விண்ணில் இருந்து மண்ணகம் வந்து மனுமகன் ஆனவர் இயேசு!-நம் மன்னவன் ஆனவர் இயேசு! அன்னையும் ஆகி தந்தையும் ஆகி ஆறுதலானவர் இயேசு!-நம் ஆதரவானவர் இயேசு! தொழுவில் பிறந்து சிலுவை சுமந்து ஆலயம் ஆனவர் இயேசு!-நம் ஆண்டவர் ஆனவர் இயேசு! கருவில் தொடங்கும் வாழ்வைத் தொடர்ந்து மேய்ப்பரும் ஆனவர் இயேசு!- நம் மீட்பரும் ஆனவர் இயேசு! தீபமும் ஆகி பாதையும் ஆகி தோழனும் ஆனவர் இயேசு!-நம் தேவனும் ஆனவர் இயேசு! வார்த்தையும் ஆகி வாழ்க்கையும் ஆகி வெற்றியும் ஆனவர் இயேசு!-நம் வேதமும் ஆனவர் இயேசு! நன்றி :மலர்க மனிதம் டிசம்பர் 2004
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com