கிறிஸ்மஸ் என்றால் என்ன? என்று சிலரிடம் கேள்வி எழுப்பியபொழுது
கிடைத்த விடைகள் சில. சிறுவன் பதில்: எனக்கு அது பண்டிகை நாள் வாலிபன் பதில்:பார்ட்டியும், உல்லாசமான நாள் பெரியவர் பதில்: இயேசு பாலன் பிறந்த நாள் ஆம் உங்களுக்கு அது எந்த நாள்?
விவிலியத்தில் மத்:1:21-22 "கன்னி கருத்துரித்து மகனை பெறுவார். அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்க மனுமகன் மனுவாக பிறப்பு எடுத்த நன்னாள். உங்களுக்கும் எனக்கும் மீட்பை கொடுத்த மீட்பரின் பிறந்த நாள். இதையே யோவான் 3:16 வசனத்தில் "தன் ஒரேமகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு தன் மகனையே அளிக்கும் கடவுள் உலகின் மேல் அன்பு கொண்ட நாள் - அது தான் கிறிஸ்மஸ்.
இந்த அளவுக்கு நம் மீது அன்பு கொண்டுள்ள ஆண்டவரிடம் நாம் எந்த அளவுக்கு அன்பு செலுத்தி வருகின்றோம்.- சிந்திப்போம்.
1. "கிறிஸ்தும் உங்களுக்காக துன்புற்று, ஒரு முன்மாதிரியை வைத்து சென்றுள்ளார். எனவே நீங்கள் அவரின் அடிச்சுவடிகளை பின்பற்றுங்கள்" என்று 1பேதுரு 2:21இல் புனித பேதுரு கூறுகின்றார். ஆகவே நாம் அவருடைய/அவர் நமக்கு வாழ்ந்து காட்டிய வழியில் செல்ல கடமைப்பட்டுள்ளோம்.
2. மேலும் புனித பேதுரு "நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவருக்கும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்." 1பேதுரு 4:10-ல் கூறுகின்றார்.
ஆம் நாம் அனைவரும் ஆண்டவரின் அருட்கொடைகளை பல விதத்தில் பெற்றுள்ளோம். அதை ஒரு தாலந்து பணியாளன் செய்தது போல பூமியில் மறைத்து வைக்கமால் மற்றவருக்கு பயன் அளிக்கச் செய்வோம். அப்பொழுது தான் அவரின் மகிழ்வில் பங்கு கொள்ள முடியும்.
லூக்கா 21:1-3-ல் ஏழை விதவை காணிக்கைப் பெட்டியில் போட்ட இரண்டு காசு மற்ற எல்லாரையும் விட பெரிதாக ஆண்டவர் கூறுகிறார். ஆம் நாம் செய்கின்ற சிறிய காணிக்கை/ முயற்சி/ செயல் அனைத்தையும் காண்கின்ற ஆண்டவர் நமக்கு நல்ல சாட்சி அளிப்பார். அதற்கு பரிசும் அளிப்பார்.
இந்த ஏழை சிறியவருக்கு கொடுத்த ஒரு டம்ளர் தண்ணீருக்கும் - நமக்கு கடவுள் பதிலளிப்பார்.
3. இன்னும் புனித பவுல் 2 கொரி.5:15 வசனத்தில் நமக்கு ஒரு புதிய உண்மையை அறிவிக்கின்றார். இயேசுவின் சிலுவை மரணம் ஏன் ஏன்றால் - நாம் சொல்லும் பதில் நம் பாவங்களுக்கு என்று. ஆனால் இந்த கேள்விக்கு மற்றொரு பதிலும் உண்டு. இதை நாம் அறிவதில்லை.
இதோ அந்த வார்த்தை: (1.) வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல்.. (2.) தங்களுக்காக இறந்து உயிர்த்தெழுற்தவருக்காக வாழவேண்டும். (3.) என்பதற்காகவே அவர் அனைவருக்காக இறந்தார்.
இந்த உண்மையை இன்று உணர்ந்து கொள்வோம். இனி நான், என் வாழ்க்கை, என் குடும்பம், என் தொழில், என் உறவினர், என் சொத்து என்ற வாழாமல் மற்றவர்களுக்காக நாம் வாழக் கற்றுக் கொள்வோம். மற்றவர்களுக்காக அன்புக் கரம் நீட்டுவோம். அவர்கள் வாழ்க்கையில் உணர்த்துவோம்.
ஆம், இன்று நாம் பார்த்த வார்த்தைகளின் படி
(1) நாம் அவரின் அடிச்சுவடிகளின் படி நடப்போம்.
(2) அவர் கொடுத்த அருட்கொடைகளை மற்றவருக்காக பயன் படுத்துவோம்.
(3) எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆண்டவர் மரித்து உயிர்த்தது, நாம் பாவங்களுக்காக மட்டுமல்ல; நாமும் மற்றவர்களுக்காக வாழவேண்டும், நமக்காக மட்டும் அல்ல என்பதை உணர்ந்து வாழ்ந்தால் - அது தான் நம் வாழ்க்கையில் அர்த்தமுள்ள கிறிஸ்மஸ். மற்றவர்களை மகிழ்விக்கும் கிறிஸ்மஸ். ஆண்டவரை மகிமைப்படுத்தும் உண்மையான கிறிஸ்மஸ் விழா ஆகும்.
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com