header

அன்பின் விலை - சிறுகதை

திரு.AJS ராஜன்
merry christmas

santa to homeஇயேசு பிறப்புத் தின இரவு 'அருளக"த்தில் மகிழ்ச்சிப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. தனசேகரின் மூன்று மகள்களும் தங்கள் குழந்தையுடன் கிறிஸ்துப் பிறப்பு விழாவைக் கொண்டாட விடுமுறைக்கு வந்திருந்தார்கள். தனசேகரன் 'ரியல் எஸ்டேட்டில் முன்னோடி. செல்வம் செழித்துக் கொண்டிருந்தது. அவருக்கு ஒரே மகன் அருள் செல்வக்குமார். அவனது பெயரில் 'அருளகம்" என்ற மாளிகையைக் கட்டியுள்ளார். இயேசு பிறப்பு விழாவிற்குத் தவறாமல் அவருடைய மகள், பேரப்பிள்ளைகள் எல்லோரும் வந்து சிறப்பிப்பார்கள்..

மகள்கள் எல்லோரும் தங்களது தாயருடன் இணைந்து மும்மரமாகப் பலகாரம் செய்வதில் ஈடுபட்டு இருந்தார்கள். பேரப்பிள்ளைகள் கிறிஸ்மஸ் மரம், குடில் அலங்கரிப்பதில் ஆர்வமுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.grandpapa தனசேகரன் அவர்களுக்கு யோசனைக் கூறுவதிலும், உதவிச் செய்வதிலும் முன் நின்றார். தனசேகரனுக்கு முதல் மூன்றும் பெண்கள். பலவருடங்களுக்குப் பின் செல்வகுமார் பிறந்தான். அதனால் அவனிடம் மிகவும் செலுத்தினார். செல்லமாக வளர்ந்து வந்தார். பட்டங்கள் வாங்கித் தந்தையின் தொழிலில் ஈடுபாடு கொண்டு முன்னேறி வருகிறான். தனசேகரன் செல்வந்தராக இருந்த போதிலும், எளிமையான வாழ்க்கையும், இரக்ககுணமும் உள்ளவர். தனது இளம் வயதில் ஏழையாக இருந்ததை மறக்கவில்லை.

இரவு மணி பதினென்று ஆகிவிட்டது. நாம் சற்று நமது கவனத்தை ஒரு படுக்கை அறைக்குச் செலுத்துவோம். அங்கே கமலா பிரமைபிடித்தவள் போல் உட்கார்ந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அது முதல் கிறிஸ்துமஸ். கணவன் செல்வகுமார் வாங்கி வந்த ரூபாய் 20000.00 மதிப்புள்ள பட்டுப்புடவை அவள் படுக்கையில் அட்டைப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது. அதையே நோக்கி வண்ணம் உட்கார்ந்துக் கண்களில் நீர் ததும்பத் தனது கணவன் செல்வராஜ் எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள். 'ரியல் எஸ்டேட்" வேலையாக மும்பைச் சென்றவன் கிறிஸ்துமஸ்க்குள் வந்து விடுவதாகச் சொன்னான். கமலா தாயார் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் அவளால் 'முதல் கிறிஸ்துமஸ்"க்குச் செலவு செய்ய முடியாது என்ற காரணத்தினால் தனசேகரன் தனது தவப்புதல்வனின் 'முதல் கிறிஸ்துமஸ்"யைத் தனது வீட்டில் வைத்துக் கொண்டார்.

மொபைலியில் மணி ஒலித்தது. கமலா அதை ஆவலுடன் அணுகி 'ஹலோ" என்றாள்.

'கமலா கண்ணு நான் இங்குத் தர்மச் சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன். இன்று 'மீட்டிங்" முடிந்ததும் நண்பர்கள் 'கிறிஸ்துமஸ் பார்ட்டி"யை மும்பையில் வைத்துக்கொள்ளக் கட்டாயபடுத்தியதால் இன்று இரவு இங்குத் தங்கிறேன். செல்லமே! வருத்தப்படாதே. நாளை எப்படியும் வந்த விடுவேன். நீ அக்கா, பிள்ளைகளுடன் சேர்ந்து சந்தோஷமாகக் கொண்டாடு. ஃபஸ்ட் சென்னை ஃபிளைட்டில் வந்துவிடுவேன். விஷ்யூ எ மெரி கிறிஸ்மஸ். வைக்கட்டுமா? ஹலோ, ஹலோ என்ன மூச்சேயே காணும். நான் வாங்கிய பட்டுப்புடவையைக் கட்ட மறந்து விடாதோ! என்ன!

'உம்" என்ற கமலா கண்கள் கலங்கப் படுக்கையில் மொபைலை வீசினாய். அழுகைப் பீறிட்டுக் கொண்டு வந்தது. தன் முகத்தை இருகைகளில் மறைத்துக் கொண்டு வீம்மினாள்.

'கமலா! என்ன செய்து கொண்டுடிருக்கே? செல்வம் எப்போ வருவான்? என்ன? ஏதாவது நீயுஸ் உண்டா? எனக் கேட்டுக் கொண்டே அறைக்கதவைத் தட்டினார். கண்களைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்த கமலா தனது மாமனாரிடம் செய்தியைச் சொன்னாள்.

' எனக்குத் தெரியும். அப்பவே நான் போகாதேன்னு சொன்னே. கிறிஸ்மஸ் முடிந்துப் போகலாம் என்றேன். கேட்டானா? சரிம்மா! மணி 11 ஆகிறது. குளிச்சிட்டு டிரஸ் பண்ணு. எல்லோரும் சீக்கிரம் போணும்., இல்லோன்னா உட்கார இடம் கிடைக்காது."

