செபம் செய்வோமா?
mary

அருள் மிகப்பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும் - ஆமென்.  1. "என் உடல் முழுவதும் நாவாக மாறினாலும் அன்னையின் புகழைப் பாடித் தீர்க்க முடியாது" - புனித பொன்வாய் அருளப்பர்
  2. "கிறித்துவை அறிய வேண்டுமா? அன்னை மரியாளிடம் செல்லுங்கள்" - திருத்தந்தை ஆறாம் பவுல்.
இன்று பலரும் போற்றிப் புகழ்கின்ற அன்னை மரியாள் இறைவன் வரைந்த ஒவியங்களிலே மிகச்சிறந்த அழகு ஒவியம். எனவேதான் கபிரியேல் தூதர் அவரை அருள் மிகப்பெற்றவரே வாழ்க!" (லூக் 128) என வாழ்த்துகிறார். இவ்வார்த்தைகளைக் கேட்டு, எதற்காக இப்படி திடீரென்று வானதூதர் வாழ்த்துகிறார்? என்று அன்னை மனம் கலங்கி நிற்கிறார் (லூக் 129). அன்னை மரியாவின் சந்தேகம் நமக்குள்ளும் எழுவது இயல்பே.