மாண்பு மிகுதிட்டமே இயேசு பிறப்பு!

மாறாத துயரில் மடிந்து கொண்டிருந்த மக்களை மீட்டிட இறைவன் வகுத்திட்ட மாண்பு மிகுதிட்டமே இயேசு பிறப்பு. உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாத்தானிடம் விட்ட சவாலின் வெற்றியின் திறவுகோல் கிறிஸ்து பிறப்பு.

நமக்காக மனித உருவில் இறைவன். நாம் தேடிச்செல்ல வேண்டியது தெய்வத்தை அல்லவா!. ஆனால் அன்பு தெய்வமே நம்மை தேடி வந்த விந்தை நிகழ்வுதான் கிறிஸ்து பிறப்பு.

'தேடும் அன்பு தெய்வம் - எனைத்
தேடி வந்த நேரம்
கோடி நன்மைகள் கூடும்."   

shepherdஆம்...தேடி வரும் தெய்வத்தால் நம்மை தேடி வரக்கூடிய கோடான கோடி நன்மைகளை இழந்து விடுகின்றோம். அனைத்தையும் படைத்த இறைவனின் பார்வையில் நிறைவு இருந்தது. இன்று இருந்து நாளை மடியும் நம்மிடையே நிறைவற்ற உள்ளம் இருக்கின்றது. நிறைவான இறைவன் நம்மிடைய குறைகளை காண்பதில்லை. தன் மகனை மனநிறைவோடு இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார். இருளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த விடிவெள்ளி தான் கிறிஸ்மது இயேசு. கன்னி மரியிடம் மனுவுரு எடுத்தவர் மானிடராக நம்மை உறவாக ஏற்றுக்கொண்டார்.

மந்தையான நம்மை வழிநடத்திடும் நல்லாயனின் பிறப்பு கிறிஸ்து பிறப்பு. பழைய காலங்களை புரட்டி பாருங்கள்... கிறிஸ்துமஸ் என்றாலே ஆனந்தம் என்று மகிழ்ந்த காலங்கள் மறந்துப்போய்விடடது. வகை வகையான உணவு பொருட்களை செய்து உறவோடும் நட்போடும் பகிர்ந்துண்ட உன்னத நிமிடங்கள் இன்று காற்றில் தான் கரைந்து போய்விட்டன.

இருப்பவன் இரும்பு இதயத்தை வார்த்து மேலும் சேர்த்துக் கொண்டு செல்லும் அவலம் ஒரு பக்கம். பசி பிணி கொலை கொள்ளை லஞ்சம் அட்டூழியம் என்று ஆட்விக்கும் அரக்கனின் பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மறுபக்கம்.

பந்தம் பாசம் என்னும் பசுமையான உறவுகள் சிதைக்கப்படும் போது பாலைவனமாய் நம் வாழ்வு மாறிடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே. பணம் பதவி ஆடம்பரம் அகங்காரம் எனும் மாயைகள் மலிந்து காணப்படுகின்றன. மனித நேயம் அன்பு நேசம் பாசம் மனித மாண்புகளோ தூக்கிலிடப் படுகின்றன.

கலாச்சரம் பண்பாடு பாரம்பரியம் எனும் ஏணிகள் இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்லும் என்பதை உணர்வோம். இந்த கிறிஸ்து பிறப்பு நமக்கு கலாச்சரத்தை கற்று தரட்டும். 'அம்மா இன்னும் நேரம் வரவில்லையே" என்ற போதிலும் தாய் சொல்லை மதித்த பண்பாட்டை கற்று தரட்டும். நம்முடைய பாரம்பரியம் சொல்லித்தரும் விசுவாச கேடயத்தை இறுகப் பற்றிக் கொண்டு இவ்வுலக எதிரிகளோடு போர் புரிந்து அமைதி கொண்ட உள்ளமாக கிறிஸ்துவை வரவேற்றிடுவோம்.

xm
'ஆடையில் அல்ல - நகை
ஆபரணத்தில் அல்ல
ஆலயத்திலும் அல்ல
ஆண்டவரின் பிறப்பு
அவனவன் உள்ளத்திலேயே" 

என்ற வரியின் பொருள் உணர்ந்து மிகுந்த உற்சாகத்தோடு கிறிஸ்து பிறப்பை வரவேற்றிடுவோம்.

திருமதி ரீனாரவி கன்னியாகுமரி

icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com