header

எத்தனையோ விழாக்கள்!

அருட்தந்தை எட்வர்டு செல்வராஜ்
line

ஒரு மருத்துவனையில், சிகிச்சைக்காக எல்லோரும், வெளியில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து, மருத்துவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே 39பேர் காத்திருக்க 40வது நபர் வந்தார். அங்கிருந்த நர்ஸ் அவரையும் டோக்கன் கொடுத்து அமரசச் செய்தார். 40வது நபர் 39வது நபரைப் பார்த்து 'நீ எதற்காக இங்கு அமர்ந்திருக்கின்றாய்?" எனக் கேட்டார். அதற்கு அவர்,' நான் ஒரு போஸ்ட்மேன். கடிதம் கொடுக்க வந்தேன். ஆனால் என்னை இங்கு உட்காரச் செய்து விட்டார்கள். எதுவுமே கேட்கவில்லை" என்றார்.

பிறகு இந்தப் போஸ்ட்மேன் 40வது நபரை நோக்கி, 'அதுசரி, நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?" என்று வினவ, அதற்கு அவர் 'நான் தான் இந்த மருத்துவமனை டாக்டர். என்னையும் நோயாளி என்று நினைத்து இங்கே உட்கார வைத்துவிட்டார்கள்" என்று மனம் நொந்துப் பதில் சொன்னார்.

யார் டாக்டர்? யார் நோயாளி? என்று அடையாளம் காணமுடியவில்லை. இது போலவே அடையாளம் காணாத, அர்த்தம் இழந்தப் பல விழாக்கள்! இவற்றில், நாம் விரைவில் கொண்டப்படுவதை நாம் அறிவோம். எதற்கு இந்த விழா? ஏன் இதைக் கொண்டாடுகிறோம்? என்கின்ற தெளிவே இல்லாமல் எத்தனையோ விழாக்கள்!

merrychristmas
இதை நாம் எப்படிக் கொண்டாடப் போகிறோம்?
வழக்கமான, அர்த்தமற்ற ஆடம்பரங்களுடன் மட்டுமா?,
வாங்கி வைத்திருக்கின்ற புதிய துணிகளுடன் மட்டுமா?

அல்லது

நாம் கட்டிக் காத்து வருகின்ற...
-மொழி, சாதிய அமைப்புகள்
-அர்த்தமற்ற சடங்குச் சம்பிரதாயங்கள்
-சமத்துவ, சகோதரத்துவத்துக்கு எதிரான நிலைப்பாடுகள்
-ஏழை, பணக்காரப் பாகுபாடுகள்

அவற்றுடன் இணைந்தா?

நம்மோடு வாழ்கின்ற இந்தக் குட்டிப் பிசாசுகளை நாம் களையாவிட்டால், நம்மால் அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடமுடியாது. ஆகவே இவற்றைக் களைந்து, கிறிஸ்துமஸ்- இதன் முழுபொருளை உணர்ந்து, இயேசுப் பிறப்பை கொண்டாட முனைவோம்.

கிறிஸ்துமஸ் என்றால்...

1. ...நமக்காகத் தம்மையே வெறுமையாக்கிய இயேசு, எளிமைக் கோலம் பூண்ட நிகழ்வைத் தியானிப்பது - வாழ முற்படுவது. (பிலிப் 2:6 -11)

2. ...முப்பெரும் மாற்றங்களான:
அ. சமய மாற்றம் (செருக்குற்றோர் சிதறடிக்கப்படுவர்: ஆனால் எளியோர் உயர்த்தப்படுவார்)
ஆ. சமூக மாற்றம் (வறியோர் அரியணை இழப்பர், செல்வர் வெறுங்கையோராவர்: ஆனால் பசித்தோர் நிறைவர்)
இ. குல மாற்றம் (ஆபிரகாம் குலத்தவர்களுக்கு மட்டும் மீட்பு அல்ல, எல்லோருக்கும் மீட்பு உண்டு)
இவற்றைக் கொணர்ந்த இயேசுவின் பிறப்பைத் தியானித்து வாழ்வது, கொண்டாடுவது.

3. ...யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? (மத் 2:2) என்று தேடிச் சென்ற ஞானிகளைப் போல், அவரைக் கண்டவுடன் மகிழ்ச்சி வெள்ளத்தி;ல் மூழ்கிய ஞானிகளைப் போல், அன்றாட வாழ்வில் நாள்தோறும் இயேசுவையே தேடியதால், ஏற்படும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவது.

4 ...படைப்பனைத்திலும் தலைப்பேறானவர் (கொலோ 1:15). நாம் இறைவனோடு உறவற்றவர்களாய், அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய், தீச்செயல்கள் புரிந்து வந்ததால் (கொலோ1:21) நம்மைத் தூயோராகவும், மாசற்றவராகவும் மாற்றி, மீண்டும் தம் பிள்ளைகளாக உருவாக்கிட, இப்பூமியில் காலடி எடுத்து வைத்த நாள்.

5 கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாத அளவிற்கு, நாம் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி (உரோஇ 8:37-38) உருவான உறவின் நாள்- விழா இது.

6 ...கிறிஸ்து நமது தன்மையில் பங்குக் கொள்ளல் என்பது பொருள். எனவே தொடக்க நூல் சொல்வது போன்று, கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். கடவுளின் உருவிவேயே அவர்களைப் படைத்தார்(தொ.நூல் 1:27) என்பதை மனதில் கொண்டு, நினைவில் இருத்திக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள்.

7 ...நாமனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை எடுத்துச் சொல்லும் விழா. இயேசு பிறப்பதற்கு முன் , கடவுள் எவ்வாறெல்லாம் அவரது பெற்றோரை,
உறவினரை
இடத்தை
காலத்தை
முன் குறித்துத் தயாரித்தாரோ, அதே போன்று நம் ஒவ்வொருவருடைய பிறப்பிலும் செய்தார். என்பதை நினைவுப் படுத்தும் விழா.

தாய்வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன். நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்...(எரே.1:5) இவ்வளவு உள்ளார்ந்த அர்த்தங்களை இவ்விழாத் தாங்கி வருகிறது.

எனவே இது
மகிழ்ச்சியின் விழா
துயர்துடைக்கும் விழா
அன்பின் விழா
சமத்துவத்தின் விழா
சகோதரத்துவத்தின் விழா
மீட்பின் விழா

இந்த விழாவில், நம் குழந்தைப் பாலன் விடுக்கும் அழைப்பு. பாலன் இயேசுவுடன் தொடர்புடைய அனைவருமே தங்கள் வாழ்வில் திருப்பத்தையும், மாற்றுவழியையும் கண்டனர். நான்கு நற்செய்திகளும் இந்த உண்மையை எடுத்துச் சொல்கின்றன. மரியா, யோசேப்பு, ஞானிகள். இவர்களைப் போன்று நாமும் மாறவேண்டும்.

இயேசுவைச் சந்திப்பதால்
இயேசுவைத் தொடுவதால்
இயேசுவைச் சுவைப்பதால்
இயேசுவைக் கொண்டாடுவதால்
நம்மிலும் மாற்றம் நிகழும் போது,
நாம் கொண்டாடப்போகும்
இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ்
அர்த்தமுள்ளதாக இருக்கும். 
நன்றி ஆவியின் அனல்.

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com