல்லபுத்தியைக் கொடுப்பார். சொன்னால் பாரேன். அவர் நிச்சயம் திரும்பி வருவார் " என்றார்கள்.

மணி 11 ஆயிற்று. நாங்கள் புத்தாடை அணிந்து இரவு திருப்பலிக்கு செல்ல தயாராகிக் கொண்டு இருந்தோம். " ஜெயமேரி, ஜெயமேரி " அப்பாவின் குரல் கேட்டது நான் சென்று கதவைத் திறந்தேன். அப்பா உள்ளே நுழைந்தார்கள். அண்ணன் ஜோடித்திருந்த குடிலை ஒரு நோட்டம் விட்டார்கள். "நன்றாகத் தான் இருக்கிறது. புது ஐடியா தான். எல்லோரும் பூசைக்கு ரெடியா? நானும் இதோ வர்றேன் " என்ற சொல்லிக் கொண்டு, தான் மறந்து விட்டுப் போக தன் பையை பெஞ்சிலிருந்து எடுத்துக் கொண்டு உடை மாற்ற அறைக்குள் சென்றார்.

" என்னடி ஜெயமேரி எல்லாம் ஆச்சரியமாக இருக்குதே, என்னாச்சி அவருக்கு? " பாட்டி திகைப்பிலிருந்தார்கள். எல்லோரும் திருப்பலிக்கு சென்றோம். கோவிலில் இடம் பிடிக்க மக்கள் எல்லோரும் முன்னதாகவே வந்து விட்டார்கள். ஆலயம் நிரம்பி வழிந்தது. வழக்கம் போல் பங்கு குருவுடன் 3 குருக்களும் சேர்ந்து திருப்பலியை ஆரம்பித்தார்கள். பிரசங்கம் செய்யும் நேரம் வந்தது. விருந்தினராக வந்திருந்த குரு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். ' கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! இன்று நாம் கர்த்தர் பிறப்பு விழாவை கொண்டாடுகிறோம். நான் உங்களுக்கு ஒரு கற்பனை கதையை சொல்ல விரும்புகிறேன்."

xmastree

மரியாள் வளனாரிடம் வந்து 'ஐயா நான் ஒரு கனவு கண்டேன். மக்கள் எல்லோரும் என் மகன் பிறந்தநாள் விழாவிற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். சிலர் கடையில் புதிய இனிப்பு, காரம் போன்ற பலகாரங்கள் வாங்குகிறார்கள். சிலர் 'கிறிஸ்மஸ் கேக்" என்ற சிறப்பு கேக் வாங்குகிறார்கள் எல்லோரும் தங்களுக்கும், தங்கள் வீட்டிலுள்ள மனைவி, குழ்ந்தைகளுக்கு புத்தாடை வாங்குகிறார்கள். தங்கள் பிள்ளைக்கு திகைப்பும், ஆச்சரியத்தை கொடுக்க வேண்டுமெனன கிறிஸ்மஸ் மரத்தில் கால் உறையில் கிறிஸ்மஸ் தாத்தா கொடுத்தாக கற்பனை செய்து கொள்ளும்படி பரிசுபொருட்களை கட்டி வைக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? என் இயேசுவின் பிறந்த நாள் கொண்டாடத்தானே? ஆனால் யாரும் எனது மகன் பிறந்த நாளைக்கு புது உடையோ, பரிசோ கொண்டு வரவில்லையே? எனக்கு அழுகையாக வந்தது. யார் பிறந்த நாளைக்கு செய்ய வேண்டுமோ அவரை மறந்துவிட்டு தங்களுக்குத் தானே எல்லாம் வாங்கிக் கொள்ளுகிறார்கள் என எண்ணி நான் துயர் கொள்ளும் போது நான் விழித்தக் கொண்டேன். நல்லவேளை இது கனவாக இருந்து விட்டது." குருவானவர் இதைச் சொல்லிவிட்டு நீங்கள் இயேசுவுக்காக என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள் என வீட்டிற்கு சென்று அது பற்றி சிந்தினை செய்து முடிவு எடுங்கள் என்றார்.

திருப்பலி முடிந்து நாங்கள் வீடு திரும்பும் பொழுது மணி 2 இருக்கும். எல்லோரும் யோசனையில் ஆழ்ந்து விட்டோம் குழந்தை இயேசுவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம். சின்னத் தம்பி "நாம் செய்துள்ள பலகாரங்களை குடிலிலுள்ள குழந்தைக்கு கொண்டு கொடுக்கலாமா? " எனக் கேட்டான். அப்போது பாட்டி சொன்னார்கள், "பசியால் வந்தவனுக்கு நீங்கள் கொடுப்பது எனக்கு கொடுப்பதாகும். அதனாலே நாம் செய்த பலகாரங்களை எல்லாவற்றையும் இன்று தர்மம் கேட்டு வரும் பிச்சைக்காரர்களுக்கு பொட்டலம் போட்டு கொடுப்போம். பிறகு மீதி இருப்பதை நாம் பகிர்ந்து கொள்வோம்."

"நல்ல யோசனை. அவ்வாறே செய்வோம்" என அப்பா சொன்னார்கள். "சமாதானம் உண்டாகட்டும் என வானதூதர்கள் பாடியது எனக்கு ஞாபகம் வந்தது. நான் மணியாச்சி சென்றபொழுது எனது பையை எடுத்து வர மறந்ததை கண்டுபிடித்தேன். பையில் என்னுடைய ரூம் சாவிகள், பணம் இருந்ததால் என்னால் எங்கே தங்க முடியும்? உடனே எனக்கு தென்பட்டது சமாதான நாளில் நாம் சண்டைப் போட்டுக் கொண்டு வந்தது பெரிய தவறு என்று. இனிவரும் காலங்களில் கிறிஸ்மஸ் பண்டிகையை குழந்தைகளின் விருப்படி நடத்த வேண்டும் என எண்ணம் தோன்றியது. அதனால் திருநெல்வேலி வரும் வண்டி புறப்பட இதில் திரும்பி வந்து விட்டேன். நல்லவேளை சரியான நேரத்திற்கு இங்கு வரமுடிந்தது." என தனது உள்ளத்தைத் திறந்து படி பேசினார்கள். பாட்டியின் முன்னால் தனது கோபத்தை காட்ட முடியவில்லை. சரணகதி அடைந்தார்.

peace on earth

"நல்லது மாப்பிளே. "உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமையும், உலகில் நல்மனதவருக்கு சமாதானமும் உண்டாகுக" என்று நாம் பாடி கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் " எனச் சொல்லி முடித்தார்கள் பாட்டி. நாங்கள் எல்லோரும் பலகாரங்களை பொட்டலங்கள் போட்டு கேக் வைத்து குடில் முன்னால் நின்று கொண்டு குழந்தை இயேசுவுக்கு பிறந்த நாள் புகழ் பாடினோம்.

எங்கள் வீட்டில் சமாதானம் நிலவியதற்காக நான் மாதாவிடம் சென்று நன்றி கூறினேன். இந்த ஆண்டு கிறிஸ்மஸ் எங்களுக்கு கொடுத்தது " இரட்டிப்பு மகிழ்ச்சி!"

AJS. ராஜன்

icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com