'சரி மாமா" என்ற அரைமனதுடன் சொல்லிக் கொண்டே, பாத்ரூமை நோக்கிச் சென்றாள். ஆனால் அவள் மனம் கடந்த ஆண்டுக் 'கிறிஸ்துமஸ் விழா"வை நினைவுக்கு கொண்டு வந்து அவளை வாட்டியது.

merry christmas

நிர்மலா ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியை. அவளுக்கு மூன்று மகள்கள்- கமலா,அமலா,விமலா. அவள் தனது கணவவை விமலா மூன்று வயதாக இருக்கும் பொழுது ஒரு விபத்தில் இழந்தாள். தனது சொற்பச் சம்பளத்தில், யாருடைய உதவியுமின்றி, மூன்ற மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்து, நல்ல வேலைக்குச் சென்றபின் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று உழைத்துக் கொண்டிருந்தாள். கமலா நல்ல நிறம், அழகான தேற்றம் கொண்டவள். படிப்பிலும் சிறத்து விளங்கினாள். கடந்த ஆண்டுக் கிறிஸ்துமஸ்க்கு நிர்மலா தனது மகளுக்கு நூல் புடவைகள் வாங்கி வந்தாள்.

அதைக் கண்ணுற்றக் கமலா, 'என்னம்மா? காலேஜ் படிக்கிற எனக்கு ஒரு நல்ல பட்டுப்புடவை வாங்கித் தரக்கூடாதா? வெறும் நூல் புடவை? எல்லாம் என் தலைவிதி.. என் ஃபிரன்ஸ் பார்த்தாச் சிரிப்பாங்க. நீயே கட்டிக் கொள்" என்று சினந்து கொண்டு கட்டிலில் சாய்ந்துவிட்டாள்.

நிர்மலா கண்கலங்கி நின்றாள். உடனே தங்கை விமலா, 'என்னக்கா? அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டுப் பாசத்துடன் உனக்கு வாங்கி வந்தா, நீ என்னமோ படடுப் புடவை வேணும்னு அடம் பிடிக்கிறே, அன்பும், பாசமும் தான் முக்கியம்" கிறிஸ்துமஸ்ன்னாக் இயேசு சாதாரண மாட்டுக் கொட்டிலில் பிறந்தார். இறைவன் மனிதர்கள் மேல் கொண்ட அன்பாலும், பாசத்தாலும் எளிய மானிடனாகப் பிறந்து இயேசு நம்மை மீட்டார் எனத் தெரியாதா? அம்மா அன்புடன் வாங்கி வந்த நூல் புடவைப் பட்டு ஜரிகைப் புடவையை விட மேலானது. இப்பொ உனக்குத் தெரியாது. வா! கட்டிக்கோ. மனநிறைவுடன் சந்தோஷமா அமைதியின் தூதனைக் கண்டு, அடுத்த ஆண்டு உனக்காகப் பட்;டுப் புடவைக் கிடைக்க வேண்டுவோம். வா! என ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தாள். கமலா அதை வேண்டா வெறுப்புடன் ஏற்றுக் கொள்ள, பின்னர் எல்லோரும் ஆலயம் சென்றனர்.

மே மாதம் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைத் தேடும் முயற்சியில் கமலா இறங்கினாள். பி.பி.ஏ படித்த அவள் தனசேகரன் நடத்தும் கம்பெனியில் வலைக்காக நேர் முகத்தேர்வுக்குச் சென்றாள். தனசேகரன் அவளது புத்திக் கூர்மையையும், அழகான தோற்றத்தையும் கண்டு, தனது மகனுக்கு ஏற்ற மனைவி எனத் தீர்மானித்தார். மறுமாதமே இருவருக்கும் திருமணம் நடந்தது. தனசேகரன் எளிமையான குடும்பத்திலிருந்து உழைத்த முன்னேறிய வந்ததால் கமலாவைத் தேர்வுச் செய்தது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார்.

merry christmas

கமலா வாழ்க்கையும் நன்றாக அமைந்தது. ஆனால் அவளுக்கு ஒரு குறை. கணவன் வேலை, வேலை என்று தினமும் இரவு காலம் தாழ்த்தி வருவதும் வேலைப் பழுவினாலும் கமலாவிடம் சிறிது நேரம் கூடச் செலவழிக்காதது அவளுக்கு மனவருத்தமாக இருந்தது. எல்லாம் இருந்தும் தனக்கு அன்புக் காட்டிப் பாசத்துடன் சில மணிச் நேரம் தனது கணவனால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவளுக்கு இருந்துகொண்டே இருந்தது.

merry christmas

'தனது வீட்டில் அம்மாவின் அன்பு, பாசம் இருந்தது. ஆனால் இங்குப் பணம் பட்டுப் புடவை இருக்கிறது. ஆனால் அன்பும், பாசமும் கைக்கு எட்டாத பொருளாய் இருக்கிறது." கமலாவுக்கு இப்பொழுதுத் தான் அம்மாவின் பாசத்தையும் அன்பையும் உணர முடிந்தது. கமலா ஒரு தீர்மானத்துடன் புறப்படத் தயாரானாள்.

'அம்மாவின் பாசத்தை எண்ணிக் கொண்டு, அம்மாவுக்கு மனச் சாந்தி அடைய வேண்டி, அந்தப் பட்டுப்புடவையை அம்மா கொடுத்ததாக எண்ணி, அதை உடுத்திக் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு அம்மாவின் எண்ணங்களையும் நினைவுகளையும் தனது மனதில் ஏந்திக் கொண்டாடுவோம்" என்ற தீர்மானத்துடன் ஆலயம் சென்று தொழத் தயாரானாள்.

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com