கிறிஸ்து பிறப்பினை நினைவு கூர்ந்திடும் இனிய மாதம். இந்த டிசம்பர் மாதம். கிறிஸ்து பிறப்பினை வரவேற்க முன்பெல்லாம் நாம் உடலால், உள்ளத்தால், இல்லத்தால் ஆயத்தமாகி இருப்போம். மாலையில் கிறிஸ்து பாலனை இல்லத்தில் பிறந்திட வைத்திட குடில் அலங்கரிப்பின் மூலம் குதுகுலம் அடைந்திடுவோம். ஆனால் இன்றோ காலை முதல் மாலை வரை தொலைக்காட்சிப் பெட்டியில் நம்மை தொலைத்து கொண்டு நிற்கின்றோம்.
இனிப்பு வகைகளை வகைääவகையாக செய்து உற்றார்ää உறவினர்களுடன் பகிர்ந்து உண்டீடும் பக்குவமான மனநிலைகள் இன்று நம்மிலே மறைந்து மாயமாக போய் விட்டது. பிறந்த பாலனுக்கு ஆராதனை செய்துää ஜெபம் செய்து மகிழ்வினை வெளிப்படுத்திய காலங்கள் இன்று மலையேறிப் போய்விட்டது. இன்றைய கிறிஸ்துமஸ் பெருவிழா அர்ப்பணத்தின் மகிழ்வினால் உருவாக்கப்படவில்லை. மாறாக கடமைகளுக்கான பாரம்பரிய சடங்காகவே கருதப்படுகிறது.
' பெத்தலேகமில் பிறந்தவரை போற்றி துதியும் மனமே.."
என்ற பாடல் வரிகள் நமது செவியோடு நின்று விட்டன. அவை உள்ளத்தை ஊடுறவ நாம் விடுவதில்லை. சர்வத்தையும் படைத்த சர்வ வல்லவர் தாய் மடியில் சிசுவாக அவதரித்து இவ்வுலகினை மீண்டும் சிங்கார வனமாக்கிட வேண்டும் என்ற குறிக்கோளோடு பிறப்பெடுத்த நன்னாள்.
'விண்ணவர்கள் அல்லேலூயா கீதம் பாடிட
மண்ணவர்கள் அல்லேலூயா கீதம் முழுங்கிட
ஆர்ப்பரிக்கும் கடலையும் காற்றையும் அடக்கியவர்
அழகான மகவாக இங்கு அவதரித்த நன்னாள்
சாத்தானின் கொடுக்குகள் நொறுக்கப்பட்ட
சர்வவல்லவரின் ஒளி மண்ணை நிறைத்திட்ட நன்னாள்"
ஆம்! இது மகிழ்வின் காலம் அற்ப மானிடர் நமக்காக விண்ணக வேந்தன் தன் மகனை மானுட இயல்போடு மண்ணில் மலரவைத்த மகத்தான தினம். கிறிஸ்துவின் பிறப்பினை இனியாவது நாம் இனிமையுடன் வரவேற்போம். பகிர்வின் மூலம் பல்லுயிரியையும் நேசித்திடுவோம். உள்ளத்தை பகிர்ந்து இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வின் விதையினை நட்டிடுவோம். உண்மை அன்போடு ஒருவரை ஒருவர் நேசித்திடுவோம். பிறர் குறை காணாத நல்லமனநிலையை பெற்றிடுவோம். தொலைக்காட்சிக்கு அடிமையாகி நம்முடைய வாழ்வினை தொலைந்து போகாதபடி காத்து நிற்போம். அழகான ஆடைகளை விலை மதிப்போடு வாங்கி குவிப்பதனை தவிர்த்து உணவும், உடையும், உறைவிடமும் இல்லாத ஏழைகளின் நலன் காத்திடுவோம். ஒன்றுபட்ட பாலனை ஆராதிப்போம். பகுதறிவோடு பரமனின் பாதம் பணிந்து நிற்போம். வரும் பாலகனின் பிறப்பு பக்தி முயற்சியோடு உண்மை அன்போடு கரங்களில் ஏந்திட உள்ளத்து தூய்மையோடு வாழ்ந்திடுவோம். பாவவாழ்வினை களைந்திடுவோம். இறைவனை வரவேற்க இன்றே நாம் ஆயத்தமாகிடுவோம்
நன்றி அருள்வாழ்வு மலர்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com